Wednesday, May 15, 2013

07-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௨௪(24)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 59

ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதற்கு குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உண்ணப் பழக்குங்கள். விரைவிலேயே அந்தச் சுவை அவர்களுக்குப் பிடித்தமானதாகும். அல்லது காய்கறிகள் உண்ணும் பழக்கம் உருவாகும். இது அவர்களுடைய ஆரோக்கியத்தின் அஸ்திவாரம்.

நாளொரு நாலடி 134

பொருட்பால்துறவற இயல்கல்வி

நூல்களைக் கற்றல்  (LEARNING)

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;

எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன

விச்சைமற் றல்ல பிற.

 

ஒருவன்தன் புதல்வருக்கு ஒன்றானும் அழியாத கல்விப் பொருளையே தேடி வைக்கல் வேண்டும்.

பொருள்:    

வைப்புழிக்கோட்படா -வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவிற்கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை -நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்கநேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்கசிறப்பின் அரசர் செறின் வவ்வார் - தம்மினும்மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும்கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச்செய்வன விச்சை மற்று அல்லபிற - ஆதலால்; வைப்புஎன ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவைகல்வியே, பிற அல்ல.

Explanation (G. U. POPE):

Learning, the best legacy.

It cannot be taken from its place of deposit; it does not perish anywhere by fire; if kings of surpassing grandeur are angry they cannot take it away; (and therefore) what any man should provide for his children as a legacy is learning. Other things are not (real wealth).

உங்களுக்குத் தெரியுமா?

அந்திமந்தாரை(Mirabilis jalapa - four o'clock flower or marvel of Peru) என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூ.

இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர்.

இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும். இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை.

ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும்.

இதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கூடங்குளம் செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி-தினமணி

நகரங்களில் சொத்து வரி நிர்ணயிக்க மாநில சொத்து வரி வாரியம்-தினகரன்

பன்சால், அஸ்வனி குமார் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்-தினமணி

சிபிஐ விசாரணை முடியும்வரை பன்சால் பதவி விலகத் தேவையில்லை: மாயாவதி- தினமணி

மாஸ்கோவில் ரஷ்ய அதிபருக்கு எதிராக பேரணி - தினமலர்

மும்பை, கோல்கட்டாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு மிரட்டல்- தினமலர்

கருப்பு பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட வங்கிகள், இன்சூரன்ஸ் ...- தினமணி

அறிக்கையை சட்ட அமைச்சர் திருத்தினார்: நிலக்கரி வழக்கில் சிபிஐ ...- தினமணி

உண்ணாவிரதத்தை கைவிடவில்லை அசாத் குடும்பம் ...-பதிவு!

இலங்கை - இந்திய எரிபொருள் கூட்டுத்தாபன ஒப்பந்தம் ரத்து-உதயன்

விபரீதத்தில் முடிந்த விமான சாகசம் - அதிர்ச்சியடைந்த மக்கள்- வெப்துனியா        

ரூ.500 கோடி செலவில் 47 சேமிப்பு கிடங்குகள்- தினமலர்

அன்னிய நிதி நிறுவனங்களின்பங்கு முதலீடு ரூ.63643 கோடி-யாஹூ!        

புழல் சிறையில் பா.ம.க.வினர் திடீர் உண்ணாவிரதம்- தினமணி

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது- தினமலர்

மில்லர் அதிரடியில் பஞ்சாப் வெற்றி- தினமணி

இக்கட்டான நிலையில் கோல்கட்டா: இன்றுமும்பையுடன் மோதல் - யாஹூ!        

வீடு வாடகைக்கு

FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking.  Three bedroom, with drawing dining and two bathrooms.  Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital.  Rent expected Rs.16,000.  Contact for details either before Sunday or after May 22nd  (M)882 66 55 8 55

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11/5/13

&

12/5/13

7.00AM onwards

 

Sri Ram Mandir, Sector 7,

Dwarka

Lalitha Sahasranama Nakshatra Mala  Lalitha Sahasranamam will be

chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May)

and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama  Parayanam

27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2.

Sri Ram Mandir

9312247576

9810138189

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment