24-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௧௦(10) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 44 | |||||
சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ''பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்'' என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.
இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள். அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில்-நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.
ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.
இந்த சங்கதிகளெல்லாம் சோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத் தென்படலாயின. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்து போய்விட்டாள். அவள் சாகுமுன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: ''அட, அய்யா, சோமூ! உன் பொண்டாட்டி முத்தம்மாளை நீ சாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மகா பதிவிரதை. உன்னை சாட்சாத் பகவானுக்கு சமமாகக் கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில் லட்சுமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப்போட்டு வைத்துக் கொள். குழந்தாய், சோமு. அந்தப் பராசக்தி லலிதாம்பிகை தான் உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் சந்தோஷ பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்'' என்றாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) · ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். · சூரியனைச் சுற்றும் கோள்கள் போலப் புவியும் ஒரு சாதரணக் கோள் தான்" என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. · இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர், கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார். · அவரது நூலான ஆன் தி ரிவலூஷன்ஸ் ஆஃப் தி ஹெவென்லி பாடீஸ் (On The Revolutions of The Heavenly Bodies) இலத்தீன் மொழியில் இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது. · இத்தாலிய வானியல் அறிஞர்களான கலீலியோ கலிலி (கி. பி. 1564-1642) புரூனோ போன்றோர் கோப்பர்நிக்கசின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கோப்பர்நிக்கசின் நூல் மேல் விழுந்தது. · நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே கி. பி. 1616இல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை. | |||||
பத்தாம் வகுப்பு: 19 பேர் முதலிடம்! 2-ஆம் இடம் 125 பேர்; 3-ஆம் இடம் 321 பேர்; மொத்தத் தேர்ச்சி 90.7% - தினமணி ஆப்கானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: மோடி கண்டனம் - தி இந்து நதி நீர் பிரச்னைகள்: வெற்றி மேல் வெற்றி! - தினமணி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மேலும் 1 வாரம் கால குழு ... – தினகரன் உபெர் கோப்பை பாட்மிண்டன்: இந்திய அணிக்கு வெண்கலம் - தினமணி செரீனாவுக்கு எதிராக இதர வீராங்கனைகளின் போராட்டம் - தினமணி மும்பைக்கு வாய்ப்பு இருக்கிறது!- தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217. Name: Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing), Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age: 28 years( 3rd Nov 1985), Height: 5' 9" Parents : Mrs Meera Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram: Athreya, Contact No: Mrs Meera 99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi. They stay in, Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business. The company he works for belongs to the family. The company is a very old logistic service provider here in Delhi. | |||||
வீடு வாடைகைக்கு | |||||
1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196. HOUSE FOR RENT – Available at Sector III Vaishali, Ghaziabad near Pushpanjali Hospital/Mahagun Mall, from June 1, 2014 - Two bedroom flat, with a huge drawing/dining and big modular kitchen, bathroom with bathtub, second floor, very close to vaishali metro station and close to Delhi border/Ghazipur. Tamilians preferred – Rent Rs.15,000. Contact 8826655855 for details. Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida. Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy. Other furnishings like cot + bed can be provided on request. Taxi & door delivery of South Indian food available on call. Please contact manikandan2311@yahoo.co.in / sujatha2311@hotmail.com OR Call : +91 9899165543 / 50. 2 BHK one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida. Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.05.2014 06.00 AM Onwards
| South Delhi Apartment, Plot# 8, Sector-4, Dwarka, New Delhi | 4th Akhand Sai Gayathri Jaap 06.00 AM Ganapati Pooja 06.15AM Ekadasa Rudra Jaap and Abhishekam to Sai Baba 08.30AM Aatri " Shirdi Majhe Pandharpur" 08.45AM Start of Akhand Shirdi Sai Gayathri Jaap and it will continue till next morning 0900hrs. (Jaap will continue for whole day and night ) |
| 9811500224 9873690224 | |
25.05.2014 09.30 AM Onwards | 09.00AM Vishnu Sahasranama Parayanam / Yagna with 1008 times 09.30AM Vishnu Sahasranama Homam 11.30AM Puranahathi 11.45AM Shirdi Sai Baba Palki procession 12.00PM Maha aarti and followed by Mahaprasadam distribution | ||||
24.05.2014 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன் குழுவினர் |
|
| |
25.05.2014
| 11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம் | ||||
31.05.2014 06.30 PM Onwards | கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, May 24, 2014
24-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment