Monday, June 30, 2014

30-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

30-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௧௪ (16)திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 23

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

மண் பறித்து உண்ணேல் .

Man Parithu Unnel

பொருள்:

பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே

Do not occupy others land illegitimately for your livehood.

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:

அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது. அதிலும் மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை மூலம் உண்டு வாழக்கூடாது. மண், பெண், பொன் & இம்மூன்றிலும் ஆசை வைக்கக் கூடாது. அடுத்தவர் இடத்துக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டாலும், அது நம்மை அழித்து விடும்.

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"கோவிலுக்கு நிலத்தை எழுதி வைக்கிற பழக்கம் கொஞ்சகொஞ்சமா குறைந்து போய் இன்னிக்கு சுத்தமா அந்தப் பழக்கமே இல்லாம மறைஞ்சு போச்சுன்னு ரொம்ப வருத்தப் படறாரே அவர் பெரிய கடவுள் பக்தரா?"

"அதெல்லாம் ஒன்னுமில்ல, பரம்பரை பரம்பரையா கோவில் நிலத்தைக் கொள்ளையடிச்சே சாப்பிட்ட குடும்பமாம்!"

இனி ஔவை

மண் பறித்து உண்ணேல்! - மற்றவர்களது நிலத்தை ஏமாற்றிப் பறித்து வாழாதே

உங்களுக்குத் தெரியுமா?

தாதாபாய் நௌரோஜி

·        தாதாபாய் நௌரோஜி (செப்டம்பர் 6, 1825 ஜூன் 30, 1917) இந்தியாவின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

·        1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

·        இவரது பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.மேலும் படிக்க

செய்திகள்

மெளலிவாக்கம் மீட்புப் பணிகள்: முதல்வர் நேரில் ஆய்வு -   தினமணி 

சுதர்சனுக்கு மணல் சிற்ப உலகக் கோப்பை விருது- தி இந்து

போரூர் அடுக்குமாடி கட்டிட விபத்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு ...-  தினத் தந்தி

சூப்பர்பாஸ்ட் ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு தினகரன்

 ஈராக்கில் உள்ள இந்தியர்களை நேரடியாக தொடர்புகொள்ள அரசு தீவிர ....-யாஹூ

ஆஸ்திரேலிய ஓபன்: சாய்னா சாம்பியன் -  தினமணி 

உருகுவேயை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது கொலம்பியா! -  தி இந்து

தோனியின் விருப்பப்படி பேட்ஸ்மேன்களுக்கு திராவிட் அறிவுரை -  தினமணி 

ரோட்ரிக்ஸ் அசத்தலில் கொலம்பியா முன்னேற்றம் - தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

30.06.2014

05.30 PM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

09.15 AM Onwards

Mahakumbhabhishekam -2014

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

05.07.2014

06.00 AM Onwards

Arulmigu Varasiddhi Vinayakar Thirukkoil

G-Block, Sector 22, Noida – 201 301 (U.P.)

Durga Sri Suktha Homam

and also Silver Kavacham will be adorned to Goddess Sri Durga Devi

Vedic Prachar Sansthan (Regd)

97110 20528

98114 23705

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


Saturday, June 28, 2014

28-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

28-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௧௪ (14)சனி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 22

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

பருவத்தே பயிர் செய் .

Paruvathe Payir Sei

பொருள்:

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்

Never procrastinate without reason.

விளக்கம்:

பருவநிலை மாற்றங்களை அறிந்து எந்த பருவத்தில் எதை பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி வரும் உழைப்புக்கு பலன் கிட்டும் என்பதை தெரிந்து பயிர் செய்ய வேண்டும் என்கிறது இந்த பாடல்.

 

இதற்கு நெற்பயிரை ஒரு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். நெற்பயிரில் பல ரகங்கள் உள்ளன. இப்பயிரை விளைவிக்க, ரகத்திற்கு ஏற்றாற்போல் மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படுகிறது. பருவநிலைக்கு ஏற்றாற்போல், ஒரு வருடத்தை மூன்று போகங்களாக பிரிக்கப்பட்டு பயிர் செய்யப்படுகிறது. சித்திரையில் நாற்று நடுதல் சொர்ணவாரி என்றும், ஆவணியில் ஆரம்பித்தல் சம்பா போகம் என்றும், தையில் நடவு செய்தல் கார் போகம் என்றும் பிரித்து சிறப்பாக தமிழகத்தில் காலம் காலமாக பயிர் செய்யப்படுகிறது. இச்சிறப்பிற்கு முத்தாய்ப்பாக சம்பா போகத்தில் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

சம்பா போகத்தின் சிறப்பை சற்று விரிவாகவே இங்கு காண்போம். ஆடி மாதத்து பலத்த காற்று மாறி, மேன்மையான தென்மேற்கு பருவ காற்றாக மாறும் ஆவணியிலே இதற்கு நடவு செய்யப்படுகிறது. இந்த நடவிற்காக, ஆடி மாதத்தில், அதிலும் குறிப்பாக, ஆடிப்பெருக்கன்று விதை விதைக்கப்படுகிறது. புரட்டாசியில் காற்று கரைந்து, ஐப்பசியில் மழை பொழியும். கார்த்திகையில் அடை மழையாய் மாறி, மார்கழியில் மழை முடிந்து பனிமூடி, தை மாதம் ஆரம்பிக்கும்முன் அறுவடை செய்யப்படுகிறது. ஆகையாலே, உழவர் திருநாளாம் தை திருநாள் (பொங்கல்) தை மாதத்தில் புது நெல் குத்தி, புத்தரிசியில் பொங்கலிட்டு கொண்டாப்படுகிறது.

 

இவ்வாறு இயற்கையை அறிந்து பருவத்தோடு இணைந்து பயிர் செய்ய வேண்டும் என்று உணர்த்தும் இந்த பாடலை, பொதுமறை கருத்தாக பயன்படுத்துவது வழக்கு. இளமையிலே கல்வி கற்றுக்கொள்ள வேண்டும், உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலவற்றை உணர்த்த பயன்படுகிறது. மேலும் இப்பாடலின் மூலம் உரைக்கப்படுவது, காலத்தோடு செய்யவேண்டிய செயலை காலம் கடத்தி செய்வதம் மூலம், அச்செயலுக்கு கிடைக்கவேண்டிய பலன் முழுமையாக கிடைக்காமல் போகலாம் என்பதேயாகும்.

 

இந்த விளக்கவுரையை எங்ஙனம் முடிக்க என்று நான் விழிக்க, இதோ ஒரு உழவனின் அனுபவ வரி – "சம்பாவில் பயிரிட்டால் மட்டும் போதும், விளைச்சல் வீடு வந்து சேரும்".

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"பெருசா பாட்டை அலறவிட்டுக்கிட்டு, மாடி அதிர டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கிட்டு அடிக்கிற கூத்தைப் பாத்தீங்களா? நாளுக்கு நாள் அட்ட காசம் அதிகமாகிக்கிட்டே இருக்கு சார்!"

" இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான் சார், பையனுக்கு காலாகாலத்துலு ஒரு கால்கட்டு போட்டுடிங்கன்னா அப்புறம் இதெல்லாம் காணாமப் போயிடும்!"

"அட போங்க சார் மாடில கூத்தடிக்கறது என் மகன் இல்லை, எங்க அப்பா!"

இனி ஔவை

பருவத்தே பயிர் செய்! - எந்தச் செயலையும் அதற்குரிய காலத்திலே செய்துவிடவேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

எறி கற்குழம்பு அல்லது லாவா

·        எறி கற்குழம்பு அல்லது லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும்.

·        லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது.மேலும் படிக்க

செய்திகள்

தமிழக அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி-  தி இந்து

நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் வாபஸ்: யுஜிசி உத்தரவுக்கு பணிந்தது தில்லி பல்கலைக்கழகம்-  தினமணி 

மத்திய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள் - தி இந்து

பாலியல் கல்வி குறித்த மத்திய அமைச்சர் கருத்து: அரசியல் ...-யாஹூ

ரூ.360 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்காள ... -  தினத் தந்தி

தமிழக அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி - தினமணி 

பிரேசில் சிலி பலப்பரீட்சை தினகரன்

10 வீரர்களுடன் விளையாடி பெல்ஜியம் அணி 'ஹாட்ரிக்' வெற்றி தென் ...-  தினத் தந்தி

2–வது சுற்றுக்குள் நுழைந்து வரலாறு படைத்தது, அல்ஜீரியா- தினத் தந்தி

வீடு வாடைகைக்கு

3BHK Flat, 3rd Floor, Bank Vihar Apartments, Sector 22 Corner House, Sun Facing,  Wardrobes in all rooms, All Bed rooms with Window AC's, One Covered Car Park. Piped Gas, Apartment situated opposite Sector 22 Metro Station

Vegetarians Preferred. If you are interested, please contact  email ID (da0312@gmail.com) or @ +91 96113 42330

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28/06/2014    

06.30 PM   Onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram, Delhi

நகைசுவை பட்டிமன்றம்

தலைப்பு: சின்னத்திரையும் வண்ணத்திரையும் சமூகத்தை பண்படுத்துகிறதா?

பாழ்படுத்துகிறதா?

Delhi Tamil Sangam

 

29/06/2014 (Sunday)  

10.00 AM   Onwards

Silver Jubilee Concerts of              GAYATHRI FINE ARTS

10.00 AM

Carnatic Vocal by

Dr. P. B. Kanna Kumar  - Vocal

Sri R. Saravanan  -  Violin

Kumbakonam   Sri                           N. Padmanaban - Mridangam

Mannai Sri N. Kannan  - Ghatam

11.00 AM

Award Ceremony

Gayathri Fine Arts

&

Delhi Tamil Sangam

Shri N.A. Ramachandran

(M) 981847662

06.15 PM   Onwards

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் ஒரு அருளுரை வழங்கி ஆசி வழங்குவார்.

தொடர்ந்து

இன்னிசை நிகழ்ச்ச்சி

செல்வி அனகா அசோகன்  - பாட்டு

தில்லி ஆர். ஸ்ரீதர் – வயலின்

குடந்தை என்.பத்மநாபன் – மிருதங்கம்

மன்னை என்.கண்ணன் – கடம்

Delhi Tamil Sangam

 

28/06/2014    

05.30 PM   Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Sri Nava Sakthi Archanai

 

26175104

www.malaimandir.org.in

29.06.2014

09.30 AM Onwards

Mahakumbhabhishekam Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

09.15 AM Onwards

Mahakumbhabhishekam -2014

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com