Wednesday, April 9, 2014

09-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

09-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௨௬  (26) புதன், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 6

விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி.

''அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?'' என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

''இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது'' என்று மகள் சொன்னாள்.

''சரி, ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு. அந்தப் பெண்ணை வரச்சொல்'' என்று அய்யர் சொன்னார்.

மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள். அப்பால் கீழே சென்றாள். சில கணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாட்சி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து ஜீ.சுப்பிரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்தாள்.

 

எந்த விசாலாட்சி? சென்ற அத்தியாத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாட்சி. அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணிய அய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள்.

''எந்த ஊரம்மா?'' என்று அய்யர் கேட்டார்.

''பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி என்ற கிராமம்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''ஓஹோஹோ! மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப் பிழைக்க அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன். அதே வேளாண்குடிதானா?'' என்று அய்யர் கேட்டார்.

விசாலாட்சி ''ஆம்'' என்றாள்.

''நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று?'' என்று அய்யர் கேட்டார்.

''பதினைந்து வருஷங்களாயின'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''உனக்கு இப்போது எத்தனை வயது?'' என்று அய்யர் கேட்டார்.

''இருபத்தைந்து'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?'' என்று அய்யர் கேட்டார்.

''ஆம்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

அதைக் கேட்டவுடனே தமது சொந்த மகளருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகு தாம் அவளுக்கு பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்தும், அம் மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிக விரைவிலே மடிந்ததும், தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும்-ஆகிய இச்செய்திகளெல்லாம் ஜீ.சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர, அப்போது, சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி, அவர் பச்சைக் குழந்தை போல் விம்மி விம்மி அழத் தலைப்பட்டார். சில கணங்களுக்குள்ளே தம்மைத் தாம் தேற்றிக்கொண்டு, ஜீ.சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி, ''நீ இங்கே வந்ததின் நோக்கம் யாது?'' என்று கேட்டார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

புளியம்கொம்பை கல்வெட்டுகள் என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் தமிழ் நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும். காலம் கி.மு.300 ஆகும்.

3 கல்வெட்டுகளின் செய்திகள்

1.    கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.

2.    அன் ஊர் அதன்

3.    வேள் ஊர் அவ்வன் பதவன்

ஆகோள்

சங்க இலக்கியங்களில் வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளை கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீர மரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றுள் ஆகோள் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதிலும் அது காணப்படுவதால் இதில் குறிப்பிடப்படும் வீரன் கூடலூரில் நடந்த வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யலாம்- தேர்தல் ஆணையம் அனுமதி-  தி இந்து

தேர்தல் ஆணையத்திடம் பணிந்தார் மம்தா- தினமணி

ராமர் கோயில், பொது சிவில் சட்டம்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு -  தி இந்து

 ஐநா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது: பீரிஸ் - பிபிசி

118 கோடியுடன் ஆந்திரா முதலிடம் பறக்கும் படைகள் மூலம் 195 கோடி ... தினகரன்

 ரான்பாக்ஸி பங்குகளை வாங்கியது சன் பார்மா: 400 கோடி ...-  தி இந்து

டேவிஸ் கோப்பை உலக பிரிவில் செர்பியாவுடன் இந்தியா மோதல் -  தினகரன்

டெல்லி NCR பகுதியில்  வீடு  வாங்கும் எண்ணம் உள்ளோர் கவனத்திற்கு...

கிரேட்டர் நொய்டா ( மேற்கு) [ நொய்டா எக்ஸ்டென்ஷன்) பகுதியில் வர உள்ள 500 வீடுகள் கொண்ட குடியிருப்பை சேர்ந்த ஒரு நிறுவனம், நமது சங்க உறுப்பினர்களுக்கு கார்பரேட் டிஸ்கவுன்ட்" அளிக்க விழைகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன், டெல்லி NCR பகுதியில்  வீடு  வாங்கும் எண்ணம் உள்ளோரிடம் கருத்து கணிப்பு நடத்த விரும்புகிறோம்.

 

1.    நொய்டா எக்ஸ்டென்ஷன் பற்றி உங்கள் கருத்து.

2.    அவ்வை தமிழ்ச் சங்கம் இம் முயற்சியை மேற்கொண்டால் உங்கள் ஆதரவு கிடைக்குமா?

3.    என்ன வசதிகள் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

உங்கள் விவரங்களை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

09/04/2014

07.00 PM onwards   

AMALTAS, India Habitat Center

Lodi Road, New Delhi

Rasikapriya's SANKALP

Carnatic vocal by Kum. A.Akashaya

Violin: Sh.N. Arvindd

Mridangam: Sh.K.N. Padmanabhan

Rasikapriya

09818192497

09/04/2014 to 13/04/2014

Sri Baba Balak Nath Mandir

Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi

SREE RAMA NAVAMI FESTIVAL

Mayur Vihar South Indian Association

22751324

E-mail: mvsia81@gmail.com

09/04/2014 to 13/04/2014

Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar,

New Delhi -110 023,

Sri Rama Navami Celebrations 2014

Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By

Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M

South Indian Samaj

rammandap@gmail.com

011-24671303

12/04/2014 05.00 PM onwards   

Sri Ishta Siddhi Vinayakar Temple

Ayur Vihar Ph-3,

Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar

Sri Adi Sankara Sewa Samajam

22621464

13/04/2014 06.00 AM onwards   

Panguni Uthiram Celebrations

12/04/2014 06.30 PM onwards   

Dr.Ambedkar Auditorium, A.P.Bhawan, I,  Ashoka  Road,

New Delhi

Kuchipidi Ranga Pravesam

by Ms M.S.V. Vaishnavi

Nattuvangam: Guru Smt.Seetha Nagajothy

Vocal: Dr.Rupa

Mridangam: Sri Kesavan

Violin: Sri VSK Annadurai

Abhinaya Praneetha Kuchipudi Art Society

 

13/04/2014 04.30 PM onwards   

Sri Sankatahara Ganapathy Temple,        Vasundhara Enclave, East Delhi                

Sri Rama Navami Celebrations

Seetha Kalyanam by

Sri Dakshinamurthy Bhagawathar & Group

R.K. Vasan

President

8826655855

14/04/2014

07.00 PM onwards   

Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi

Bhajan / padi poojai

 (Swamiye Saranam Ayyappa) Tamil New Year

 

9350899916 / 9718478274

15/04/2014

06.00 AM onwards   

 Vishukani

16/04/2014

07.00 PM onwards   

Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai.

14/04/2014 06.30 PM onwards   

Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka

Panchanga Patanam

Dwarkalaya

 

20/04/2014 08.00 AM onwards   

Thiruppugazh Isai Vazhipadu

18/04/2014

06.00 PM onwards   

IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi

 

Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free

Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2

Chithirai Music And Dance Festival : Dedicated To Tamil Composers

DR. S. SOWMYA Vocal

Parur M.S. Ananthakrishnan -Violin

Poongulam Subramaniam -Mridangam

(Composers: M. M. Dandapani Desikar, Dr. S. Ramanathan,

Koteeswara Iyer, Arunachala Kavi, Ambujam Krishna,

Periasami Thooran, Thevaram, Tiruppavai)

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

And

Indira Gandhi National Centre For The Arts

9811569564

9717019444

19/04/2014

06.00 PM onwards   

KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal

Parur M. S. Ananthakrishnan -Violin

Poongulam Subramaniam -Mridangam

(Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan,

Gopalakrishna Bharathi, Papanasam Sivan,

Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar,

Ramalinga Vallalar)

20/04/2014

06.00 PM onwards   

Priya Venkataraman & Party Bharatanatyam

Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment