Monday, April 14, 2014

14-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

14-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௦௧ (01) திங்கள், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

***அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்***

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 10

விசாலாட்சியின் ஏமாற்றம்

''இங்கிலீஷ் தெரியுமா?' என்று பந்துலு கேட்டார்.

''தெரியாது'' என்றாள் விசாலாட்சி.

''கொஞ்சங் கூட?'' என்று கேட்டார்.

''கொஞ்சங்கூடத் தெரியாது'' என்றாள்.

''சங்கீதம் தெரியுமா?'' என்று பந்துலு கேட்டார்.

''எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''வீணை, பிடில், ஹார்மோனியம்-ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?'' என்று பந்துலு கேட்டார்.

''ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை'' என்றாள் விசாலாட்சி.

''தாளந் தவறாமல் பாடுவாயா?'' என்று பந்துலு கேட்டார்.

''தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக்காட்டு, பார்ப்போம்'' என்று பந்துலு கேட்டார்.

அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாட்சி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று.

''என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்'' என்று பந்துலு சொன்னார். அவள் அக்குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழுகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள்.

''கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்'' என்றாள் கிழவி.

''ஆமாம்! எனக்கென்ன தெரியும்? படிப்புத் தெரியுமா, இழவா? நீ தான் சகலகலா பண்டிதை'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.

அப்பால், வீரேசலிங்கம் பந்துலு தமக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களையெல்லாம் விரித்துக் கூறினார்.

அவருடைய மனைவி இதைக் கேட்டு:- ''சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ? அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்கவேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ? அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் இவள் ருது ஆவதற்கு முன்னேயிறந்தானா? பிந்தி இறந்தானா?'' என்று வினவினாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- ''அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறிவிட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்து போய் இப்போது பதினைந்து வருஷங்களாயின'' என்றார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956

·         இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.

·         பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்;

·         இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

·         2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

·         இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தமிழக நலனில் திமுக-அதிமுகவுக்கு அக்கறையில்லை: நரேந்திர மோடி- தினமணி

தமிழ்ப் புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து -  தினமணி

தாய்லாந்து: விபத்துகளில் 102 பேர் பலி-  தினமணி

கிரிக்கெட்டில் இருந்து கால்பந்துக்கு குதித்தார்: கொச்சி ... தினமலர்

தாய்லாந்து: விபத்துகளில் 102 பேர் பலி – தி இந்து

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மானவ்ஜித் ... - தி இந்து

Teachers Required

Singapore Indian Fine Arts Society is a 65 year old Institution with 1500 students who learn Indian Fine Arts.

·         We are looking for teachers for teaching Carnatic Vocal, Violin, and Veena. A person with multi-discipline is preferable.

·         Candidate preferably for vocal requirement is a lady tutor in middle age.

·         They will be provided with accommodation food and a salary of about Rs 60K per month.

·         They bring their spouse for a month to be with them and they get annual vacation in Dec for a month.

For details Contact: P. S. Somasekharan (Vice President) Email: soma@nra.com.sg

Singapore Indian Fine Arts Society

2A, Starlight Road, Singapore - 217755

Contact No: +65 - 6299 5929, Fax No: +65 - 6295 1238 Email: admin@sifas.org

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

14/04/2014

(Monday) –

6.30 PM

Kali Mandir,

Pocket -7,  Sector-2,

Rohini,

Delhi 110085

Tamil New Year – Panchanga

Padanam By

Shri Swaminatha Sastrigal

North West Delhi Cultural

Association, Rohini,

Delhi-85

R. Ayyappan

(M)9811207467

S. Natarajan

(M)9871166718

S. Murali

(M)9582288471

14/04/2014

07.00 PM onwards   

Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi

Bhajan / padi poojai

 (Swamiye Saranam Ayyappa) Tamil New Year

 

9350899916 / 9718478274

15/04/2014

06.00 AM onwards   

 Vishukani

16/04/2014

07.00 PM onwards   

Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai.

14/04/2014 06.30 PM onwards   

Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka

Panchanga Patanam

Dwarkalaya

 

20/04/2014 08.00 AM onwards   

Thiruppugazh Isai Vazhipadu

18/04/2014

06.00 PM onwards   

IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi

 

Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free

Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2

Chithirai Music And Dance Festival : Dedicated To Tamil Composers

DR. S. SOWMYA Vocal

Parur M.S. Ananthakrishnan -Violin

Poongulam Subramaniam -Mridangam

(Composers: M. M. Dandapani Desikar, Dr. S. Ramanathan,

Koteeswara Iyer, Arunachala Kavi, Ambujam Krishna,

Periasami Thooran, Thevaram, Tiruppavai)

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

And

Indira Gandhi National Centre For The Arts

9811569564

9717019444

19/04/2014

06.00 PM onwards   

KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal

Parur M. S. Ananthakrishnan -Violin

Poongulam Subramaniam -Mridangam

(Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan,

Gopalakrishna Bharathi, Papanasam Sivan,

Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar,

Ramalinga Vallalar)

20/04/2014

06.00 PM onwards   

Priya Venkataraman & Party Bharatanatyam

Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more

18/04/2014

06.30 PM onwards   

Ghalib Institute, Matasundari Road, near Bal Bhavan, ITO, New Delhi .

21st Sangeet Martand Ustad Chand Khan Music Festival & Award.

·         Sufi performance by Sufis of Dilli

·         Ghazal recital by Chhaya Ganguly

·         Folk/Thumri recital by Smt Malini Awasthi

 

Sursagar Society of Delhi Garana

9911420896

19/04/2014

06.30 PM onwards   

·         Sarod Recital by Shri Amaan Ali

·         Vocal recital by the Ustad Iqbal Ahmed Khan

·         Santoor Recital by Pandit Bhajan Sopori

20/04/2014

06.30 PM onwards   

·         Tabla duet by Akbar Latif & Babar Latif

·         Sitar recital by Ustad Saeed Zafar Khan

·         Vocal recital by Ustad Abdul Rasheed Khan

21/04/2014

to

27/04/2014

09.30 AM onwards   

D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon

Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM

Evening Session: 6 PM -7.30PM

 

9313634923

880961207

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment