Wednesday, May 14, 2014

14-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

14-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௩௧(31) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

Avvai Tamil Sangam's yet another initiative to connect people with the help of technology this time. Yes.... Creating a What's App group.  It will help sharing your thoughts, and also be updated with "Nammai chutri".

Please click "ATS What's App" if you wish to join our group.

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 35

விடுதலை

இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வெறெத்தனையோ இருக்கின்றன. நேராக உண்டு வந்தால், அதாவது பசியறிந்து உண்பதென்று விரதங் கொண்டால், மனிதருக்கு உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும் தெவிட்டாது. இன்னும் நட்பு, கல்வி, சங்கீதம் முதலிய கலைகள் முதலிய எக்காலமும் தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன. இப்படியிருக்க, இவ்வுலக இன்பங்கள் கணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும், நீர்மேற் குமிழிகளத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர், சோம்பேறிகள் நெஞ்சுறுதியில்லாதோர்.

 

இன்பமயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பமே சாலவுஞ் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப உற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும். மாறுதலின்றிக் காதல் செய்து வருதலாகிய வழக்கம் மனிதருக்குள் ஏற்படுமாயின் அவர்கள் காதலின்பம் எத்துணை சிறந்ததென்பதையும் எத்தகைய பயன்கள் தருவதென்பதையும் தாமே எளிதில் உணர்ந்துகொள்ள வல்லோராவர்.

 

இங்ஙனம் ஆலோசனை புரிந்து நித்யானந்தர் என்ற பால சந்நியாசி தாம் விசாலாட்சி மீது காதல் கொண்டது தவறில்லையென்று தீர்மானித்துக் கொண்டார். ஒரு நாள் மாலையில் நித்யானந்தரும் விசாலாட்சியும் மிட்டாய் கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் தனியே சந்தித்தார்கள். அவ்விருவருள் நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. தாம் சந்நியாசத்தை விட்டு நீங்கி லௌகிக வாழ்க்கையில் புகுந்த விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள நிச்சயித்ததற்குள்ள காரணங்களையெல்லாம் அவர் விசாலாட்சியிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவளும் அக்காரணங்கள் நியாயமானவையேயென்று மிகவும் சுலபமாக அங்கீகாரம் செய்துகொண்டாள். கதையை வளர்த்துப் பிரயோஜனமென்ன? அவ்விருவரும் சந்திரிகை சகிதமாக உடனே புறப்பட்டு எழும்பூரில் வீரேசலிங்கம் பந்துலு இருந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு போகுமுன்னாகவே நித்யானந்தர் தம்முடைய காவியுடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெள்ளை வேஷ்டியும், நேர்த்தியான  சட்டையும், பஞ்சாபித் தலைப்பாகையும் அணிந்து கொண்டார். ''இந்த லௌகிக ரூபத்தில் சுவாமிகளைப் பார்த்தால் நேபாளத்து ராஜா மகனைப் போலிருக்கிறது'' என்று சங்கரய்யர் சொன்னார். ''இன்னும் என்னை சுவாமிகளென்று சொல்லாதேயுங்கள். சந்நியாசக் கோலத்தையும் தொலைத்தேன்; பழைய நித்தியானந்தனென்ற பெயரைக்கூடத் தொலைத்து விட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தையாகிய விசாலாட்சியின் பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன்'' என்றார். எனவே நானும் இக்கதையில் இவருக்கு நித்யானந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா என்ற பெயரையே வழங்கி வருதல் அவசியமாகிறது.

 

விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாட்சிக்கு ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு அதிகமாய், அவளை வெறிகொண்டவள் போலாக்கிவிட்டது.

 

இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலுவிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, விசாலாட்சி பந்துலுவிடத்திலும் அவர் மனைவியிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம் செய்துகொள்ள இணங்கிய செய்தியையும், அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாகச் சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு அளவிறந்த மகிழ்ச்சியுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்கில் முயற்சிசெய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய முயற்சியில்லாமலே தமது விருப்பம் நிறைவேறி விட்டமை கண்டு அவருக்கு அத்தனை பூரிப்புண்டாயிற்று.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, முதலாவது தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

புதிய ராணுவ தலைமைத் தளபதி நியமனம்: மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் -  தினமணி

மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்-  தி இந்து

10 டி.எம்.சி., தண்ணீர்:டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு யாஹூ

ஓ.பி.சி. பட்டியலில் அரவாணிகளை சேர்க்க வேண்டும்: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை -  தினமணி

இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் ... -  தினகரன்

தமிழகம் வந்த தமிழ் அகதிகளை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை -  தி இந்து

கருத்துக் கணிப்புகள் எதிரொலி: 24,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ் - தி இந்து

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகை வர்ணனைகள்! - தி இந்து

மணமகன் / மணமகள் தேவை    

Arun Narayanan, Age:  30.9.87  Height: 6'2" Qualification:   BSc( Hotel & Hospitality) working Manager  ( Banquets), JW Marriot, Juhu, Mumbai Star:  Moolam Parents:   Mr. R. Narayanan & Mrs. Mala Narayanan.    Mr. R. Narayanan working for Arvind Lalbhai Group in Mumbai. Both parents have been bankers,   Mr. R. Narayanan was in Bank of Baroda, left the bank and had joined Arvind group. Mrs. Mala was working for State Bank of Hyderabad.   Resigned and is a housewife now. Parents are all from New Delhi having studied in DTEA School Laxmi Bai Nagar & Pusa road respectively. Person's interested could contact Mr. R. Narayanan or Mrs. Mala Narayanan at 980889160 or 9820889641

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

14.05.2014

06.00 PM Onwards

Delhi Tamil Sangam

Bharatanatyam by

selvi Vaishnavi Vishwanath

Tamilizai by Ms Preeti Sethuraman(Chennai)

Pakka Vadyam: Violin by Mr R Sridhar., Mirudhangam by Mr V Shankar Raman.

 

 

17.05.2014

06.30 PM Onwards

ஓம் நமசிவாய நாட்டிய நாடகம் -

திரைப்பட நடிகை, கலைமாமணி வெண்ணிற ஆடை நிர்மலா குழுவினர்

18.05.2014

06.30 PM Onwards

தமிழிசையில் பக்தி பாடல்கள்    -   சென்னை வி.ஆனந்தராஜ்  குழுவினர்

24.05.2014

06.30 PM Onwards

தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன்  குழுவினர்

25.05.2014

 

11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம்

31.05.2014

06.30 PM Onwards

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment