10-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௨௭(27) வியாழன், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 7 | |||||
விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி. ''என்னைத் தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப்படுத்திக் கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு கொழும்புக் காசுகூடக் கிடையாது. ஆதலால், என் கணவன் பணமுடையவனில்லாவிட்டாலும் நல்ல படிப்பும், மாதந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்'' என்றாள். ''இந்த குழந்தை ஏது?'' என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
''இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில் அழிந்தபோது, நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும் பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும் அடங்கிச் சிறிது நேரத்துக்கப்பால் இக்குழந்தை பிறந்தது. இதைப் பெறும் கடமை தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய் விட்டாள். சாகும் போது இதன் காவலை என் மீது சுமத்திக் கட்டளையிட்டாள்'' என்று விசாலாட்சி சொன்னாள். ''இந்த மூன்று வருஷங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய்?'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
''செம்புப் பிச்சை; உவாதானமெடுத்து வயிறு வளர்த்து இந்தக் குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்'' என்றாள்.
ஜீ.சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து விசாலாட்சி கையில் கொடுத்தார். விசாலாட்சி கையில் கொடுத்தார். விசாலாட்சி அதனை எழுந்து நின்று வாங்கி, இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டாள். ''சரி, அம்மா, நீ போய் வா'' என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் சொன்னார். அப்போது விசாலாட்சி சொல்லுகிறாள்:- ''ஐயா நான் தங்களைப் பிதா ஸ்தானமாக பாவித்துத் தங்களிடம் பணம் வாங்க உடம்பட்டேன். எனினும், நான் இங்கு வந்தது தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதற்கன்று என்பதைத் தாங்கள் மறக்கக்கூடாது; கணவனை வேண்டி உங்களிடம் வந்தேன்'' என்றாள்.
அது கேட்டு ஜீ.சுப்பிரமணிய அய்யர்:-''அந்தக் காரியம் என்னால் செய்து கொடுக்க முடியாது'' என்றார்.
''தங்களைத் தவிர எனக்கு வேறு புகலுமில்லை'' என்று. விசாலாட்சி வற்புறுத்தினாள். ''என்னால் சாத்தியமில்லையே! நான் என்ன செய்வேன்?'' என்றார் அய்யர். ''நீங்கள் தயவு வைத்தால் சாத்தியப்படும்'' என்று விசாலாட்சி சொன்னாள். ''உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா, நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபா கொடுத்தேன்?'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார். ''அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக தயவு செலுத்த வேண்டும்'' என்று விசாலாட்சி மன்றாடினாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
1912 - ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது. ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இளம் வாக்காளர்களுக்கு...- தி இந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 875 பேர் போட்டி- தினமணி கார்த்தி சிதம்பரம் மீதான புகார்: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மறுப்பு - தி இந்து செவ்வாயை நோக்கிய பாதையில் பாதி தொலைவை கடந்த மங்கள்யான் - தினமணி வதோதராவில் மோடி வேட்புமனு தாக்கல்: டீக்கடைக்காரர் முன்மொழிந்தார்- தி இந்து எம்.எச்.370: 'கடலுக்கு அடியில் மீண்டும் சிக்னல் பதிவு' - தி இந்து 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 4 வடகிழக்கு மாநிலங்களில்... - தினத் தந்தி தேர்தல் :வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகை - தினமலர் | |||||
டெல்லி NCR பகுதியில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளோர் கவனத்திற்கு... | |||||
கிரேட்டர் நொய்டா ( மேற்கு) [ நொய்டா எக்ஸ்டென்ஷன்) பகுதியில் வர உள்ள 500 வீடுகள் கொண்ட குடியிருப்பை சேர்ந்த ஒரு நிறுவனம், நமது சங்க உறுப்பினர்களுக்கு கார்பரேட் டிஸ்கவுன்ட்" அளிக்க விழைகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன், டெல்லி NCR பகுதியில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளோரிடம் கருத்து கணிப்பு நடத்த விரும்புகிறோம்.
1. நொய்டா எக்ஸ்டென்ஷன் பற்றி உங்கள் கருத்து. 2. அவ்வை தமிழ்ச் சங்கம் இம் முயற்சியை மேற்கொண்டால் உங்கள் ஆதரவு கிடைக்குமா? 3. என்ன வசதிகள் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் உங்கள் விவரங்களை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
10/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | SREE RAMA NAVAMI FESTIVAL | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
10/04/2014 to 13/04/2014 | Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar, New Delhi -110 023, | Sri Rama Navami Celebrations 2014 Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M | South Indian Samaj | 011-24671303 | |
12/04/2014 05.00 PM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
12/04/2014 06.30 PM onwards | Dr.Ambedkar Auditorium, A.P.Bhawan, I, Ashoka Road, New Delhi | Kuchipidi Ranga Pravesam by Ms M.S.V. Vaishnavi Nattuvangam: Guru Smt.Seetha Nagajothy Vocal: Dr.Rupa Mridangam: Sri Kesavan Violin: Sri VSK Annadurai | Abhinaya Praneetha Kuchipudi Art Society |
| |
13/04/2014 04.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 (Monday) – 6.30 PM | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi 110085 | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 | |
14/04/2014 07.00 PM onwards | Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi | Bhajan / padi poojai (Swamiye Saranam Ayyappa) Tamil New Year |
| 9350899916 / 9718478274 | |
15/04/2014 06.00 AM onwards | Vishukani | ||||
16/04/2014 07.00 PM onwards | Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai. | ||||
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu | ||||
18/04/2014 06.00 PM onwards | IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi
Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2 | Chithirai Music And Dance Festival : Dedicated To Tamil Composers DR. S. SOWMYA Vocal Parur M.S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: M. M. Dandapani Desikar, Dr. S. Ramanathan, Koteeswara Iyer, Arunachala Kavi, Ambujam Krishna, Periasami Thooran, Thevaram, Tiruppavai) | Shanmukhananda Sangeetha Sabha (Regd) And Indira Gandhi National Centre For The Arts | 9811569564 9717019444 | |
19/04/2014 06.00 PM onwards | KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal Parur M. S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan, Gopalakrishna Bharathi, Papanasam Sivan, Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar, Ramalinga Vallalar) | ||||
20/04/2014 06.00 PM onwards | Priya Venkataraman & Party Bharatanatyam Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, April 10, 2014
10-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment