| 28-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௧௫ (15) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |
| மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 22 | |
| வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து ''முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சியில்லாதவள். கல்விப் பயிற்சியில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதையெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்'' என்று பந்துலு சொன்னார். அதற்கு கோபாலய்யங்கார்-''நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல சங்கீத ஞானம் - இன்னும் எத்தனையோ லட்சணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அ•தற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளைக் கீழ்க்குலத்துப் பெண்கள் மிக விரைவிலே கற்றுக் கொள்ள முடியும். அந்த நாகரிக நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம் குடியிருந்தால் போதும். அந்தப் பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.
''உலக அனுபவமில்லாத பதினாலு வயதுப் பச்சைப் பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது. முப்பது வயதாய், உயர்ந்த சர்க்கார் வேலையிலிருந்து சகலவித லௌகிக அனுபவங்களுமுடைய தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமாகக் கொண்டது. புதுமை மாறிப் போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவுப் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.
''மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும் சத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.
செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு-'' சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்'' என்றார். அப்போது கோபாலய்யங்கார்-''அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?'' என்று கேட்டார். நாளை தொடரும்.... | |
| உங்களுக்குத் தெரியுமா? | |
| உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. · இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். · ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். · இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். · தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். · உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். | |
| தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |
| உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பொறுப்பேற்பு - தி இந்து ஊழல் சக்திகளை அகற்ற புதிய செயல் திட்டம் - தினமணி ஃபரூக் அப்துல்லாவின் பொதுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு? - தி இந்து மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் ... - தினமணி என் மகன் ஒரு குழந்தைபோல் என்னை கவனித்துக் கொண்டான்: மேஜர் ... - தி இந்து போட்டி போட்டு பொய் கூறுகின்றனர் : சோனியா, ராகுல் மீது ... - யாஹூ வாடிகன் நகரில் நடந்த விழாவில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் ...- தினத் தந்தி படகு விபத்து: தென்கொரிய பிரதமர் ராஜிநாமா- தினமணி லா லிகா கால்பந்து: ரொனால்டோ 2 கோல்: ரியல் மாட்ரிட் வெற்றி - தினமணி | |
| வீடு வாடகைக்கு | |
| 1BHK flat available for rent/lease in Pratap Vihar,near Santhosh Medical College, Ghaziabad, just 4 kms from sector 63, Noida. Nominal rate, only for south indians. Contact Dr Ram Shanmugam, Safdarjang Hospital. Mobile: 9716934196,9868436946 in fb as Ram Shanmugam. 5 Bedroom floor available on Rent at Sector 92, Noida. 5 Bedroom with Bathroom, Hall, Kitchen portion available in the 2nd floor with independent entry and good enough privacy. House owner in the G/Floor and F/Floor is occupied by doctor couples. Secured with Surveillance camera and provision for 24 Hours SOFT water, it is ideal for a group of employed professionals of either gender. For details Contact: R. Manikandan Mobile: +91 9899165543 | |
| மணமகன் / மணமகள் தேவை | |
| Sh. Srinivasan (alias Arun), B.S.Marine Engineering from BITS, Pilani employed in Merchant Navy as an Engineer, DOB 15.3.1986, Star Barani, Gothram Haritham Iyer , Father Sh. N.S.Ganapathy Subramanian based in Hari Nagar, New Delhi. Contact No 98993 29688 / 2812 4512 Mail ID: gsubramanian1953@gmail.com Ms. Gayathri, B.Tech (Computer Science) working with Intra Info Technology –Noida,Height 5'5",DOB 29.4.89 Star Avittam 2nd Padam,Gothram Bharadwajam,Rasi Makara,Sect Iyer Vadama,Parents Smt. Bhuvaneshwari & Sh. Mahadevan.B.,Sibling/s 1 brother younger. Doing Btech (Mech ) from Amrita, Bangalore. Contact: Sh. Bhuvaneshwari Mahadevan, Mobile: 99119-21989, Mail ID: bhuvana.gayu_1989@hotmail.com. Resident of Delhi. | |
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com | |
Monday, April 28, 2014
28-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Saturday, April 26, 2014
26-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
| 26-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௧௩ (13) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 21 | |||||
| வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து அப்போது பந்துலு-''தங்களைப் போன்ற ஸ்தானமும் மதிப்புடைய மனிதரை அந்தப் பெண் மணம் செய்துகொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்டமாத்திரத்தில் இணங்கிவிடுவார்கள். இதிலெல்லாம் அதிகக் கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களைப் புத்தி சுவாதீனமற்றவரென்று நினைப்பார் தங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துபோய்விடும்'' என்றார்.
''சர்க்கார் வேலை போகாதே! அதற்கு யாதொரு ஹானியும் வராது. இங்கிலீஷ் ராஜ்யம்! தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை! எந்த ஜாதியார் எந்த ஜாதிப் பெண்ணை மணம் புரிந்து கொண்ட போதிலும், இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
அதற்குப் பந்துலு-''அவ்விஷயம் எனக்குத் தெரியாததன்று. தாங்கள் வேலைக்காரியை மணம் புரிந்து கொள்வதால் உங்கள்மீது ராஜாங்க அதிருப்தி ஏற்படாது. உங்கள் உத்தியோகத்துக்கு யாதொரு தீங்கும் நேராது. ஆனால், உங்களுடைய சிநேகிதர்களும் உங்களுடன் சமபதவியுடைய பிறரும் உங்களை இகழ்ச்சியாகப் பேசுவார்கள். 'மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அபகீர்த்தி மரணத்தைக் காட்டிலும் கொடியது என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லுகிறார். அந்த அபகீர்த்தியைக் குறித்தே நான் அஞ்சுகிறேன்'' என்றார். இதுகேட்டு கோபாலய்யங்கார்-''வெறுமே விதவா விவாகம் செய்து கொண்டாலும் பந்துக்களும் சிநேகிதர்களும் அபகீர்த்தி சாற்றத்தான் செய்வார்கள். அதற்குத் துணிந்த நான் இதற்குத் துணிதல் பெரிதன்று. பந்துக்களும் சிநேகிதர்களும் சிறிது காலம் வரை வாய் ஓயாமல் பழி தூற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களுக்கே சலிப்புண்டாய்விடும். ஒரே சங்கதியைப் பற்றி எத்தனை நாள் பேசுவது? ஒரே மனிதனை எத்தனை காலம் தூற்றிக் கொண்டிருப்பது? நாளடைவில் எல்லாம் சரியாய்விடும். ஜாதிப்பிரஷ்டம் இருக்கத்தான் செய்யும். சாகும்வரை பந்தக்களுடன் பந்தி போஜனமும் சம்பந்தமும் செய்ய முடியாமல் போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாட்சியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான் செய்யும். ஜாதிப் பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம் விசாலமானது. பிராமணர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள். பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால், ஒருவனுக்கு ஜாதிப் பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. சிநேகிதர்களும் இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய சிநேகிதர்கள் கைவிட்ட போதிலும், புதிய சிநேகிதர் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்கு சிநேகிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோக முள்ளவரை சிநேகிதரில்லையென்ற குறைவு நேராது'' என்றார். ''இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும் என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன'' என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.
''அந்தக் காரணங்களையெடுத்து விளக்குங்கள்'' என்றார் கோபாலய்யங்கார். நாளை தொடரும்.... | |||||
| உங்களுக்குத் தெரியுமா? | |||||
| மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. | |||||
| தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
| ராஜா, கனிமொழி, தயாளு உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை ... - தினமலர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசியல் கட்சியினரும் ... - தினமணி என் போராட்டம் தொடரும்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உறுதி - தி இந்து இந்திய ராணுவத்தை காங்கிரஸ் பலவீனமாக்கிவிட்டது : வி.கே. சிங் பகிரங்க குற்றச்சாட்டு- தினமணி 4 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது ...- தினகரன் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடிக்கு எதிராக 3 நரேந்திரர்கள் ... - தினத் தந்தி இலங்கையில் தமிழ் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து ஐ.நா. சிறப்பு பிரதிநிதி கவலை - தினமணி | |||||
| வீடு வாங்க / விற்க | |||||
| Row House Duplex for sale In Baroda. Address: F/2 Viraj Nagar, Near Mukti Nagar, Tandalja Road, Near Basil School, Baroda. Those who are interested contact Cell No. 084870-43739 e-mail id: rohini_aiyar@yahoo.com | |||||
| மணமகன் / மணமகள் தேவை | |||||
| K. Balchandran, Hindu – Sengundhar, Father Name - K.Kandswamy ( Cell # +91-98849-76891), Mother Name – K Selvi, Date Of Birth - 22nd October 1987, Star : Virgo, Height: 5.11 Feet, Educational Qualification - Aircraft Maintenance Engineer, Designation: Planning And Industrial Engineer Chennai, Father's Occupation - Hod Technical. For futher details contact : 9033711617 / 9428610023 Or Through Email At amuthayan@Gmail.Com Nirmala Chandrashekhar Mudaliar, 16-6-1981, Caste No Bar, Viruchikam, Vegetarian, SSC, DCA, Rs 8,000 pm, 079-26743329, 9879177226, nirmalamudaliar@yahoo.in. T. Arti, Senguntha Mudaliar, 9-5-1984, Simham, Magam, Midhunam, DMB, BA, MBA, Content Writer, 98258 69688. Engineering graduates or post-graduates will be preferred. Nadar Viji Benita, Christian Catholic, Caste No Bar, BSc, PGDCA and pursuing MCA, Rs 8,000 pm, Teacher. 94278 96608, vijibenita@yahoo.com. Well educated with clean habits. Babitagauri N. Dravid, 7-4-1981, Adi Dravid (Sambhar), Rishabham, Krithigai, Dhanush, Sevvai Dosham, BCom and Hospitality & Frontline Management (Australia), 02692-246965, 98984 19919,babitagauri@yahoo.co.uk, ajitadravid@gmail.com. Any post-graduate and willing to settle in Australia. N. Nagamani, 10-9-1986, Std 8, Widow, Devangu Chettiyar, Caste No Bar, Viruchigam, Anusham, 09377651544. Anyone ready to take care of 7-yr-old son. Anuradha R Naidu, 9-8-1993, Second year BCom, Telugu Naidu (Padma Valma), B-9, Shashith Apartment, Valla Park, D-Cabin, Sabarmati, Ahmedabad. S. Kameshwari Valluvar, 16-6-1988, Kadagam, Ayilyam, BSc (Fashion Designing), 079-26750747, 98255 76274, rekha.nisha1987@gmail.com. Dhanalaxmi Mudaliar, 27-6-1985, Vellalar, Makaram, Uthiradam, Kanni, MCom, Teacher, Rs 8,000 pm, 9998772449, any qualified Mudaliar. Ambika S Mudaliar, MA (English), PG Dip in HRM, 28-7-1987, Vellalar, Simham, Maham, Rs 1.08 lakh per annum, 9909263975, 9924859887, ambi.mudaliar@gmail.com. Mary Rajini Koluri, MCA, 16-7-1987, RC Nadar, Meenam, Uthiradam, Teacher, Rs 5,000 pm, 0286-2214286, 09898985086, mary_rr96@yahoo.com Anuradha K, MSc (Environment), BEd., 30-12-1981, 8.05 pm, Agamudaiya Mudaliar, Kumbam, Avittam, Kadagam, 9913767121. Well qualified grooms from any Mudaliar caste will do. Jyoti A, M.Sc.,B.Ed., teacher, 01-08-1985, 5.40 am, Senguntha Mudaliar, Thiruvonam, Makaram, Kadagam, vegetarian, mudaliar_jyoti@yahoo.com, 9375864911. Wellqualified grooms with clean habits will do. Ambika Aiyadurai, Pursuing Ph.D. in Sociology in National University of Singapore 18-02-1973, Pallar (Adi Dravidar), Pooram, Simham, Gandhinagar, gops2u@gmail.com, 9898041657. Jaydevi Valluvar, B.Com., Dip in Avitaion Travel, Rs 8,500, 12-06-1986, Valluvar, Magaram, Thiruvonam, 079-26750747, 9825576274, jaydevivalluvar@gmail.com, jaydevivalluvar@rocketmail.com Aruna Ramalingam, M.Com., Rs 1 lakh p.a., 02-11-1988, 3.40 am, Senguntha Mudaliar, Kadagam, Ayilyam, Kanni, 9408785264, 9825165211, tobala.mudaliar@gmail.com. Well qualified grooms will do. Mangaiyarkarasi Vetrivel, M.Com., 12-12-1983, Rs, 7,000 pm, Senguntha Mudaliar, Kumbam, Sadyam, Thulam, 09600789291 (Pondicherry) Roopa Venkatesan Pillai, B.Com., 04-06-1985, Pillai, Vegetarian, 9974558855, 9558305577,rppillai4@gmail.com, pillairoopa@yahoo.com. Well qualified and employed groom with clean habits. Nalini Jayaraman, BCom, PG (IRPM), DECE, DHM, 16-6-1981, Teacher, Arcot Mudaliar, Vrischigam, Anusham 09427844617, 9427980940, mbharat2003@yahoo.co.in | |||||
| நம்மை சுற்றி | |||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
| 26/04/2014 to 27/04/2014 09.30 AM onwards | D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon | Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM Evening Session: 6 PM -7.30PM |
| 9313634923 880961207 | |
| 26/04/2014 06.30 PM onwards | Lok Kala Manch | Venu Ganam by Mr. P. Nagarajan, Supporting Artists: Violin - Mr. Arvindd Narayanan, Mridangam - Mr. Kumbakonam N Padmanaban, Ghatam - Mr. Mannai N Kannan | Lok Kala Manch | P. Nagarajan, Mobile: 9871386870 | |
| 27/04/2014 06.15 PM onwards | MCD Community Centre, Mayur Vihar – 3, Delhi | Chithirai Festival Kovai Ashok presents Mimicry Comedy Show Mimicking 100 sounds in 10 minutes | Sentamizh Peravai (Regd.) | 88002-64137 88002-63991 88002-63992 | |
| 27/04/2014 04.00 PM onwards | Delhi Tamil Sangam Auditorium, RK Puram, New Delhi. | DWARKALAYA's CHITHIRAI ISAI VIZHA (ANNUAL CLASSICAL MUSIC PROGRAM ) 2014' 04.00 PM Carnatic Vocal by Smt.Charanya Lakshmikumaran (Disciple of Dr.K.Vageesh) 5.30PM Welcome address and annual felicitation of senior artists 6.30 PM For the first time in Delhi a Carnatic Classical Concert by Nagaswaram maestro Kalaimamani Sri V.S.K Chakrapani - Violin Kumbakonam Sri N.Padmanabhan – Mridangam Ustad Sri Rashid Zafar Khan - Tabla | Bus facility would be available. Those interested may kindly send in their details to dwarkalaya.regd@gmail.com Or contact Mr. Krishnan: 9810874834 Or Mr. Jayaraman: 9868076459. | 98101 16465 98180 84125 | |
| 27/04/2014 06.30 PM onwards | Sri Ram Mandir Complex, HAF Pocket 2, Sector 7, Dwarka | Baratha Natyam Programme Kum. Akshara & Kum. Aprika followed by Kum. Sai Tejeswini & Kum. Sai Lakshmi
|
|
| |
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com | |||||

