06-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 58 குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக ஆர்வத்தை உருவாக்குங்கள். ஓடி ஆடி விளையாடும்போது அவர்களுடைய உடல் ஆரோக்கியமடைகிறது. சிறு வயதிலேயே உருவாக்கும் விளையாட்டு ஆர்வம் அவர்களுடைய நீண்ட கால ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். | ||||
நாளொரு நாலடி – 133 | ||||
பொருட்பால்– துறவற இயல்–கல்வி நூல்களைக் கற்றல் (LEARNING) களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்.
கீழ்க்குலத்தில் பிறந்தோர் ஆயினும் கற்றறிந்தவரே சிறப்புடையவர் ஆவர். பொருள்: களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின்விழுமிதாக் கொள்வர்-உவர் நிலத்தில் தோன்றியஉப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும்நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்;கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் - ஆதலால், கீழ்க்குடியிற்பிறந்தோராயினும் கற்றறிந்தோரைமேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல்உண்டாகும். Explanation (G. U. POPE): The learned, though low-born, are first. The excellent regard the salt produced in brackish ground as choicer than the Ncl from fertile soil. It is fitting to place in the first rank the learned-wise, though (sprung) from the lowest origin. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
கடுகு (Brassica juncea) ஒரு மருத்துவ மூலிகையாகும். 'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்ற முதுமொழிக்கு ஏற்ப எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும். கடுகில் அப்படியே ஒரு சுவையும் இருக்காது. குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திiய சமையலில் சூடான எண்ணையில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
லடாக் எல்லையில் திடீர் திருப்பம்: இந்திய-சீன படைகள் வாபஸ்-தினமணி சீக்கியர் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு-தினகரன் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 65 சதவிகித வாக்குப்பதிவு- தினமணி நிலக்கரி சுரங்க ஊழல் : சிபிஐ விளக்க அறிக்கைத் தாக்கல் செய்ய உச்ச ...- 4தமிழ்மீடியா அசாத் சாலியின் மகள் ஜனாதிபதிக்குக் கடிதம்-உதயன் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் பிரிட்டன் நாடாளுமன்ற துணைத் ...- தினமணி மலேசிய தேர்தல்: 56 வருட ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணியே ...- மாலை மலர் வறட்சி: மத்திய நிபுணர் குழு இன்று வருகை- தினமணி பி.இ. மாணவர் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் ஒரு லட்சத்தைத் தாண்டியது- தினமணி மின்வெட்டு: மே 12-ல் விஜயகாந்த் தலைமையில் கண்டன பேரணி- தினமணி நாட்டின் சர்க்கரைஉற்பத்தி 2.45 கோடி டன்-யாஹூ! ராமதாசை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்தவர் பலி - நக்கீரன் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்- தினமணி கட்காரியின் நிறுவனங்கள்:ரூ.7 கோடி வரி ஏய்ப்பு?- தினமலர் திராவிட், ரஹானே அதிரடி: புணேவை வீழ்த்தியது ராஜஸ்தான்- தினமணி | ||||
வீடு வாடகைக்கு | ||||
FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking. Three bedroom, with drawing dining and two bathrooms. Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital. Rent expected Rs.16,000. Contact for details either before Sunday or after May 22nd (M)882 66 55 8 55 | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment