Monday, April 21, 2014

21-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

21-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௦௬ (08) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 16

வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து

அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவஸ்திரீகளின் நாட்டியச் செயல்களையத்திருந்தன.

இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக்கண்ணுக்கு முன்னே எழுந்தது.

''குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார். ''தெரியும்'' என்றாள் சந்திரிகை. ''எங்கே'', ஒன்று பாடு, கேட்போம்'' என்றார் கோபாலய்யங்கார்.

''அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?'' என்று சந்திரிகை கேட்டாள்.

''பாடு'' என்றார் கோபாலய்யங்கார்.

சந்திரிகை பாடத் தொடங்கினாள்:-

நந்தலால் பாட்டு

யதுகுல காம்போதி ராகம்-ஆதி தாளம்.

ஸஸ்ஸாஸா-ஸம்மாபதா-பததபபமபா-பாபா

பநீஸதபா-மாகா-ஸரிமகரீ-கெகரிரிஸஸா.

பார்க்கு மரத்திலெல்லாம், நந்தலாலா-நின்றன்

பச்சை நிறந்தோன்றுதடா, நந்தலாலா;

காக்கைச் சிறகினிலே, நந்தலாலா-நின்றன்

கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;

கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா-நின்றன்

கீத மிசைக்கு தடா, நந்தலாலா;

தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா-நின்னைத்

தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.

இந்தப் பாட்டடை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிடத் தெரிந்தது. அவர் தம்முடைய ஜன்மத்தில் இவ்வித சங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை.

''இதுதான் சுவர்க்கம்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

 

''எது?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

''இந்தக் குழந்தையின் பாட்டு'' என்று அய்யங்கார் சொன்னார்.

''சங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

அதற்கு கோபாலய்யங்கார்- ''மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்'' என்றார்.

''குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்'' என்று பந்துலு சொன்னார்.

''அவையும் சேர்ந்துதான்'' என்று அய்யங்கார் சொன்னார்.

இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப் போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

பாரதிதாசன்

(ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.

இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்.

தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சோனியா நீலிக்கண்ணீர்: மீனவர் பிரச்னை பற்றி ஜெயலலிதா தினமணி

திருவனந்தபுரம் கோயில் தங்கம் மணல் லாரியில் தஞ்சை வந்ததா?தி இந்து

தேர்தல் பரப்புரைக்காக அத்வானி, ராகுல்காந்தி இன்று தமிழகம் ... - புதியதலைமுறை தொலைக்காட்சி

நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிட்டன! : பத்மநாப ... -தினமலர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை -  தினமலர்

கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து உடல்கள் மீட்பு நீச்சல் வீரர்கள் ... - தினத் தந்தி

ரிச்மாண்ட் ஓபன் ஜோஷ்னா சாம்பியன்- தினகரன்        

மேக்ஸ்வெல், மில்லரின் அதிரடி தொடருகிறது: ராஜஸ்தானை ... - தினத் தந்தி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

21/04/2014

to

27/04/2014

09.30 AM onwards   

D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon

Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM

Evening Session: 6 PM -7.30PM

 

9313634923

880961207

26/04/2014

06.30 PM onwards   

Lok Kala Manch

Venu Ganam by Mr. P. Nagarajan,  Supporting Artists:  Violin - Mr. Arvindd Narayanan, Mridangam - Mr. Kumbakonam N Padmanaban, Ghatam - Mr. Mannai N Kannan

Lok Kala Manch

P. Nagarajan, Mobile:  9871386870

27/04/2014

06.15 PM onwards   

MCD Community Centre,

Mayur Vihar – 3, Delhi

Chithirai Festival

Kovai Ashok presents Mimicry Comedy Show

Mimicking 100 sounds in 10 minutes

Sentamizh Peravai (Regd.)

88002-64137

88002-63991

88002-63992

27/04/2014

04.00 PM onwards   

Delhi Tamil Sangam Auditorium, RK Puram, New Delhi.

DWARKALAYA's CHITHIRAI ISAI VIZHA  (ANNUAL CLASSICAL MUSIC PROGRAM ) 2014'

04.00 PM

Carnatic Vocal by Smt.Charanya Lakshmikumaran (Disciple of Dr.K.Vageesh)

5.30PM

Welcome address and annual felicitation of senior artists

6.30 PM

For the first time in Delhi a  Carnatic Classical Concert by Nagaswaram maestro

Kalaimamani Sri V.S.K  Chakrapani  - Violin

Kumbakonam Sri N.Padmanabhan – Mridangam

Ustad Sri Rashid Zafar Khan - Tabla

Dwarkalaya

98101 16465

98180 84125

சென்னை 

22/04/2014

06.45 PM onwards   

Narada Gana Sabha, Alwarpet, Chennai

அடகடவுளே  a thoughtful play

Inauguration of  new play

(13 th production)

Story and Dialogues by Ezhichur Aravindan

Produced by Raji Ganesh

Directed by Mappillai Ganesh

 

Sathyasai Creations

044-24711523

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment