Tuesday, December 31, 2013

31-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

31-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

20 UNITS BLOOD REQUIRED IMMEDIATELY.

An elderly patient from Chennai is admitted in Apollo Hospital New Delhi ( Jasola/ Sarita vihar) and is undergoing Liver operation. There is an immediate requirement of 20 units of blood of any group for successful operation.

Donors kindly contact Sankar at 09790902623.

Please treat this as urgent and come forward and help.

KINDLY SHARE FOR MORE PEOPLE TO KNOW.

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௧௬(16), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

கலை நிகழ்சிகள் - மண்பானையில் பொங்கலிட வாய்ப்பு - பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் - இதுவரை பலர் கண்டிராத "பின்னல் கோலாட்டம்" புதுப்புது நண்பர்களை தேடும் வாய்ப்பு. இன்னும் பல....

வாருங்கள் நம் பொங்கல் விழாவில் இவற்றை அனுபவிப்போம்

 

வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

 
இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

 

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம்.  முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.


நாளொரு நாலடி326


பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்.

 

புல்லறிவாளர் நல்லது செய்யஅறியாராய்ப் பிறரால் இகழவும் படுவர்.

 

பொருள்

மூப்பு மேல் வாராமைமுன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் -கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன்உலகில் அறச்செயலைத் தொடங்கி அதன்கண்முயன்றுவராதவன், நூக்கிப் புறத்திரு போக என்னும்இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும்- பின்பு வீட்டில் ஏவற்காரியாலும் நெட்டித்தள்ளப்பட்டு 'வெளிப்புறத்தில் இரு' 'ஒழிந்துபோ'என்னுங் கொடுஞ் சொற்களுஞ் சொல்லப்படுவான்.

     Explanation (G. U. POPE):

Dis-honoured old age.

He who before old age comes, has not undertaken and zealously carried out works of virtue, will be pushed about in the house, addressed in harsh language, and bidden to get on one side or to go out, by even the maid-servants.

   உங்களுக்குத் தெரியுமா?

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவக் கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்தவர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராக பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அவரே இவற்றை எழுதி, ஒவ்வொன்றுக்கும் இசையமைத்து அவற்றின் சுரங்களையும் வெளியிட்டார். அக்கால இந்திய இசை வல்லுனர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். மேலும் அறிய  

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கருணாநிதி நல்லவர்: இல.கணேசன் சர்டிபிகேட் - தினமலர்

தமிழகத்திலும் ஆம் ஆத்மி போட்டியிடும்- பிரஷாந்த் பூஷன் - Oneindia Tamil

சவூதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை?- தின பூமி

கோமா நிலையில் மைக்கேல் ஷூமாக்கர் கவலைக்கிடம் - தி இந்து

ஹோட்டலில் வரிசையில் நின்று சாப்பிட்ட சீன அதிபர் - தின பூமி


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

 

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

14-01-2014

6.30 pm onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini

"Music to the Dance" a performance by the students of Nrityavatika

Nrityavatika, Rohini

Harpreet Kaur

Mob : 9811677891

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment