Friday, June 13, 2014

13-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

13-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௩௦(30) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 9

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

ஐயமிட்டு உண்

Ayyamittu Unn

 

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்

Share your food with the needy, before you eat

பொருள்:

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டபின் உண்ணவேண்டும் என்பதே இப்பாடலின் நேர்முக விளக்கமாகும். இதன் உட்பொருள் யாதெனில், உண்பது எவ்வாறு நமது வாழ்வாதாரத்திற்கான அடிப்படை செயலோ, அவ்வாறே நம்மால் இயன்றவரை பிறர்க்கு உதவுவதையும் நமது அன்றாட வாழ்வின் அடிப்படை செயலாக கொள்ளவேண்டும். இப்பாடலில் வலியுறுத்தப்படும் கருத்தின் ஆழத்தை மேலும் அறிய திருக்குறளின் ஈகை அதிகாரத்தை ஆய்வு செய்க.

சிறுகதை: Resource:  http://athichudi.blogspot.kr/

இல்லை என்று வந்த ஏழை களுக்கு பிச்சை இட்டு தானும் உண்ண வேண்டும் என்பது இதன் பொருள். இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள் சிறந்தது.

"வறியார்க்கொன்றீவதேயீகை"என்று இதனை பாராட்டி கூறி இருக்கின்றார்கள் முன்னோர். தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம் வேண்டும்.

 

மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர் பிறரால் எளிதாக செய்ய இயலாத அசுவமேதமென்கிற யாகம் ஒன்று செய்தார். பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில் மேன்மை அடைந்த வேதியர்களும்,தவ சிரேஷ்டர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

 

தருமபுத்திரர், வந்திருந்த அந்தணர் முதலியவர் களுக்கு அளவற்ற செல்வங்களை தானம் செய்து கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போல பிரகாசிக்க அங்கு வந்து தருமபுத்திரர் முன்னால் வெள்ளமாய் ஓடும் தானசெய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது,அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

 

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து "கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?இங்கு வந்து ஏன் இப்படி புரளுகிறாய் என்று கேட்டார்.இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

 

"ஐயா அரசரில் சிறந்தவரே!நான் வசித்துவரும் காட்டில் ஒரு ஏழை முனிவர்(குடும்பத்துடன் தவம் செய்பவர்)வந்து சேர்ந்து குடிசை ஒன்று அமைத்து அதில் தமது மனைவி,மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார்.காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவைகளே அவர்களுக்கு உணவு.

 

ஒரு தடவை மழையே இல்லாமல் இவைகளும் கிடைப்பது அரிதாகி விட்டது.அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேர்த்து அதனை மாவாக அரைத்து சாப்பிடுவார்கள்.சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

 

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது தானியங்களை சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து"ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது,பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது அளிக்கவேண்டும்"என்று மிகவும் கெஞ்சி பிச்சை கேட்டு நின்றார்,கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை.

 

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து உபசரித்தார். அது அந்த முதியவருக்கு போதவில்லை அதை அறிந்த மற்ற மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார்.அவர் அந்த இடத்தை விட்டுச் சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

 

அன்ன ஆகாரமின்றி பல பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களை கண்டேன்.

 

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது,அந்த மா ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

 

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்த தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே" என்று கூறிய கீரி மேலும்..

 

"எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்,ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள் மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது,ஆதாலால் நீங்கள் செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி பூஜையே மிகவும் சிறந்தது!"

 

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்சென்றது கீரிப்பிள்ளை.

உங்களுக்குத் தெரியுமா?

FIFA

·         பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது.  

·         இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது.

·         உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "உலகக்கோப்பை காற்பந்து" (FIFA World Cup) ஆகும்.

·          இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 208 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன. மேலும் படிக்க

செய்திகள்

வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி உறுதி- தினமணி 

இஸ்லாமியர் முன்னேற்றத்திற்காக அரசு செயலாற்றும்: பிரதமர் மோடி தி இந்து

சோனியா மீதான வழக்கு: அமெரிக்க கோர்ட் தள்ளுபடி- தினமலர்

 ராணுவ தளபதி சுஹாக் நியமனம் இறுதியானது: அருண் ஜேட்லி- தினமணி 

மலிவு விலை 'அம்மா' உப்பு விற்பனையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்-  தி இந்து

மோடியுடனான சந்திப்பு: நவாஸ் ஷெரீப் பெருமிதம்- தினமலர்

பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்- தி இந்து

இந்திய ஏ அணிக்கு திவாரி, உத்தப்பா கேப்டன்- தினமணி 

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள்: இந்திய நேரப்படி அட்டவணைதி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

13.06.2014

&

14.06.2014

10.00 AM to 1.30 PM

IGNCA Lecture Room, 11 Mansingh Road, entry opp. Raksha Bhavan.

Summer Puppet Camp for Children: Exploring shadow Puppetry inspired from Nagaland: Puppet making and performance workshop.

IGNCA is organizing a special Children's workshop to expose students to the Traditional Naga Art  of shadow puppet. There will be staged performances, informative Video, live storytelling, puppet making and providing a platform to the students to perform themselves. The children will be introduced to the rich shadow puppetry traditions of Andhra Pradesh, Kerala, Orissa, China & Indonesia and will also explore the experimental Naga puppetry featuring the Tsungteptsu Naga painting style and Naga folklore.

IGNCA warmly invites parents, students and scholars to come and discover this fascinating form.

 

 

14.06.2014

3.00 PM

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலப் படைப்புகள்  - ஒரு முரண்பாடு

திருமிகு. ஸ்ரீ. வரதராஜ்

உதவிப் பேராசிரியர், பகத்சிங் கலை அறிவியல் கல்லூரி - 20நி

ஆர்.கே. நாரயணின்  ' தி இங்லிஸ் டீச்சர் ' - ஒரு சிறப்புப் பார்வை

முனைவர் நா.சிவக்குமார்

மொழிபெயர்ப்பாளர்- 20நி

கலந்துரையாடல் - 30 நி

தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்  

தில்லித் தமிழ்ச் சங்கம

www.dhilligai.blogspot.in

&

www.facebook.com/dhilligai1   

 

 

 

26.06.2014

04.30 PM to

05.30 PM

IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001

IGNCA Book Circle  @ Reference Library

Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game

 

Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m.

 

Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library.

 

 

15.06.2014

06.30 PM Onwards

Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi

BHAJAN SANDHYA

Performance by Smt Mahathi & Party at 6.30 PM.

The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir

 

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment