Monday, April 28, 2014

28-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

28-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௧௫  (15) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 22

வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து

''முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சியில்லாதவள். கல்விப் பயிற்சியில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதையெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்'' என்று பந்துலு சொன்னார்.

அதற்கு கோபாலய்யங்கார்-''நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல சங்கீத ஞானம் - இன்னும் எத்தனையோ லட்சணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அ•தற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளைக் கீழ்க்குலத்துப் பெண்கள் மிக விரைவிலே கற்றுக் கொள்ள முடியும். அந்த நாகரிக நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம் குடியிருந்தால் போதும். அந்தப் பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.

 

''உலக அனுபவமில்லாத பதினாலு வயதுப் பச்சைப் பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது. முப்பது வயதாய், உயர்ந்த சர்க்கார் வேலையிலிருந்து சகலவித லௌகிக அனுபவங்களுமுடைய தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமாகக் கொண்டது. புதுமை மாறிப் போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவுப் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

 

''மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும் சத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.

 

செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு-'' சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்'' என்றார்.

அப்போது கோபாலய்யங்கார்-''அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?'' என்று கேட்டார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா.

·         இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.

·         ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

·         இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

·         தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.

·         உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பொறுப்பேற்பு -  தி இந்து

 ஊழல் சக்திகளை அகற்ற புதிய செயல் திட்டம் -  தினமணி

ஃபரூக் அப்துல்லாவின் பொதுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு? -  தி இந்து

மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் ... - தினமணி

என் மகன் ஒரு குழந்தைபோல் என்னை கவனித்துக் கொண்டான்: மேஜர் ... - தி இந்து

போட்டி போட்டு பொய் கூறுகின்றனர் : சோனியா, ராகுல் மீது ... -  யாஹூ

 வாடிகன் நகரில் நடந்த விழாவில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் ...- தினத் தந்தி          

படகு விபத்து: தென்கொரிய பிரதமர் ராஜிநாமா-  தினமணி

லா லிகா கால்பந்து: ரொனால்டோ 2 கோல்: ரியல் மாட்ரிட் வெற்றி -  தினமணி

வீடு வாடகைக்கு   

1BHK flat available for rent/lease in Pratap Vihar,near Santhosh Medical College, Ghaziabad, just 4 kms from sector 63, Noida. Nominal rate, only for south indians. Contact Dr Ram Shanmugam, Safdarjang Hospital. Mobile: 9716934196,9868436946 in fb as Ram Shanmugam.

5 Bedroom floor available on Rent at Sector 92, Noida. 5 Bedroom with Bathroom, Hall, Kitchen portion available in the 2nd floor with independent entry and good enough privacy. House owner in the G/Floor and F/Floor is occupied by doctor couples. Secured with Surveillance camera and provision for 24 Hours SOFT water, it is ideal for a group of employed professionals of either gender. For details Contact: R. Manikandan Mobile: +91 9899165543

மணமகன் / மணமகள் தேவை   

Sh. Srinivasan (alias Arun), B.S.Marine Engineering from BITS, Pilani employed in Merchant Navy as an Engineer, DOB 15.3.1986, Star Barani, Gothram Haritham Iyer , Father Sh. N.S.Ganapathy Subramanian based in Hari Nagar, New Delhi. Contact No 98993 29688 / 2812 4512 Mail ID: gsubramanian1953@gmail.com

Ms. Gayathri, B.Tech (Computer Science) working with Intra Info Technology –Noida,Height 5'5",DOB 29.4.89 Star Avittam 2nd Padam,Gothram Bharadwajam,Rasi Makara,Sect Iyer Vadama,Parents Smt. Bhuvaneshwari & Sh. Mahadevan.B.,Sibling/s 1 brother younger. Doing Btech (Mech ) from Amrita, Bangalore. Contact: Sh. Bhuvaneshwari Mahadevan,  Mobile: 99119-21989, Mail ID: bhuvana.gayu_1989@hotmail.com.  Resident of Delhi.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment