29-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௧௫ (15) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 48 | |||||
சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட, சோமநாதய்யருக்கும் சிறிது சிறிது அமர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை.
காதற்கோயில் மிகத் தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள் எண்ணிறந்தன.
கண்ணைக் குத்திப் பார்வையை அழித்துக் கொள்ளுதல் சுலபம். ஆனால் இழந்த பார்வையை மீட்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா? சோமநாதய்யருக்குக் குருட்டுக் கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண் கொடுக்கவேண்டுமென்ற விருப்பத்துடன் முத்தம்மா வேலை செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்கு சகிக்க முடியாதனவாகவேயிருந்தன.
ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற பேராவல் அவருக்கும் இருந்தபடியால், சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாகத் தோன்றினும், பல்லைக் கடித்துக் கொண்டு, தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு சகித்துக் பழகினார்.
எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும் பேசும்படிக்கும் வற்புறுத்தத் தொடங்கினார். இவர் எத்தனைக்கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத் தொடங்கினாரோ, அத்தனைக்கு அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். ''இவளை நாம் காதலுக்கு யோக்யதையில்லாத மனையடிமைப் புழுக்கச்சியாகவும் குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக் கருதி அதனை வேண்டிச் சருவப் புகுந்தபோது, இவள் பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும் பொறுக்க முடியவில்லையே! இதென்னடா கேலி! சொந்தப் பெண்டாட்டியைக் காதலிராணியாகக் கொண்டாடப் போனவிடத்தே அவள் நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது? பதிவிரதையாவது, வெங்காயமாவது? நாம் இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ, என்னவோ? எவன் கண்டான்? ஸ்திரீகளுடைய இருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார்? கடலாழங் காணுதல் எளிது; மாதர் மனத்தை ஆழங் காணுதல் அரிது. ஆண்மக்களைக் காட்டிலும் பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே, தலை வழுக்கையாய், நரை தொடங்கிக் கிழப்பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள் உண்மையாகவே அவமதிப்புக் கொண்டாளெனின் அ•தோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக விசித்திரம்! என் குடும்பத்தில் மாத்திரமா, உலக முழுமையிலும் மனிதரெல்லாரும் வீட்டுப்பெண்டாட்டியென்றால் அவள் தன் விருப்பத்துக்கு கடமைப்பட்ட அடிமைச்சியாகவே கருதுகிறார்கள். புதியதொரு சித்திரத் தெய்வத்தின்மீது காதல் கொள்வதுபோல் நான் சொந்தப் பெண்டாட்டியிடம் காதல் செய்யப் புகுமிடத்தே, அவள் என்னை இப்படிக் கேலி பண்ணுகிறாள். எனிலும் இவள் பதிவிரதையல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற தாய் இறக்கப் போகுந் தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதையென்று சொல்லிவிட்டு மடிந்தாளே. அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப்படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம் சொல்லக் கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்? மேலும், அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில், அவளுடைய முகத்தை நான் நன்றாக உற்று கவனித்தேனன்றோ? அவள் அச்சொல்லைப் பரிசுத்தமான இருதயத்துடனம் உண்மையான நம்பிக்கையுடனும் கூறினாளென்து அவள் முகத்தில் மிகத் தெளிவாக விளங்கிற்றன்றோ? மேலும், அவள் தீர ஆழ்ந்து பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடுமென்று நினைக்கப் புகுவோமாயின், அது பெரு மடைமைக்கு லட்சணமாகும். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். எத்துணை மறைந்த போதிலும் பெண் மர்மம் பெண்ணுக்குத் தெரிந்து விடுமன்றோ? ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இவளுடைய நடையை என் மாதா பத்து வருஷகாலமாக, இரவு பகல் கூடவேயிருந்தது மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வந்தவளன்றோ? மேலும் என் மாதா புத்திக்கூர்மையில்லாத மந்தமா? இருபது கம்பிளியை போட்டு ஒரு ரகசியத்தை மூடி வைத்தாலும், அது அவளுடைய கண்களுக்குத் தெரிந்து விடுமன்றோ? தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை. அதில் ஐயப்படுவது மூடத்தனம். 'ஐயமுற்றான் அழிவுறுவான்' என்று பகவத் கீதையில் கண்ணபிரான் அருளிச் செய்திருக்கிறானன்றோ? நிச்சயமாக நம்முடைய புத்திக்குப் புலப்படும் உண்மையன்றைப் பற்றி வீண் சம்சயப் படும் அதிகாரம் மனத்துக்குக் கொடுப்போமாயின், அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய முத்தம்மா பதிவிரதைதான். நம்முடைய உண்மையைச் சோதி த்-தறியும் பொருட்டாகவே, நம்மை இந்த வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமைத் தழல் அவிந்து போக இடங் கொடுக்கக்கூடாது. இதனால் நாம் அவளிடம் விரசப்படலாகாது. அவள் தான் நமக்குத் தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக்கலாத்திலும் நம்முடைய வழிகளை இருள் மூடாத வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்ய விளக்கன்றோ இந்தக் கண்மணி முத்தம்மா? மேலும், மூட நெஞ்சமே! பாவியாகிய புழு நெஞ்சமே! முத்தம்மா நம்மை என்ன சோதனைகள் செய்கிறாள்? ஊடல் தானே பண்ணுகிறாள்? ஊடலன்றோ காதலின் மிக இனிய பகுதியாவது? நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers · ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். · இத்தினம் மே 29ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. | |||||
செய்திகள் | |||||
முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்து: நஜ்மாவால் சர்ச்சை- தி இந்து 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் - தினமணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அரசியலில் நுழைய தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ் - தி இந்து காஷ்மீர் அந்தஸ்து -சர்ச்சை தொடர்கிறது - பிபிசி மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு - தினமலர் உலகின் குண்டு மனிதர் "மேனுவல் மெமெ உரைப்"பின் உடல் லாரியில் ... - தினமணி இறுதிச் சுற்றில் கொல்கத்தா: பஞ்சாபை வீழ்த்தி முன்னேறியது- தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: R. Ramanathan, Place of Birth: Purasaiwalkam,Chennai, Qualification: BCA, Job Details: Works for Dell at Porur DLF, chennai as a Team Lead in Quality. Date of Birth: 18-05-1975, Time of Birth: 5.05 M, Lagnam: Mesham, Raasi: Kadagam, Star: Ayilyam, Padam: 3, Gothram: Bharadwajam, Parents: Father- Retired Govt employee, Mother-Housewife, , Siblings: 1 younger sister married and settled in Chennai, Salary per annum: 6 lakhs PA, Languages Known: Tamil, English, Hindi, Marathi, Konkani, and Kannada,Tamil Matrimony # M1054458, SS Matrimony # 98100/75 Name: Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing), Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age: 28 years( 3rd Nov 1985), Height: 5' 9" Parents : Mrs Meera Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram: Athreya, Contact No: Mrs Meera 99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi. They stay in, Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business. The company he works for belongs to the family. The company is a very old logistic service provider here in Delhi. Name: Jayashree Chandrasekaran, Qualification: BE, MS( Computer Science) from Georgia Tech, Atlanta, US, Working currently in Atlanta, US with Airwatch., Star: Poorattadhi 3rd Padam, Kumba Raasi, Gothram: Srivatsa Gothram, Sect/Sub-sect: Iyer: Vadamal, Height: 5'10", DOB: 16.12.88 ( Age: 25+), Sibling: No; Parents: Mrs Meera Chandrasekaran works with SBI in Delhi. Mr. R. Chandrasekaran is a Chartered Accountant working as GM with Power Finance Corporation Ltd in Delhi. Contact: Mrs. Meera 98115 13580 Mr. Chandrasekaran 98685 49073 Name: S. Revathi, Place Of Birth: Mayiladuthurai, Qualification: M.A. (Psychology), Date Of Birth: 05-07-1990, Raasi : Viruchiga, Star: Anusham, Gothram : Vadula Gothram, Parents: Working With Semi-Conductor In Punjab, Settled In: Chandigarh, Languages Known: Hindi, English, Tamil, Contact No: 9560467212, Usha Ravi – Delhi, Email Id: Usharavi31@Rediffmail.Com | |||||
வீடு வாடைகைக்கு | |||||
Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida. Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy. Other furnishings like cot + bed can be provided on request. Taxi & door delivery of South Indian food available on call. Please contact manikandan2311@yahoo.co.in / sujatha2311@hotmail.com OR Call : +91 9899165543 / 50. 2 BHK one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida. Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
31.05.2014 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி |
|
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, May 29, 2014
29-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment