Saturday, December 28, 2013

28-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

28-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௧௩(13), சனி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

திருவிழாவிற்கு வாருங்கள்

கோவில், பூக்கடை, பூசைப் பொருள்கள் கடை, கோலாட்டம், கும்மி ஆட்டம், பாட்டு, ஆங்காங்கே மண் பானையில் பொங்கல் செய்யும் குடும்பங்கள், சிறு சிறு கூட்டமாய் மக்கள் நின்று பேசிக் கொண்டிருப்பது....ம்.ம்.ம் .. பலருக்கு தன் கிராமத்து திருவிழா ஞாபகம் வருவது போலத் தோன்றுகிறது..

வாருங்கள் நம் பொங்கல் விழாவில் இவற்றை அனுபவிப்போம்

 

வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

 
இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

 

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம்.  முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.


நாளொரு நாலடி324


பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்
கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.

 

பலரோடும் அளவளாவி மகிழாதுவிலகிப் பகைகொள்ளுதல் புல்லறிவாகும்.

 

பொருள்

உள நாள் சில, உயிர்க்குஏமம் இன்று, பலர் தூற்றும் பழி -இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை, பலர்தூற்றும் பழி வேறு; பலருள்ளும் கண்டாரோடெல்லாம்நகாஅது எவன் ஒருவன் தண்டித் தனிப்பகை கோள்-ஆதலால், பலரோடும் மகிழ்ந்தொழுகாது விலகிஎதிர்ப்பட்டவரோ டெல்லாம் ஒருவன் கடும்பகைகொள்ளுதல் ஏன்?

 

     Explanation (G. U. POPE):

 

The neophyte.

Without any learning of his own, the fool has obtained one formula from overhearing the lessons of a tutor (who was teaching others), yet unabashed he enters the circle of the good, speaks it out, and makes exhibition of his mean understanding.

   உங்களுக்குத் தெரியுமா?

எம். எஸ். ரகுநாதன், இந்தியக் கணித மேதைகளில் ஒருவர். இவரின் முழுப்பெயர் 'மாடபூசி சந்தானம் ரகுநாதன்' என்பதாகும். இவர் தந்தை, சென்னையில் மரக்கடை வணிகம் செய்தவர். மயிலை பி.எஸ்.மேனிலைப் பள்ளியில் படித்த இவர், விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டப்படிப்பு முடித்தார். பின்பு டாடா ஆய்வகத்தில் சேர்ந்து முனைவர் (பி.எச்.டி.,) பட்டத்தையும் பெற்றார்.

கணிதத்தில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட இவர், சாந்தி சுவரூப் பட்நாகர் விருது, ராமானுஜம் பதக்கம், பத்மபூஷண் விருது ஆகியவற்றைப் பெற்றார். அறிவியல் அறிஞர்களாக மதிக்கப்பட்டு, உலக சமுதாயத்தால் ஏற்கப்பட்டு, அவர்கள் கையொப்பம் பதித்த ஆவணம் இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் உள்ளது. பிரபல அறிவியலாளர் ஐசக் நியூட்டன் இதில் கையொப்பமிட்டிருக்கிறார். அதில் சமீபத்தில் கையொப்பமிட்ட பேராசிரியர் எம்.எஸ்.ரகுநாதன் ஆவார். வரலாற்றுப்புகழ் மிக்க கணித மேதை சிறீநிவாச ராமானுஜம், சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன் என இந்திய கணித இயல் துறையின் பெருமையைக் கட்டிக்காத்த பெருமகன்களின் வரிசையில் இவர் இடம் பெற்றுள்ளார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு - Oneindia Tamil

நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்: நித்தியானந்தாவிடம் தீட்சை ... மாலை மலர்

2028-ல் 3-வது இடம் : ஜப்பானை முந்துகிறது இந்தியாயாஹூ

அண்டார்டிக் பனிக்கு இடையே சிக்கி தவிக்கும் சொகுசு கப்பல்வெப்துனியா

இங்கிலாந்து 255க்கு ஆல்-அவுட் : ஆஸ்திரேலியாவும் சொதப்பல் - தினகரன்


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/12/13 - 7.00AM till 1.00PM

Ayyappa temple sector 17 - Rohini

 

 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha

Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan

1.00pm Deeparadhani – Annadhanam 

By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini

 

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

 

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment