11-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி-௨௮ (28) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 8 | |||||
விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி. ஜீ.சுப்பிரமணிய அய்யர் தலையைச் சொரிந்தார். சிலகணங்களுக்கப்பால் விசாலாட்சியை நோக்கிச் சொல்லுகிறார்:- ''ராஜமஹேந்திரபுரத்தில் என்னுடைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் வீரேசலிங்கம் பந்துலு, அவர் விதவைகளுக்கு விவாகம் செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன் வசம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பார்'' என்றார்.
''சரி'' என்றாள் விசாலாட்சி. உடனே, ஜீ.சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியைக் குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து, ''என்ன வேண்டுமப்பா?'' என்று கேட்டாள்.
''அந்த வேலைக்காரப் பயல் இன்னும் வரவில்லையோ?'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் உறுமினார். ''அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான், ஸ்மித் ஷாப்பிலே போய் மருந்து வாங்கிக் கொண்டு வர? இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்?'' என்றாள்.
''என்னுடைய மேஜை மேலே, பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன். மேஜை திறந்துதான் இருக்கிறது. அதற்குள்ளே வலப்பக்கத்து அறையில் கடிதமெழுதுந் தாளும் உறைகளும் கிடக்கின்றன. ஒரு தாளும் ஒரு உறையும் கொண்டு வா. மையத்தும் தாளையும் எடுத்து வா'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.
அவர் வேண்டிய சாமான்களையெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். ஜீ.சுப்பிரமணிய அய்யர் ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு, அதை மகளிடம் கொடுத்து ''உறையை சரியாக ஒட்டிக் கொண்டு வா'' என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும், மைக்கூட்டையும் மையத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்துவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். ஜீ.சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாட்சியை நோக்கி, ''உனக்குத் தெலுங்கு தெரியுமா?'' என்று கேட்டார். ''தெரியும்'' என்றாள் விசாலாட்சி. ''எங்கே படித்தாய்?'' என்று அய்யர் கேட்டார். ''எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்குப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேச வரும்'' என்றாள்.
''சரி, உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக் கடவீர்'' என்று சொல்லி, அய்யர் அவளிடம் காகிதத்தைக் கொடுத்தார். அவள் அக்கடித்தை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு ஜீ.சுப்பிரமணிய அய்யரை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றனள். அக்குழந்தையும் ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று. நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சாம்பல் கூழைக்கடா ( Spot-billed Pelican or Grey Pelican - Pelecanus philippensis ) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர். கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%, - தினமணி ஓட்டளிக்க தேவையான ஆவணம் தி.மலை கலெக்டர் விளக்கம் - தினமலர் அமைதியாக முடிந்தது மூன்றாம் கட்ட தேர்தல் - தினமலர் இலங்கைப் பொருளாதாரம்: உலக வங்கியின் கணிப்பீடு சரியா? - பிபிசி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இறுதி கட்டத்தை ... - தினத் தந்தி சென்னை ஐடிஎஃப் காலிறுதி: இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் - தினமணி | |||||
Teachers Required | |||||
Singapore Indian Fine Arts Society is a 65 year old Institution with 1500 students who learn Indian Fine Arts. · We are looking for teachers for teaching Carnatic Vocal, Violin, and Veena. A person with multi-discipline is preferable. · Candidate preferably for vocal requirement is a lady tutor in middle age. · They will be provided with accommodation food and a salary of about Rs 60K per month. · They bring their spouse for a month to be with them and they get annual vacation in Dec for a month. For details Contact: P. S. Somasekharan (Vice President) Email: soma@nra.com.sg Singapore Indian Fine Arts Society 2A, Starlight Road, Singapore - 217755 Contact No: +65 - 6299 5929, Fax No: +65 - 6295 1238 Email: admin@sifas.org | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
11/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | Sree Rama Navami Festival | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
11/04/2014 to 13/04/2014 | Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar, New Delhi -110 023, | Sri Rama Navami Celebrations 2014 Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M | South Indian Samaj | 011-24671303 | |
12/04/2014 05.00 PM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
12/04/2014 06.30 PM onwards | Dr.Ambedkar Auditorium, A.P.Bhawan, I, Ashoka Road, New Delhi | Kuchipidi Ranga Pravesam by Ms M.S.V. Vaishnavi Nattuvangam: Guru Smt.Seetha Nagajothy Vocal: Dr.Rupa Mridangam: Sri Kesavan Violin: Sri VSK Annadurai | Abhinaya Praneetha Kuchipudi Art Society |
| |
13/04/2014 04.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 (Monday) – 6.30 PM | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi 110085 | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 | |
14/04/2014 07.00 PM onwards | Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi | Bhajan / padi poojai (Swamiye Saranam Ayyappa) Tamil New Year |
| 9350899916 / 9718478274 | |
15/04/2014 06.00 AM onwards | Vishukani | ||||
16/04/2014 07.00 PM onwards | Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai. | ||||
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu | ||||
18/04/2014 06.00 PM onwards | IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi
Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2 | Chithirai Music And Dance Festival : Dedicated To Tamil Composers DR. S. SOWMYA Vocal Parur M.S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: M. M. Dandapani Desikar, Dr. S. Ramanathan, Koteeswara Iyer, Arunachala Kavi, Ambujam Krishna, Periasami Thooran, Thevaram, Tiruppavai) | Shanmukhananda Sangeetha Sabha (Regd) And Indira Gandhi National Centre For The Arts | 9811569564 9717019444 | |
19/04/2014 06.00 PM onwards | KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal Parur M. S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan, Gopalakrishna Bharathi, Papanasam Sivan, Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar, Ramalinga Vallalar) | ||||
20/04/2014 06.00 PM onwards | Priya Venkataraman & Party Bharatanatyam Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more | ||||
18/04/2014 06.30 PM onwards | Ghalib Institute, Matasundari Road, near Bal Bhavan, ITO, New Delhi . | 21st Sangeet Martand Ustad Chand Khan Music Festival & Award. · Sufi performance by Sufis of Dilli · Ghazal recital by Chhaya Ganguly · Folk/Thumri recital by Smt Malini Awasthi
| Sursagar Society of Delhi Garana | 9911420896 | |
19/04/2014 06.30 PM onwards | · Sarod Recital by Shri Amaan Ali · Vocal recital by the Ustad Iqbal Ahmed Khan · Santoor Recital by Pandit Bhajan Sopori | ||||
20/04/2014 06.30 PM onwards | · Tabla duet by Akbar Latif & Babar Latif · Sitar recital by Ustad Saeed Zafar Khan · Vocal recital by Ustad Abdul Rasheed Khan | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, April 11, 2014
11-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment