30-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மார்கழி – ௧௫(15), திங்கள், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
கலை நிகழ்சிகள் - மண்பானையில் பொங்கலிட வாய்ப்பு - பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் - இதுவரை பலர் கண்டிராத "பின்னல் கோலாட்டம்" புதுப்புது நண்பர்களை தேடும் வாய்ப்பு. இன்னும் பல.... வாருங்கள் நம் பொங்கல் விழாவில் இவற்றை அனுபவிப்போம்
வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.
நாள்: 12-1-2014 ( ஞாயிறு) நேரம்: காலை 0930 முதல்
முக்கிய குறிப்பு: அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம். முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம். | |||||
நாளொரு நாலடி–325 | |||||
பொருட்பால்– பொதுவியல் – புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.) எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
பலர் நடுவில் பிறரை வைதல்புல்லறிவின் இயல்பாகும்.
பொருள் எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி ஒருவன் ஒருவனைவைதான்-ஒருவன் சென்று கலந்திருந்த தக்கோர்அவையின் முன் ஒருவன் போய் அவனை இகழ்ந்துதிட்டினானாக, வைய வயப்பட்டான்வாளா இருப்பானேல்வைதான் வியத்தக்கான் வாழும் எனின்-அவ்வாறுதிட்ட அதற்கு உட்பட்டவன் பொறுமையோடு சும்மாஇருந்துவிடுவானாயின் அந்நிலையில் வைதவன்நன்னிலைமையில் உயிர்வாழ்வா னென்றால் அவன்வியக்கத்தக்கவனே யாவான். (உயிர்வாழ்தல்அரிதென்றபடி.)
Explanation (G. U. POPE): The evil tongue. A man has gone before the assembly that had gathered together, and contemning another has reviled him. Now, if the reviled one remain silent, the reviler is to be wondered at if he survive ; (for abuse is his very life, and the patience of the reviled one has closed his mouth.) | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 1925) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை - ஆட்சியர் உத்தரவு! - Inneram.com திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் புதிய கட்சி உதயம் ... மாலை மலர் லால்பகதூர் சாஸ்திரி பேரன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் - தின பூமி ரஷ்யா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை பெண் தாக்குதல் – தினகரன் முதலையுடன் போராடி மகனை மீட்ட தந்தை - நியூஸ்ஒநியூஸ் | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
12-01-2014 | Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi |
56th Delhi Sasthapreethi Celebrations | Delhi Sasthapreethi Celebrations Committee | 9811799051 9810641038 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment