Monday, May 26, 2014

26-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

26-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௧௨ (12) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 45

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. ''அத்தையருமை செத்தால் தெரியும்'' என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமைக் காலத்தில், சோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய இம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின் பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி வந்தார். அவள் ஒரேயடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும் மகிமை பொருந்திய தெய்வமாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தையெல்லாம் படைத்துக் காப்பவளாகிய சாட்சாத் ஜகன்மாதாவே தனக்குத் தாய் வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். '' புருஷ ஏவேதம்ஸர்வம்'' என்று வேதம் சொல்லுகிறது. இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்''-உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார். தோழனாகவும பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாவும், தாய் தந்தையாராகவும், பெண்டு பிள்ளைகளாவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும் கருணைகள் சால மிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரகங்களாக வணங்குதற்குரியர். அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப்படத் தக்கவள். இதனைக் கருதியே ''அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்'' என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சோமநாதய்யர் காமம் குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கிக் கொள்ளக்கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித் தெளிவு இடைக்கிடையே அந்தக் காம முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்கு சுடர் வீசும் சமயங்களும் இருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாலட்சியிடம் அவமானப்பட்ட கால முதலாக, அவர் பர ஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வந்தார். ''பாவத்தின் கூலியே மரணம்'' என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின், பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில் தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும் சக்திகள்.

 

எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப்பட்டவரல்லர். பெரும்பாலும், இப்பாவத்தை அவர் மானசீகமாகச் செய்து வந்தவரேயல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுசரித்தது கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:- அன்ய ஸ்திரீகளுடன் சம்பந்தப்படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்கு ஆட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன் மனைவியழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட்பட்டவனேயாவான்'' என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் சாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத் திருடி, ஊர்க்காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனையடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபகரிக்க வேண்டுமென்று மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.

 

ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் சுலபம், முற்றிப் போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித இருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் சுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித இருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அசாத்தியமன்று. ஆனால் மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் ''இளமையிற் கல்'' என்று உபதேசம் புரிந்தனர்

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

கற்றாழை

·         பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும்.

·         தமிழில் இத்தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது.

·         நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும் மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

·         இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது.

மேலும் படிக்க  

செய்திகள்

பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு: தெற்காசியத் ... - தி இந்து

1000 மெகாவாட் உற்பத்திக்குத் தயாராகும் தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையம்- தினமணி

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணம் தினத்தந்தி

சென்னையில் கடும் வெயில் ஏன்?: வானிலை ஆய்வு மையம் விளக்கம்- தி இந்து

ராணுவ ஆட்சிக்கு எதிராக தாய்லாந்தில் கலவரம்தினமலர்

70 ஆண்டு கால அம்பாசிடர் சகாப்தம் முடிந்தது-தினகரன்

ஊழல் புகாரில் ரூ.3600 கோடி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து: இந்தியா ... -  தினத்தந்தி

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 13 வயது ஆந்திர சிறுமி -  தினமணி

15 பந்துகளில் அரைசதம்: யூசுப்பதானின் அதிரடிக்கு கம்பீர் ...- தினத்தந்தி

ரியல் மாட்ரிட் சாம்பியன் - தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name: R. Ramanathan, Place of Birth: Purasaiwalkam,Chennai, Qualification: BCA, Job Details: Works for Dell at Porur DLF, chennai as a Team Lead in Quality.  Date of Birth: 18-05-1975, Time of Birth: 5.05 M, Lagnam: Mesham, Raasi: Kadagam, Star: Ayilyam, Padam: 3, Gothram: Bharadwajam, Parents: Father- Retired Govt employee, Mother-Housewife, , Siblings: 1 younger sister married and settled in Chennai, Salary per annum: 6 lakhs PA, Languages Known: Tamil, English, Hindi, Marathi, Konkani, and Kannada,Tamil Matrimony # M1054458, SS Matrimony # 98100/75

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

Name: Jayashree Chandrasekaran, Qualification: BE, MS( Computer Science) from Georgia Tech, Atlanta, US, Working currently in Atlanta, US with Airwatch., Star: Poorattadhi 3rd Padam, Kumba Raasi, Gothram:   Srivatsa Gothram, Sect/Sub-sect:   Iyer: Vadamal, Height: 5'10", DOB: 16.12.88 ( Age:  25+), Sibling: No;   Parents: Mrs Meera Chandrasekaran works with SBI in Delhi. Mr. R. Chandrasekaran is a Chartered Accountant working as GM with Power Finance Corporation Ltd in Delhi. Contact:   Mrs. Meera 98115 13580    Mr. Chandrasekaran   98685 49073

வீடு வாடைகைக்கு     

Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida.  Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy.  Other furnishings like cot + bed can be provided on request.  Taxi & door delivery of South Indian food  available on call.  Please contact manikandan2311@yahoo.co.in  / sujatha2311@hotmail.com  OR  Call : +91 9899165543 / 50.

2 BHK  one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida.  Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment