Wednesday, May 15, 2013

13-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

13-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௩௦(30)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 64

சிற்சில இடங்கள், அறைகள், இருட்டு இதையெல்லாம் கண்டு குழந்தைகள் பயப்படும். சில வேளைகளில் மிரண்டு போகும். அப்போதெல்லாம் கிண்டலடிப்பதோ, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதோ கூடாது. அவர்களிடம் அமர்ந்து, ''அங்க ஒண்ணும் இல்லடா'' என்று பயத்தை போக்குங்கள்.

நாளொரு நாலடி 139

பொருட்பால்துறவற இயல்கல்வி

நூல்களைக் கற்றல்  (LEARNING)

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

 

கற்றவரின் சாவகாசம்.

பொருள்:    

கல்லாரேயாயினும்கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும்தலைப்படுவர் - தாம் கல்லாதவரே யாயினும்கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்டமெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்; தொல்சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால்புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு -இயற்கைமணச் சிறப்பினையுடைய விளக்கமான நிறம்அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதியமட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான்அம்மணத்தைத் தந்தாற்போல வென்க.

Explanation (G. U. POPE):

The benefits of association with the learned. The pot impregnated with odour.

Though themselves unlearned, if men live in association with the learned they advance daily in excellent knowledge. The new vessel, by contact with the Padri-flower of old renown and lustrous hue, imparts fragrance to the cold water it contains.

உங்களுக்குத் தெரியுமா?

சீயோன் தேசியப் பூங்கா (Zion National Park) தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும்.

 செந்நிற நாவஃகோ (Navajo) என்றழைக்கப்படும் மணற்பாறையினால் ஆன சீயோன் பள்ளத்தாக்கு, இத்தேசியப் பூங்காவின் முக்கிய கவர்ச்சியாகும்.

கொலராடோ மேட்டுநிலம், கிரேட் பேசின், மஃகாவிப் பாலைநிலம் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் இத்தேசியப் பூங்கா அமைந்துள்ளமை, இப் பூங்காவின் தனித்தன்மை வாய்ந்த புவியியல் சூழமைப்புக்கும், பல்வகைமை கொண்ட நிலைத்திணை (தாவரம்), உயிரினங்களுக்கும் காரணமாக அமைகின்றன.

பல வகையான நிலைதிணைகளும், 289 வகையான பறவைகளும், 75 வகை முலையூட்டிகளும் (19 வகை வௌவால்கள் உட்பட), 32 வகை ஊர்வனவும், இங்கு வாழ்கின்றன. இங்குள்ள சிறப்பான விலங்குகளில் மலையரிமா, பெருங்கொம்பாடு, கலிபோர்னியா காண்டோர் என்னும் கழுகு, பொன்னாங்கழுகு முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர்-தினமணி

மரக்காணம் பகுதிக்குள் நுழைய ராமதாஸ், அன்புமணிக்கு தடை- தினகரன்

நக்சலைட் தாக்குதல்3 போலீசார் பலி.- தினமலர்

சுரங்க ஊழல் விசாரணை நியாயமாக நடக்க மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்- தினமணி

 பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மருத்துவமனையில் அனுமதி-தினமலர்

"காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும்'- தினமணி

துருக்கியில் நேற்று நிகழ்ந்த மோசமான கார் குண்டுத் ...- 4தமிழ்மீடியா

 பிரதமர் பதவி விலக வேண்டும் ; பா.ஜ., நிலையில் மாற்றமில்லை- தினமலர்

ஐ.சி.எஃப். ஆலையில் தீ: பொருள்கள் தீயில் கருகி நாசம்- தினமணி

நரைனின் அதிரடி பந்துவீச்சில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது...- தினகரன்

வாட்சன் விளாசலில் வீழ்ந்தது சூப்பர் கிங்ஸ்-தினமணி

ஸ்பெயின் பார்முலா-1: அலோன்சா சாம்பியன் - Dinamalar Sports

மாட்ரிட் ஓபன்: நடால், செரீனா சாம்பியன்- தினமணி

மணமகன் / மணமகள் தேவை

R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/05/13

6.00 PM onwards

Sri Ram Mandir

Shankara Jayanthi

06.00pm

Sankalpam, Rudra Japam/Abhishekam To Adi Shankarar, Special Archanai, Etc.

07.00pm

Bhajan By Shri Viswanatha Bhagawathar

08.30pm

Deeparadhanai And Prasada Viniyogam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

9968093927  

9868004729     

18/05/13                6.00 PM -8.30 PM

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam

Tamil Isai

by Kum Aishwarya Lakshmi - Vocal,                                             Sh V.S.K. Annadurai Violin, Kumbakonam N.Padmanabhan Mridangam,

Sh Harinarayanan Ghatam

Delhi Tamil Sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment