31-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௬(16) திங்கள், திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: நெருக்கடியின் போது நிதானத்தைத் கடைபிடிப்பது மிகப் பெரிய பலம்.
|
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
|
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம், தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) மற்றும் VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) இணைந்து : வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இப்பொங்கல் விழாவை நடத்த விரும்புகிறது.
இடம்: சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:30 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
· (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
· கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
· பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்: கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
· பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு, அவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
|
*** Entire event will be covered and telecasted during pongal by DD International / Pothigai ***
|
On 06-Jan-2013, Sunday (9:30AM onwards) Avvai Tamil Sangam, Tamizhar Welfare Association Mayur Vihar Phase III and Vasundhara Enclave Sarveswara Samaj jointly would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
· Preparation of pongal
· Classical & Folk dances , Dandiya and vocals.
· Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
· Rangoli
Interested participants / Volunteers are requested to email us. Please come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided.
|
நாளொரு நாலடி – 25
|
அறத்துப்பால் – துறவற இயல்–யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
இல்வாழ்க்கையில் இன்பம் உண்டென்பது புத்தியீனம்.
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
பொருள்:
கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!
Explanation:
Death pours contempt on human joys.
To him, who, although he sees them bear the corpse to the burning ground, while friends in troops loudly lament, boldly asserts that wedded life is bliss on earth, the funeral drum speaks out, and mocks his vain utterance.
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
கணம்: flock, மக்களின் கூட்டம்.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான அகாசி கைக்ஜோ (Akashi Kaikyō Bridge), யப்பான்(Japan) நாட்டில் உள்ளது.
இந்த பிரமாண்டமான பாலத்திற்கு (Pearl Bridge) பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. யப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி (Akashi) பிரதேசத்தினையும் அவாஜி (Awaji) தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை (Akashi Strait) மேலாக இந்த பாலமானது கட்டப்பட்டுள்ளது.
பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்).
கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு "அகாசி கைக்ஜோ" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற "அகாசி கைக்ஜோ" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
ஜம்ஷெட் சதம்; பாகிஸ்தான் வெற்றி – தினமணி
மாணவிக்கு பல்வேறு நாடுகளில் அஞ்சலி - தினமலர்
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
05-01-13 6.00 PM onwards |
Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
|
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance
|
Sri Hayagriva & Lok kala Manch
|
Contact no: 8130681100, 9868931832
|
06-01-13 10.30 AM onwards |
Delhi Tamil sangam, RK Puram
|
Thalainagaril Marghazhi Mahotsavam
10.30 am to 12pm : Music by Delhi University Students
(Unison of North-South)
12 to 1.30 pm : Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor Dinamani
|
Sri Hayagriva
| |
Till 4/01/13
6 p.m to 8 p.m.
|
Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
|
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
|
Dwarkalaya
|
011-23517689
|
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by
Dr. A.S.Aravamudachariyar
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
12/01/13
6:00 pm onwards
|
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
|
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi - 110062
|
9810641038,9811799051
Email: delhincrspcc@gmail.com
|
13/01/13
7:00 am onwards
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
7:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm : Mahadeeparadhanai
1:30 pm : Annadhanam
| |||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |