Tuesday, April 22, 2014

22-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

22-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௦௯ (09) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 17

வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி, ''இந்தக் குழந்தையையும் இதன் அத்தையையும் பற்றிய கதை சொல்வதாகத் தெரிவித்தீர்களே? இப்போது சொல்லுகிறீர்களா?'' என்று கேட்டார்.

பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார்.

''என் ஜன்மம் பலிதமாய் விட்டது'' என்றார் கோபாலய்யங்கார்.

''அதெப்படி?'' என்று பந்துலு கேட்டார்.

''இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது'' என்றார் அய்யங்கார்.

இதைக் கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகலவென்று நகைத்தார்.

''ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்று அய்யங்கார் கேட்டார்.

''விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே! அதைக் கேட்டு நகைத்தேன். தங்களை மணம் புரிந்து கொள்ள அந்தப் பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ? இன்று ராத்திரி அவள் போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். சாதாரணமாக, இந்து ஸ்திரீகளிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும் பரஸ்பரம் சந்தித்து சம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளைக் காலையில் என் மனைவியின் மூலமாக அந்தப் பெண்ணுடைய சம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் சம்மதமுணர்த்துவாளாயின், பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்'' என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார் ''அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமுமில்லை'' என்றார்.

''அப்படியே செய்யுங்கள்'' என்றார் பந்துலு.

பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.

 

கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நித்திரை போய்விட்டார்.

 

கோபலய்யங்கார் தூங்கிக் கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறுசுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத் தேர்ச்சி பெற்றவள். நமது விசாலாட்சியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிகத் தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும்,

''பிராமணா: போஜனப்ரியா: '' (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுசரிப்பதில் சாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்தூரம் மேற்பட்டவர்.

பிராமணர்களை குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தைப் பலர் உபயோகப்படுத்துகிறார்கள். 'பார்ப்பானுக்குச் சோற்று ருசியில் மோகம் அதிகம்' என்று மற்ற ஜாதியார் சாதாரணமாகச் சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில சமயங்களில் இதைத் தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறை போல பேசிக்கொள்ளுகிறார்கள். சில சமயங்களில் தம்மைத் தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ்வசனத்தைக் கையாடுகிறார்கள். வேறு சில சமயங்களில் மற்ற ஜாதியாரிடமிருந்து பணங் கேட்பதற்கு முகாந்தரமாக இந்த வாக்கியத்தைத் தவிர்க்கொணாத விதியைப் புலப்படுத்துவது போல் எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன். ''ஸர்வோ ஜநா: போஜனப்பிரியா:'' எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மோடி அல்ல; லேடி தான்: சென்னையில் ஜெ., ஆவேசம் -தினமலர்

பெரியாறு அணை விவகாரம்: திமுக மீது ஜெயலலிதா அபாண்டம்தினமணி

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால்கூட மோடி அலை தமிழகத்தில் இல்லை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா பேச்சு -  தி இந்து

மீத்தேன் எரிவாயு திட்டத்தை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் ... - தினத் தந்தி

 கருப்பை புற்றுநோய் ஆய்வில் அலட்சியம்: 254 பெண்கள் பலி -  தி இந்து

ஜப்பானில் உள்ள துணை நிறுவனங்களை மிட்ஸூபிஷியுடன் ... -  தினமணி

ஐபிஎல்: சென்னை பந்துவீச்சில் சுருண்டது டெல்லி - தி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

22/04/2014

to

27/04/2014

09.30 AM onwards   

D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon

Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM

Evening Session: 6 PM -7.30PM

 

9313634923

880961207

26/04/2014

06.30 PM onwards   

Lok Kala Manch

Venu Ganam by Mr. P. Nagarajan,  Supporting Artists:  Violin - Mr. Arvindd Narayanan, Mridangam - Mr. Kumbakonam N Padmanaban, Ghatam - Mr. Mannai N Kannan

Lok Kala Manch

P. Nagarajan, Mobile:  9871386870

27/04/2014

06.15 PM onwards   

MCD Community Centre,

Mayur Vihar – 3, Delhi

Chithirai Festival

Kovai Ashok presents Mimicry Comedy Show

Mimicking 100 sounds in 10 minutes

Sentamizh Peravai (Regd.)

88002-64137

88002-63991

88002-63992

27/04/2014

04.00 PM onwards   

Delhi Tamil Sangam Auditorium, RK Puram, New Delhi.

DWARKALAYA's CHITHIRAI ISAI VIZHA  (ANNUAL CLASSICAL MUSIC PROGRAM ) 2014'

04.00 PM

Carnatic Vocal by Smt.Charanya Lakshmikumaran (Disciple of Dr.K.Vageesh)

5.30PM

Welcome address and annual felicitation of senior artists

6.30 PM

For the first time in Delhi a  Carnatic Classical Concert by Nagaswaram maestro

Kalaimamani Sri V.S.K  Chakrapani  - Violin

Kumbakonam Sri N.Padmanabhan – Mridangam

Ustad Sri Rashid Zafar Khan - Tabla

Dwarkalaya

98101 16465

98180 84125

சென்னை 

22/04/2014

06.45 PM onwards   

Narada Gana Sabha, Alwarpet, Chennai

அடகடவுளே  a thoughtful play

Inauguration of  new play

(13 th production)

Story and Dialogues by Ezhichur Aravindan

Produced by Raji Ganesh

Directed by Mappillai Ganesh

 

Sathyasai Creations

044-24711523

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment