25-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
சோம்பேறி என்பவன் இரண்டு முள்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை - கூப்பர். | ||||
நாளொரு நாலடி – 73 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பொறையுடைமை (PATIENCE) காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம் மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப! ஆவ தறிவார்ப் பெறின்.
அன்புடையார் செல்லுங் கடுஞ்சொல்லை இன்சொல்லாகக் கொள்ள வேண்டும். பொருள்: மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவா¢ன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.). Explanation: Harsh words of those who love are better than complaisant words of foes. Lord of the swelling sea's cool shore, where bright insects hum around every flower!—Are severe words from loving lips harder to bear, if men can only rightly estimate their result, than pleasant words that strangers courteously speak? | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
கடுஞ்சொல் : கடியவார்த்தை , an angry expression , harsh word. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும், முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும். முற்கால மற்றும் பிற்கால செப்பேடுகளில் ஏழு செப்பேடுகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவை, இளையன்புதூர் செப்பேடுகள் வேள்விக்குடிச் செப்பேடுகள் திருவரமங்கலத்துச் செப்பேடுகள் சின்னமனூர் செப்பேடுகள் (சிறியவை) சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை) பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள் சிவகாசிச் செப்பேடுகள் காலநிரல் | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai. Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இருநாடுகளின் 5000 ...- தினகரன் ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு இடத்தை மன்மோகன் ...- தினகரன் சிதம்பரம் வீடு முன் முற்றுகை இந்து மக்கள் கட்சியினர் கைது- தினமலர் ஜெனிவாவில் நாளை தொடங்குகிறது ஐ.நா மனித உரிமை பேரவை ...- 4தமிழ்மீடியா இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி..-தினமணி ஆசிய ஸ்குவாஷ்: தங்கம் வென்றது மகளிர் அணி - தினமணி கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: பாக்., இன்னிங்ஸ் தோல்வி- தினமலர் ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான முக்கிய ஆவணங்களை கொடுத்தது ...- தினகரன் தோனி இரட்டைச் சதம்; இந்தியா-515/8 - தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
25/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-SANGAMAM 2013 Festival of Classic Music Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar | Sunaad nadam brahmanandam | |
26/02/2013 7.00 PM onwards | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | |||
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman | ||
01/03/2013 5.45 PM onwards | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi | Purandaradasa Tyagaraja Music Festival Vocal by Mahadevan Sankaranarayanan | R.K.Puram South Indian Society and Lok Kala Manch | 26517637, 43069636 |
02/03/2013 6.00 PM onwards | Ramana Kendra, Lodhi Road, New Delhi | Vocal By Akshay Padmanaban | ||
03/03/2013 6.00 PM onwards | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi | Vocal By Dr. P. B. Kannakumar | ||
03/03/2013 6.30 PM onwards | Sri Ram Mandir Dwarka, Sector 7 | Carnatic Vocal Concert by Kum. Aishwarya Lakshmi & party | Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment