15-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௩௧(1) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
Avvai Tamil Sangam's yet another initiative to connect people with the help of technology this time. Yes.... Creating a What's App group. It will help sharing your thoughts, and also be updated with "Nammai chutri". Please click "ATS What's App" if you wish to join our group. | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 36 | |||||
விடுதலை ''எல்லாம் தெய்வச் செயல். நாமொன்று நினைக்க தெய்வமொன்று செய்கிறது'' என்று சொல்லி அவர் மனமாரக் கடவுளைப் போற்றித் தொழுதார். பிறகு விசுவநாத சர்மாவையும் விசாலாட்சியையும் பிரம சமாஜத்தில் சேர்த்தார். கோபாலய்யங்காருடைய விவாகம் நடந்து இரண்டு வாரத்துக்குள் மறுபடி சென்னை பிரம சமாஜ ஆலயத்திலேயே, அந்த சமாஜ விதிகளின்படி விசாலாட்சிக்கும் விசுவநாத சர்மாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று. விவாகம் நடந்த ஒரு வாரத்துக்குள் மிட்டாய்க்கடை சங்கரய்யரின் முயற்சியாலும் வேறு சில நண்பர்கள் முயற்சியாலும் நமது விசுவநாத சர்மாவுக்கு ஒரு உத்தியோகம் ஏற்பட்டது. தங்கசாலைத் தெருவிலே மூன்று, நான்கு குஜராத்தி ல‡ப் பிரபுக்களின் பிள்ளைகளுக்கு இந்தி, சமஸ்கிருதம், இங்கிலீஷ் மூன்று இராப்பாடம் சொல்லி வைக்க வேண்டியது. இதற்காக அவருக்கு அறுபது ரூபாய் மாதந்தோறும் சம்பளம் கிடைத்தது. சங்கரய்யர் வீட்டுக்கு சமீபத்தில் இரண்டு மனைகளுக்கப்பால் ஒரு வீடு காலியாக இருந்தது. சிறிய வீடு, கீழே இரண்டு மூன்று அறைகள். உயர்ந்த மாடி. அந்த வீட்டுக்குப் பின் அழகான தோட்டமிருந்தது. அதில் ஒரு சிறிய கூரை பங்களா புதிதாகத் தயார் பண்ணி, அதில் நாற்காலி, மேஜை, புத்தகங்கள், பிள்ளைகள் வந்தால் உட்காருவதற்கு நாற்காற் பலகைகள் முதலியன வாங்கி வைப்பதற்குரிய செலவெல்லாம் சங்கரய்யர் செய்தார். அந்த வீட்டில் புதிதாக விவாகமான தம்பதிகளை சங்கரய்யர் குடியேற்றினார். இவருக்கு விசுவநாத சர்மாவிடம் முன்னைக் காட்டிலும் நூறு பங்கு அதிக பக்தி ஏற்பட்டது. சில மாதங்கள் கழிந்த பிறகு, மேற்கூறிய குஜராத்திப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரும்படி கிடைக்கத் தொடங்கிற்று. ஆரம்பத்தில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலீஷ், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு வியாஸங்களும், தலையங்கங்களும் எழுதி சாஸ்திர விஷயங்களைப் போலவே லௌகிக விஷயங்களிலும் பயிற்சியால் உயர்ந்த ஞானமேற்படுத்திக் கொண்டார். எழுதும் திறமையிலோ, இங்கிலீஷிலும், தமிழிலும் அவருக்கு சமமான தொழிலாளி இந்த தேசத்திலேயே குறைவென்று கூறலாம். அதனால் பத்திராதிபர்கள் அவரெழுதும் வியாஸங்களை மிகவும் ஆவலுடன் ஏற்றுக் கொண்டு தக்க சம்பளம் கொடுக்கத் தொடங்கினார்கள். இங்கு கொஞ்சம் கை தேறியவுடனே, அவர் தக்க மனிதர்களுடைய சிபார்சால் பம்பாய் கல்கத்தா முதலிய வெளி நகரங்களில் பிரசுரமாகும் உள்நாட்டுப் பத்தரிகைகளுக்கும், இங்கிலாந்து, அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகளுக்கும் விஷயதானம் செய்யும் பதவி பெற்றார். இதிலெல்லாம் அவருக்கு மாதந்தோறும் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத வரும்படி வரத் தொடங்கிற்று. அவர் தீராத உழைப்பாளியாய்விட்டார்.
அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலைக் குறிகளெல்லாம் நீங்கிப் போய்விட்டன. எப்போதும் அவர் முகத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாட்சியோ முன்னிருந்த அழகைக் காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு ஒரு பசு வாங்கினார்கள். அந்தப் பசுவைக் கறக்கவும், குழந்தைக்குப் பொழுது போகவும், மற்றபடி வீடு வாயில் பெருக்குதல், பாத்திரந் தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும், விசாலாட்சி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாளக் கிழவியருத்தியை நியமனம் செய்து, அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாதம் எட்டு ரூபாய் சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டுச் செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலாகாது. எனவே, மாதந்தோறும் நானூறு ரூபாய்க்குக் குறையாமல் விசுவநாத சர்மா ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்குக் கொடுத்துவரத் தொடங்கினார். சிறிதுகாலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்குப் பத்திரிகைத் தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும், பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டுவிட்டார். காலையில் எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டவுடனே தினந்தோறும் அவர் தங்கசாலைத் தெருவினின்றும் புறப்பட்டுச் சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவிவிட்டு சுமார் ஒன்பது மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார். பதினோரு மணி முதல் மாலை மூன்று மணி வரை தமது எழுத்துவேலை நடத்துவார். அப்பால் இடைப்பகல் சிற்றுண்டியுண்டு தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம் படிப்பிலும், மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால், தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாட்சியையும், சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு கடலோரத்தில் சவாரி விடுவார். இரவு ஏழுமணிக்கு நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால் விசாலாட்சியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மதக் கேளிகளிலும் பொழுது கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செய்யப் போவதே கிடையாது. என்னதான் பேசுவார்களோ, ஏதுதான் பேசுவார்களோ கடவுளுக்குத் தான் தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு மற்றொருவருக்குத் தேனாய்த் திரட்டுப் பாகாய்க் கேட்கக் கேட்கத் தெவிட்டாமலிருக்கும். சில இரவுகளில் விசாலாட்சி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவர் பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை மறந்து எழுந்து குதிக்கத் தொடங்கிவிடுவார். சில சமயங்களில் இருவரும் கைகோர்த்துக் கொண்டு நாட்டியம் புரிவார்கள். வேலைக்காரக் கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்காரப் பரணில் இந்த தம்பதிகளின் களிகள் நடைபெறும். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ராலேகாண் சித்தி இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அதிமுக, பிஜேடியை வரவேற்போம்: பாஜக- தினமணி 'கூடங்குளம் அணு உலை விபத்து: சார்பற்ற விசாரணை தேவை'- தி இந்து 'மத்தியில் யாருக்கு ஆதரவு? தேர்தல் முடிவுக்கு பின் … – யாஹூ காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் - தினமணி மோடி அமைச்சரவையில் புது மந்திரிகள் யார் யார்? பா.ஜ., தலைவர்கள் … - தினமலர் துருக்கி நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 201 பேர் பலி - தி இந்து பஞ்சாபின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது வெற்றி - தினமணி பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Arun Narayanan, Age: 30.9.87 Height: 6'2" Qualification: BSc( Hotel & Hospitality) working Manager ( Banquets), JW Marriot, Juhu, Mumbai Star: Moolam Parents: Mr. R. Narayanan & Mrs. Mala Narayanan. Mr. R. Narayanan working for Arvind Lalbhai Group in Mumbai. Both parents have been bankers, Mr. R. Narayanan was in Bank of Baroda, left the bank and had joined Arvind group. Mrs. Mala was working for State Bank of Hyderabad. Resigned and is a housewife now. Parents are all from New Delhi having studied in DTEA School Laxmi Bai Nagar & Pusa road respectively. Person's interested could contact Mr. R. Narayanan or Mrs. Mala Narayanan at 980889160 or 9820889641 | |||||
வீடு வாடைகைக்கு | |||||
1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months Rent Agreement. House is available from 1st of June 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile - 07200867921 2 BHK Individual House at Chromepet , Chennai - 600 044, Semi Furnished, with covered car . 3 Phase power connection with backup provision. Very near to Railway station and bus stand. On Main Road. Air Port just - 5 Km. parking. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai, Mobile - 07200867921. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
17.05.2014 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | ஓம் நமசிவாய நாட்டிய நாடகம் - திரைப்பட நடிகை, கலைமாமணி வெண்ணிற ஆடை நிர்மலா குழுவினர் |
|
| |
18.05.2014 06.30 PM Onwards | தமிழிசையில் பக்தி பாடல்கள் - சென்னை வி.ஆனந்தராஜ் குழுவினர் | ||||
24.05.2014 06.30 PM Onwards | தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன் குழுவினர் | ||||
25.05.2014
| 11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம் | ||||
31.05.2014 06.30 PM Onwards | கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment