Wednesday, May 21, 2014

21-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

21-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௦௭ (07) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 41

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும் உட்கார்ந்து கொண்டு, அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

 

''காபி போட்டுக் கொண்டு வரலாமா?'' என்று முத்தம்மா கேட்டாள்.

 

''எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும் என் வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா, உபவாசம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டுக் கொண்டு வந்து குடித்துக் கொள்'' என்றார் சோமநாதய்யர்.

 

''எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதுவும் என்னைக் கண்டால் போதும், உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. 'இன்றைக்கு என் உடம்பு ஸௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை' என்று உங்கள் வாயினாலே சொல்ல ஒரு தரங்கூடக் கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒரு தரமேனும் காது குளிரக் கேட்கப் போகிறேனோ, அல்லது கேட்காமலே பிராணனை விடப் போகிறேனோ, தெரியாது. கை உளைச்சல், கால் உளைச்சல், அங்கு வீக்கம், இங்கு குடைச்சல், வயிற்றுவலி, தலைவலி, அஜீர்ணம், அஜீர்ணம், அஜீர்ணம்-எப்போதும் இதே அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்'' என்றாள்.

சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்துவிட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். ''நன்றி கெட்ட நாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும் பாடு 'பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ?' நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் சம்பாதித்துக் கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப் போயிருக்கிறது. எத்தனையோ பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்ற வேண்டியிருக்கிறது. நீதி ஸ்தலத்திலே போய் மனமறிந்த பொய்களைச் சொல்வதே நமக்குப் பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும் சரி, வேசைத் தொழிலும் சரி. தர்மத்தைக் கெடுத்து இகத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு உன் பொருட்டாகப் பாடுபடுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்றுப் போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை. தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டைத் தண்ணீரை வற்றடிக்குந் தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்பட்டு மலச்சிக்கல் உண்டாக்குகிறது. மலச்சிக்கலே சர்வ ரோகங்களுக்கும் ஆதாரமென்று நவீன வைத்திய சாஸ்திர பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் உடம்பில் எப்போதும் ஓய்வின்றி ஏதேனும் வியாதி இருந்து கொண்டேயிருக்கிறது. இதனாலும் குழந்தைகளுக்கு உடம்புக்கேதேனும் வந்தால் அப்போது என் மனத்திலுண்டாகும் பெருந் துயரத்தாலும் அவர்களுடம்பு நேரே இருக்க வேண்டும், கடவுளே, என்றெண்ணி நான் எப்போதும் ஏக்கப்படுவதனாலும், தலை மயிர் நரைத்துப் போய்விட்டது. மண்டையில் வழுக்கை விழுந்துவிட்டது. உனக்காகப் பாடுபட்டே நான் கிழவனாய் விட்டேன். உன் தொல்லையாலேயே என் பிராணன் போகப் போகிறது. அடா, தீராத நோயிருந்தால், எப்படி சகிப்து? ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வாரமா, இரண்டு வாரமா, ஒரு மாதமா, இரண்டு மாதமா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, உன்னுடன் கூடி வாழத் தொடங்கிய கால முதலாக இன்றுவரை எப்போதும், ஒரு கணந் தவறாமல் என் உடம்பு ஏதேனம் ஒரு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது. இத்தனை நோயையும் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை சாகாமலிருக்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும் கைம்மாறு யாது? பேதைச் சொற்கள், மடச்சொற்கள், பயனற்ற சொற்கள், மனதைச் சுடும் பழிச் சொற்கள், காது நரம்புகளை அறுக்கும் குரூரச் சொற்கள், இவையே நான் பெறும் கைம்மாறு. ஓயாமல் 'புடவை வேண்டும்', 'ரவிக்கை வேண்டும்', 'குழந்தைகளுக்கு நகைகள் வேண்டும்' ,- வீண் செலவு! வீண் செலவு! வீண் செலவு! என்ன துன்பம், என்ன துன்பம்! என்ன துன்பமடா, ஈசா! எனக்கிந்த உலகத்தில் சமைத்து விட்டாய்! இந்தக் கஷ்டத்தையெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ? என் பிராணன் என்றுதான் நீங்கப் போகிறதோ?'' என்று சொல்லி சோமநாதய்யர் அழத் தொடங்கிவிட்டார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

பிக் பென் (Big Ben)

·         1859 மே 21 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.

·         இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு.

·         நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.

·         இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது.

·         இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு 'பிக் பென்'னின் மணியோசைதான்.

·         இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.  

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 பிரதமராக மோடி 26-இல் பதவியேற்பு-  தினமணி

வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறும்:சந்திரபாபு ... – யாஹூ

காற்றாலை கைகொடுத்தும் 900 மெகாவாட் மின் பற்றாக்குறை -  தினமலர்

குஜராத் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மோடி – தி இந்து

தாய்லாந்து நாட்டில் ராணுவ சட்டம் அமல்- தினமலர்   

மந்தமான ஐபிஎல் விளம்பர வருவாய்: கடைசி 4 போட்டிகளில் எதிர்ப்பார்ப்பு– தி இந்து

 கொல்கத்தா வெற்றிக்கு வழிகாட்டிய உத்தப்பா, ஷாகிப்: சென்னை ... -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217.

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

வீடு வாடைகைக்கு     

1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical  College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196.

HOUSE FOR RENT – Available at Sector III Vaishali, Ghaziabad near Pushpanjali Hospital/Mahagun Mall, from June 1, 2014 - Two bedroom flat, with a huge drawing/dining and big modular kitchen, bathroom with bathtub, second floor, very close to vaishali metro station and close to Delhi border/Ghazipur.  Tamilians preferred – Rent Rs.15,000.  Contact 8826655855 for details.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன்  குழுவினர்

 

 

25.05.2014

 

11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம்

31.05.2014

06.30 PM Onwards

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment