Saturday, June 7, 2014

07-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

07-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௨௪(24) சனி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 4

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

ஈவது விலக்கேல்

Eevadhu Vilakkael

ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.

Never prevent others from providing charity

பொருள்:

ஈவது ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பது

விலக்கேல் தடுக்காதே

சிறுகதை:

Resource: http://athichudi.blogspot.kr/

ஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும் பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில் அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.

ஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமொப்பி கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த‌டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு பாவங்களை செய்தவராகிறார்.

தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம்,இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.

இப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் தவிப்பார்கள் என்றும்,அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள் பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

 

மகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்.இவனால் துரத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகாபலியால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைச் சொல்லி அவற்றை நீக்க முறையிட்டுக் கொண்டார்கள்.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் ஒரு குட்டை பிரம்மச்சாரியாய் உருவமெடுத்து வாமனன் என்ற பெயருடன் சக்ரவர்த்தி மகாபலியிடம் வந்து தாம் அமர்ந்து ஜபம்செய்ய தமது காலடியால் மூன்றடி மண் யாசகம் கேட்டார்.

 

அப்பொழுது மகாபலியின் குருவாகிய சுக்கிராச்சாரியார் சக்ரவர்த்தியிடம்"அரசே உங்களிடம் யாசிக்கின்ற இவரை சாமன்யராக நினையாதீர் கெட்டவர்களை க‌ண்டித்து நல்லவர்களைக் காக்கும் கடவுளே உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார் அவர் கேட்டபடி தானம் செய்யாதீர்கள்"என்று தடுத்தார்.மகாபலியோ"எனக்கு எப்படிப்பட்ட தீங்கு நேரிட்டாலும் அவர் கேட்டதைத் தருவேன்"என்ற மன உறுதியோடு வாமனர் கேட்டபடி மூவடி மண் தானம் செய்ய தீர்மானித்தான்.

 

அப்பொழுது வாமனரும் தன் கையில் இருந்த கெண்டியை மகாபலி கையில் கொடுத்து தமக்கு மூவடி மண் தானம் செய்ய வேண்டினார்.மகாபலியும் கெண்டியில் உள்ள‌ நீரை வாமனர் கையில் வார்த்து தானம் செய்ய தொடங்குகையில் சுக்கிராச்சாரியார் மிகச்சிறிய உருவெடுத்து கெண்டியின் மூக்கில் நுழைந்து நீரை வரவிடாமல் தடுத்தார்,இதையறிந்த வாமனர் தன்னிடமுள்ள‌ தருப்பை ஒன்றால் கெண்டியின் மூக்கினுள் குத்தி மகாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவர் உணவும் உடையும் இன்றி கஷ்டப்படவேண்டும் என்று சாபமும் கொடுத்தார்.இதனால் கண்ணில் காயமடைந்து மிகுந்த வருத்தத்துடன் சுக்கிராச்சாரியார் விலகி நிற்க மகாபலியும் வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்தார்.

 

அதுபோது வாமனர் திரிவிக்கிரமராய் பெரிய உருவெடுத்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மாகாபலியை பாதாளத்தில் அழுத்திவிட்டார்.

தானம் கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண்ணிழந்த நிலையில் உணவும் உடையும் இன்றி வருந்தி கஷ்டப்பட்டார்.

உங்களுக்குத் தெரியுமா?

1893 ஜூன் 7 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.

ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவியமக்கள் இயக்கமாகும்.  இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. 

 மேலும் படிக்க  

செய்திகள்

அவைக்கு தயாராக வாருங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல் - தினமணி

காலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்: மோடி அறிவுரை தி இந்து

பொது பட்ஜெட்: 9ஆம் தேதி நிதி அமைச்சர்கள் கூட்டம்-  தினமணி 

வாளுடன் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல் தினமலர்

உத்தரகண்ட் போலி என்கவுன்டர்: 18 போலீஸார் குற்றவாளிகள்: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு -  தினமணி 

தடையில்லாத மின்சாரம், மானிய விலையில் உரம்: குறுவை ... -  தினமணி  

உலகக் கோப்பை ஹாக்கி: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இல்லையேல் ... - தி இந்து

பிரெஞ்ச் ஓபன் இறுதியில் நுழைந்தார் நோவக் ஜோகோவிச்  - தி இந்து

வீடு வாடைகைக்கு    

Ready to move from 1.6.14.(Preference for vegetarian families) 2BHK flat available for rent at Kendriya vihar, sector 51, Noida. Fully furnished with vetrified tiles, comprising living/dining room, two bed rooms, two toilets, two balconies facing park. Flat situated in 1st floor. Sector close to City Centre Metro Station.

Expected rent: RS. 20,000/- Contact : 9810217028/9810170390

4BHK Flat Available For Rent / Bank Lease at Kendriya vihar - II, sector 82, noida. 1800 sft.  Furnished, comprising Living/Dining room, Four Bed Rooms, Four Toilets out of which three are attached with Master Bedroom/Bedrooms.  Living room and Master Bedroom/Bedrooms have attached Balconies.  Flat situated in 2nd floor. Lift available. Expected Rent: Rs.30,000-35,000/- (Negotiable). For details Contact : R. Thyagarajan 9968269506/9868288022

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15.06.2014

06.30 PM Onwards

Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi

BHAJAN SANDHYA

Performance by Smt Mahathi & Party at 6.30 PM.

The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir

 

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment