Monday, November 18, 2013

18-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

18-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை – ௨(2)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி – 297

பொருட்பால்துறவற இயல் மானம் (Honour).

கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை

இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த

விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்

சொற்பழி அஞ்சி விடும்.

கீழோர் பசிநோய்க்கும் இடையாயோர் துன்பத்திற்கும் மானமுடையோர் பழிச்சொல்லுக்கும் அஞ்சுவர்.

பொருள்:    

வில் போன்ற வளைந்த புருவத்தின் கீழ் வேல் போல் உலாவிவரும் நீண்ட கண்ணையுடையவளே! கீழ் மக்கள் எல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர்; இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பங்களுக்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு நேரும் பழிக்கு அஞ்சுவர். (மேலான வாழ்வு வாழ விரும்புவோர் மானத்துக்கு அஞ்சி வாழவேண்டும் என்பது கருத்து).

Explanation (G. U. POPE):

The honourable dread most the loss of reputation.

Thou who hast long dart-like eyes with eye-brows extending far, like a bow! the lowest class of men dread burning hunger; the other (or middle class) dread what is unpleasant; all the chief of men fear words that impute crime.

உங்களுக்குத் தெரியுமா?

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

 

வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

 

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

 

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர்.

ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கருப்பு பணம் பட்டியலை வெளியிடுவோம்:இந்தியாவை மிரட்டுகிறது …  -  தினமலர்

சத்தீஸ்கரில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு -  தினமணி

சென்னையில் கன மழை:சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்தினமணி

மெட்ரோவுக்காக சென்னை வந்த அமெரிக்க இழுவை ரயில் என்ஜின் -  தினமணி

மால்ட்டாவில் 2015-ல் காமன்வெல்த் மாநாடு -  தினமணி

ஆனந்தும் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்: திப்யேந்து   -  தின பூமி

2014 உலகக் கோப்பை கால்பந்து: நைஜீரியா, ஐவரி கோஸ்ட் தகுதி -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

18/11/2013 

7pm onwards

21/11/2013

7pm onwards

22/11/2013

7pm onwards

23/11/2013

7pm onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Bhajans by Kumbakonam Ananthanarayana Bhagawathar & Group

Sankatahara Chaturthi celebrations    Bhajans by Manjappara Mohanan and Party

Bhajans by Srikanth (Dubai) and Party

Sri Vishnu Sahasranama Parayanam by Rama Rao & Group

 

VESS Temple Management

  

VESS Temple Management

 

Sh. Mohandas and Sh. Narayanan 

VESS Temple Management

22627778

20/11/2013

7 PM onwards

Aishwaraya Mahaganapthy Temple, Lawrence Road, Delhi

Bharatanatyam dance recital by kum. Akshara Narayanan, Kum. Arpika Narayanan, Kum.Kirthana Chandrasekhar and Kum.Apoorva Goel

(Disciples of Smt. Sunita Menon)

 

9868992272

9899377456

23/11/2013 (Saturday)

 6 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085         

6.00 pm : Ganapathi Pooja,

6.30 pm : Ayyappa Bhajan by                 Kodunthirapully  SUBBARAMAN                    BHAGAVATHAR & PARTY, PALKKAD.     

9.00 pm : Award Ceremony - Young  Achievers,                   Meritorious)

9.15 pm:  Deeparadhanai

9.30 pm:  Maha Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 R. Ayyappan

(M)9811207467

S. Murali

(M)9582288471

 

24/11/2013 (Sunday) –

6.00 am to 1.30 pm

6.00 am : Ganapathi Homam 

6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam  by  Rohini Sri Vishnu                              Sahasranama  Satsang

8.30 am : Breakfast

9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY,                CHENNAI

1.15 am : Deeparadhanai

1.30 am : Annadhanam

23/11/2013  5.30 PM onwards &

24/11/2013

5.30 AM onwards

East End Apartments,

Mayur Vihar Ph- I Extn. Delhi

12th year Ayyappa Pooja Celebrations

 

East End Apartments Ayyappa Seva Samiti

 

24/11/2013 Sunday, 6-8.30PM

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

Devotional Music programme by  Kalaimamani K.Veramani Raju & Group

Gurgaon Tamil sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment