Wednesday, April 30, 2014

30-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

30-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௧௭  (17) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 24

கோபாலய்யங்காருக்கு விவாகம்

மறுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளுனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாட்சியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாட்சியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக்- கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர்க்குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களை சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டு பிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத்தக்கது. திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு 'தர்மசங்கடம் சங்கரய்யர்' என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அனேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கட்சி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப்படுவாராம். 'நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக' என்றெண்ணி, சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது  அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, ''வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கட்சி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கட்சி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தத் கட்சிக்குத் தீர்ப்புச் சொல்வேன்?'' என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு 'தர்மஸங்கடம் சங்கரய்யர்' என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

 

இவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜன சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரை எதிலும் பட்சபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.

 

''பொய்யுடை யருவன் சொல்வன்மையினால்

மெய்போலும்மே; மெய்போலும்மே

மெய்யுடை யருவன் சொல்லமாட்டாமையால்

பொய்போலும்மே பொய்போலும்மே''.

இங்ஙனம் சொல்வலிமை மட்டுமேயன்று; ஆள் வலிமை, தோள் வலிமை, பொருள் வலிமை-எல்லாவித வலிமைகளும் நியாயத்தராசைத் தமது சார்பாக இழுத்துக் கொள்ளவல்லன.

எனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும் தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக் கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பனிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரிததார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய தந்தை பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர் இருக்கிறார்களென்றும், அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்து போய்விட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும், அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், சாமான்கள் வாங்கிக் கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுபட்டிருக்கின்றனவென்றும், வீடு வாயில் பெருலுக்குதல், பாத்திரங் கழுவுதல், துனி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி பொறுமை இன்சொல் பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்னும், அவளுக்கு மாதம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம.சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லையென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944)

·         இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

·         இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

·         பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை.

·         தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

·         அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஆசிரியர் தேர்வு: சென்னை உயர் நீதிமன்றம் புது உத்தரவு-  தி இந்து

மோடி, சோனியா தொகுதிகளில் இன்று தேர்தல்: 7-ஆம் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு -  தினமணி

89 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: தெலங்கானா சட்டமன்றத்துக்கும் தேர்தல் -  தி இந்து

வங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு? -  தி இந்து

தேர்தல் அதிகாரிகளுக்கு மிரட்டல்: தமிழக அமைச்சர் மீது வழக்கு - தினகரன்

லா லிகா கால்பந்தில் இனவெறி: நெய்மர் கடும் அதிருப்தி -  தினமணி

வீடு வாடகைக்கு   

1BHK flat available for rent/lease in Pratap Vihar,near Santhosh Medical College, Ghaziabad, just 4 kms from sector 63, Noida. Nominal rate, only for south indians. Contact Dr Ram Shanmugam, Safdarjang Hospital. Mobile: 9716934196,9868436946 in fb as Ram Shanmugam.

5 Bedroom floor available on Rent at Sector 92, Noida. 5 Bedroom with Bathroom, Hall, Kitchen portion available in the 2nd floor with independent entry and good enough privacy. House owner in the G/Floor and F/Floor is occupied by doctor couples. Secured with Surveillance camera and provision for 24 Hours SOFT water, it is ideal for a group of employed professionals of either gender. For details Contact: R. Manikandan Mobile: +91 9899165543

மணமகன் / மணமகள் தேவை   

Sh. Srinivasan (alias Arun), B.S.Marine Engineering from BITS, Pilani employed in Merchant Navy as an Engineer, DOB 15.3.1986, Star Barani, Gothram Haritham Iyer , Father Sh. N.S.Ganapathy Subramanian based in Hari Nagar, New Delhi. Contact No 98993 29688 / 2812 4512 Mail ID: gsubramanian1953@gmail.com

Ms. Gayathri, B.Tech (Computer Science) working with Intra Info Technology –Noida,Height 5'5",DOB 29.4.89 Star Avittam 2nd Padam,Gothram Bharadwajam,Rasi Makara,Sect Iyer Vadama,Parents Smt. Bhuvaneshwari & Sh. Mahadevan.B.,Sibling/s 1 brother younger. Doing Btech (Mech ) from Amrita, Bangalore. Contact: Sh. Bhuvaneshwari Mahadevan,  Mobile: 99119-21989, Mail ID: bhuvana.gayu_1989@hotmail.com.  Resident of Delhi.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

04/05/2014

06.00 PM onwards   

Yuva  Shakti Model School, Sector-3, Rohini, Delhi-110085

Rasikapriya Annual Day Celebrations -2014

 

 

Rasikapriya

9818192497

9810429874

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


Tuesday, April 29, 2014

29-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

29-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௧௫  (16) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 23

வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து

அதற்கு வீரேசலிங்கம் பந்துலு-''அப்பணிப்பெண்ணுக்குப் பெயர் மீனாட்சி. அவள் ஜாதியில் இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது. ஓஹோஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?'' என்றார்.

 

''அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

 

''தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருந்திருக்கலாம்'' என்றார் பந்துலு.

 

''அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு ஸ்த்ரீயின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும், வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியனவற்றை எனக்குச் சொல்லுங்கள்'' என்று கோபாலய்யங்கார் வேண்டினர்.

''எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த வேலைக்காரியுமன்று. இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என் நண்பர் வேங்கடாசலநாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமஸமாஜத்தைச் சேர்ந்தவர். இந்த வீடும் அவருக்குச் சொந்தமானதே. இந்த வேலைக்காரி அவருடைய குடும்பத்தில் வேலை செய்பவள். இங்கு நான் தாமதிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்குத் துணையாக வீடு பெருக்கி, மாடு கறந்து, விளக்கேற்றி, இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜ மஹேந்திரபுரத்துக்குப் போகும்போது அப்பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்குப் போய்விடுவாள்'' என்று பந்துலு சொன்னார்.

 

''நாளைக்குக் காலையில் நான் வேங்கடாசல நாயுடுவைப் பார்க்கவேண்டும். அவர் இங்கு வருவாரா? நாம் அவருடைய வீட்டுக்குப் போகவேண்டுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

 

''அவரையே இங்கு வரச் சொல்லலாம். நாம் போகவேண்டாம். எனிலும், இந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளும் விஷயத்தைத் தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது'' என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

 

இதுகேட்டு கோபாலய்யங்கார்:- ''எதற்கும் நாளைக்குக் காலையில் நாயுடுவை இங்கு தருவியுங்கள். மற்ற சங்கதி பிறகு பேசிக்கொள்வோம்'' என்றார்.

அப்பால் இருவரும் நித்திரை செய்யப் போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த சம்பாஷணையைத் தமது மனைவியிடம் தெரிவித்தார். அவள் மறுநாட் பொழுது விடிந்தவுடனே அச்செய்தியையெல்லாம் விசாலாட்சியிடம் கூறினாள். அது கேட்டு விசாலாட்சி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து, ''இது போனால் போகட்டும். வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது'' என்றாள்.

 

அப்போது பந்துலுவின் மனைவி:- ''பயப்படாதே, அம்மா. உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான். நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன்'' என்றாள்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

·         ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார்.

·         பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வதேராவுக்கு ஆதரவாக மோடி மீது அகிலேஷ் கடும் தாக்கு-  தி இந்து

காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியதுதான் மதவாதம்: ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி -  தினமணி

அல்போன்சா மாம்பழங்களுக்குஐரோப்பிய நாடுகளில் தடை -  யாஹூ

சென்னையில் முழு ராணுவ மரியாதையுடன் மேஜர் முகுந்த் உடல் தகனம் -  தி இந்து

மோடி, சோனியா தொகுதிகளில் வெற்றி யாருக்கு?ஓய்ந்தது ... -  யாஹூ

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு 5-வது வெற்றி ...- தினத் தந்தி      

வீடு வாடகைக்கு   

1BHK flat available for rent/lease in Pratap Vihar,near Santhosh Medical College, Ghaziabad, just 4 kms from sector 63, Noida. Nominal rate, only for south indians. Contact Dr Ram Shanmugam, Safdarjang Hospital. Mobile: 9716934196,9868436946 in fb as Ram Shanmugam.

5 Bedroom floor available on Rent at Sector 92, Noida. 5 Bedroom with Bathroom, Hall, Kitchen portion available in the 2nd floor with independent entry and good enough privacy. House owner in the G/Floor and F/Floor is occupied by doctor couples. Secured with Surveillance camera and provision for 24 Hours SOFT water, it is ideal for a group of employed professionals of either gender. For details Contact: R. Manikandan Mobile: +91 9899165543

மணமகன் / மணமகள் தேவை   

Sh. Srinivasan (alias Arun), B.S.Marine Engineering from BITS, Pilani employed in Merchant Navy as an Engineer, DOB 15.3.1986, Star Barani, Gothram Haritham Iyer , Father Sh. N.S.Ganapathy Subramanian based in Hari Nagar, New Delhi. Contact No 98993 29688 / 2812 4512 Mail ID: gsubramanian1953@gmail.com

Ms. Gayathri, B.Tech (Computer Science) working with Intra Info Technology –Noida,Height 5'5",DOB 29.4.89 Star Avittam 2nd Padam,Gothram Bharadwajam,Rasi Makara,Sect Iyer Vadama,Parents Smt. Bhuvaneshwari & Sh. Mahadevan.B.,Sibling/s 1 brother younger. Doing Btech (Mech ) from Amrita, Bangalore. Contact: Sh. Bhuvaneshwari Mahadevan,  Mobile: 99119-21989, Mail ID: bhuvana.gayu_1989@hotmail.com.  Resident of Delhi.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

04/05/2014

06.00 PM onwards   

Yuva  Shakti Model School, Sector-3, Rohini, Delhi-110085

Rasikapriya Annual Day Celebrations -2014

 

 

Rasikapriya

9818192497

9810429874

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com