Monday, May 5, 2014

05-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

05-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௨௨ (22) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 27

விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள்

கோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதமில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாட்சி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தாள். அதற்குப் பந்துலுவின் மனைவி ''நீ எங்களுடன் இங்கேயே இன்னும் பத்துப் பதினைந்து நாள் இரு. இன்னும் சில தினங்கள் வரை பந்துலு கோபாலய்யங்காரின் விவாகத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே கருத்துச் செலுத்த நேரும். உன் விஷயத்தைக் கவனிக்க அவருக்கு அவகாசம் இராது. பத்து நாள் ஆன பின்பு நாங்கள் ராஜமஹேந்திரபுரத்துக்குப் போவோம். நீயும் எங்களுடன் வா. எப்படியாவது உனக்கு நான் வரன் தேடிக் கொடுக்கிறேன். ஆனால் அவசரப்படுவதில் யாதொரு காரியமும் நடக்காது. சிறிது காலம் பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்'' என்றாள்.

 

இதுகேட்டு விசாலாட்சி:- ''மயிலாப்பூரில் என்னுடைய அம்மங்கார் (மாமன் மகள்) இருக்கிறாள். அவளுடைய புருஷன் ஹைகோர்ட் வக்கீல் உத்தியோகம் பார்க்கிறார். பந்துலுகாரு கோபாலய்யங்கரின் விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கையில், நான் இங்கு சும்மா ஏன் இருக்க வேண்டும்? இந்தப் பத்து நாளும் நான் போய் மயிலாப்பூரிலே தாமஸிக்கிறேன். பத்து நாள் கழிந்தவுடன் இங்கு வருகிறேன்'' என்றாள்.

 

பிறகு அவர்கள் இவ்விஷயத்தைக்குறித்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் விசாலாட்சி தன் இஷ்டப்படி செய்வதைத் தடுக்கத் தமக்கு சம்மதமில்லையென்றும், அவள் மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும், இதற்கிடையில் அவசரம் நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்குக் கடிதமனுப்பி விசாலாட்சியைத் தருவித்துக் கொள்ளக் கூடுமென்றும் தெரிவித்தார்.

''மயிலாப்பூரில் உன் பந்துவின் விலாசமெப்படி?'' என்று பந்துலு கேட்டார்.

 

அதற்கு விசாலாட்சி:- ''என் அம்மங்காருடைய ( மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும் அத்தை மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களக்குள்ளே பெயர்கள் வழங்கி வருகின்றன. சிலருக்கு ஒரு வேளை இச் சொற்கள் தெரியாமலிருக்கக்கூடுமாதலால் அவற்றை இங்கு விளக்கிக் கூறினேன்.) புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர்ச் ரஸ்தாவிலிருக்கிறார். அவருடைய பெயர் சோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மங்காரும் அவர் வீட்டிலிருக்கும் அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம் செய்துகொள்வதில் அவர்களுக்கு சம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை. நான் விவாகம் செய்துகொள்ளப் போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமகாத் தெரிவிப்பிதில் எனக்கு சம்மதமில்லை. ஆதலால், தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள். அந்தத் தேதியில் நான் இங்கு வருகிறேன். அதற்கிடையே என்னை மறந்து போய்விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருங்கள்'' என்றாள்.

 

அப்போது பந்துலு, ''நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்குரிய யோசனை என் புத்தியில் அகலாதே நிற்கும். நீ அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டா. ஜனவரி மாதம் இருபதாந் தேதி நான் இங்கிருந்து ராஜமஹேந்திரபுரத்துக்குப் புறப்படப் போகிறேன். நீ ஜனவரி மாதம் பதினெட்டாந்தேதி இங்கு வா'' என்றார்.

 

இது கேட்டு விசாலாட்சி:- ''தாங்கள் இந்த ஊரிலிருக்கும்போதே எனக்கொரு வரன் தேடிக் கொடுக்க முயற்சி பண்ணுவதே உசிதமென்று நினைக்கிறேன். இது ராஜதானிப் பட்டணம். இங்கு கிடைக்காத வரன் ஒதுக்கமான கோதாவரிக் கரையில் எங்ஙனம் கிடைக்கப் போகிறான்?'' என்றாள்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

கியானி ஜெயில் சிங் (மே 5, 1916 - டிசம்பர் 25, 1994) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீர்ராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் என பல தளங்களில் செயல்பட்டவர்.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மகாராஷ்டிர பயணிகள் ரயில் விபத்தில் 18 பேர் பலி; காயம் 145 -   தி இந்து

 பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது அசம்கார்: அமித் ஷா - யாஹூ 

செய்தியாளர் சந்திப்பு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: பாஜக -  தி இந்து

தமிழ் அமைப்புகள், ஆர்வலர்களுக்கு சர்வதேச தடை: இலங்கைக்கு இணங்கிய இந்தியா; புறக்கணித்த அமெரிக்கா -  தினமணி

சிறுபான்மையினர் நம்பிக்கையை பெறுவோம்: ராஜ்நாத் சிங் -  தி இந்து

ஆப்கான் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது: 350 பேர் பலி, 2000 பேர் மாயம் -  தி இந்து

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரம் -  தினமணி

டிவில்லியர்ஸிடம் ஹைதராபாத் சரண் -  தினமணி

திராவிட், வாட்சன் ஊக்குவிப்பால் தொடக்க வீரராக ஜொலித்தேன் ... -  தினமணி

வீடு வாடகைக்கு   

A penthouse apartment on 10th floor consisting of 3 bedrooms, hall, kitchen with 3 bathrooms and a modular kitchen 2 bedrooms have 2 attached balconies and the third bedroom has a huge open terrace of 1200 sq ft area. Drawing room also has an attached balcony. The apartment is park facing and is located only 1 km from sector 13 metro station. Extra amenities:

1. Covered car parking;

2. Security;

3. Power backup;

4. RO (Aquaguard for water purification);

5. Geyser in 2 bathrooms & kitchen;

6. Complete wooden cupboards in all 3 bedrooms;

7. Separate area for washing machine;

Size of the apartment: 1675 sq. feet; Size of terrace : 1200 sq.feet; Preference is for company lease. For details, please contact Ms. Veena Grover at 9910046191. (Principal of DTEA, Janakpuri.)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

05/05/2014

to

07/05/2014

10.30 A.M. to 7.00 P.M

Twin Art Gallery-II,C.V. Mess, Janpath

Exhibition

of some rare photographs of Dr. Rashid Jahan. 

Indira Gandhi National Centre for the Arts

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment