Saturday, May 17, 2014

17-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

17-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௦௩(03) சனி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

Avvai Tamil Sangam's yet another initiative to connect people with the help of technology this time. Yes.... Creating a What's App group.  It will help sharing your thoughts, and also be updated with "Nammai chutri".

Please click "ATS What's App" if you wish to join our group.

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 38

விடுதலை

இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போல நடுக்க மொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ் விடுக்கணையரியு மெ•காம், இருந்தழு தியாவ ருய்ந்தார்?

 

என்று சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடியிருக்கிறார். அதாவது, 'துன்பம் நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்க வேண்டும். அங்ஙனம் நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டுதற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி வீணே உட்கார்ந்து துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது (நாசமே எய்தும்)'. இந்த உபதேசத்தை நீ ஒரு போதும் மறக்காதே.என் கண்ணே, என் உயிரே, விசாலாட்சி, நீ என்ன நேர்ந்தாலும் மனத்தைத் தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி வாழவேண்டுமென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து சகிக்க மாட்டேன்'' என்று பலபல சொல்லி மனைவியை சமாதானப்படுத்த முயல்வார். ஆனால், இவர் இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலேயே விசாலாட்சியின் கண்களில் ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதைக் கேட்ட விசுவநாத சர்மாவும் ஓலமிட்டழத் தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடிப் பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு சமயம் வைத்தியர் வந்துவிட்டார். இந்தக் கோலத்தைப் பார்த்து வைத்தியர் விசாலாட்சியை காண்பதினின்று நேரும் துக்கத்தால் சர்மாவின் நோய் மிகுதிப்படுமென்றும், ஆதலால் இனிமேல் விசாலாட்சி தன் கணவனை அடிக்கடி தனியாக சந்திக்கக்கூடாதென்றும், அப்படியே சந்தித்த போதிலும் சில நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிருக்கக் கூடாதென்றும் எப்போதுமே அவர் தன்னிடம் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும் எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதிகக் கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன், ஆகாரம் போடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில், சர்மாவை அடிக்கடி பார்க்காமலும், அவருடன் அதிகமாகப் பேசாமலும் ஒதுங்கியே காலங் கழித்து வந்தாள். ஆனால் இதனின்று விசுவநாத சர்மாவின் துயரமும் மனக்கலக்கமும் அதிகப்பட்டனவேயன்றிக் குறைவு படவில்லை. தம்மை விசாலாட்சி புறக்கணிக்கிறாளென்று சர்மா எண்ணவில்லை. அவர் அப்படி எண்ணக்கூடியவருமல்லர். ஆனால் தனது தேக நிலையைக் கருதி அவள் மிகவும் மனத்தளர்ச்சியும் துக்கமுமெய்தி அதுபற்றியே தோட்டத்துப் பங்களாவுக்கு அவள் அடிக்கடி வந்து தன்னைப் பார்க்காமலும், அதிகமாகத் தன்னிடம் வார்த்தையாடாமலுமிருக்கிறாள் என்று அவர் நினைத்துக் கொண்டார்.

இங்கு வியாதிகளின் சம்பந்தமாக ஒரு சிறு கதை சொல்லுகிறேன். வாந்திப் பேதிப் பிசாசு முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரேபியாவிலுள்ள மக்க நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாம். போகும் வழியில் பாரஸீகத்தில் பெரிய தபஸ்வியும் ஞானியுமாகிய ஒரு மஹமதிப் பக்கிரி அந்தப் பேயைக் கண்டு ''எங்கே போகிறாய்?'' என்று கேட்டார். அது கேட்டு வாந்தி பேதி சொல்லுகிறது:- ''மக்க நகரத்தில் இப்போது வருஷத் திருவிழா தொடங்கியிருக்கிறது. நானா திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு மக்கட்த்துக்குப் போகிறேன்'' என்றது.

 

அது கேட்டு அந்த சந்நியாசி:- ''சிச்சீ! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் அல்லாவைத் தொழும் பொருட்டு நல்ல நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள். அவர்களை நீ போய்க் கொல்ல நான் இடங் கொடுக்கமாட்டேன்'' என்றார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

·         இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.

·         உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு ... தினத்தந்தி

தோல்விக்கு நாங்களே பொறுப்பு: சோனியா, ராகுல் அறிவிப்பு -  யாஹூ     

பஞ்சாபில் 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி-  தி இந்து

20-ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்வு -  தினமணி

இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவே தனிப் பெரும் கட்சி!-  தி இந்து

ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி: காலிறுதியில் நடால் - முர்ரே மோதல் -  தினமணி

நவீன உலகின் நிறைவான பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Arun Narayanan, Age:  30.9.87 Height: 6'2" Qualification:   BSc( Hotel & Hospitality) working Manager  ( Banquets), JW Marriot, Juhu, Mumbai Star:  Moolam Parents:   Mr. R. Narayanan & Mrs. Mala Narayanan.    Mr. R. Narayanan working for Arvind Lalbhai Group in Mumbai. Both parents have been bankers,   Mr. R. Narayanan was in Bank of Baroda, left the bank and had joined Arvind group. Mrs. Mala was working for State Bank of Hyderabad.   Resigned and is a housewife now. Parents are all from New Delhi having studied in DTEA School Laxmi Bai Nagar & Pusa road respectively. Person's interested could contact Mr. R. Narayanan or Mrs. Mala Narayanan at 980889160 or 9820889641

Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217.

வீடு வாடைகைக்கு     

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m. Very good water supply. Two months advance with 11 months Rent Agreement. House is available from 1st of June 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile - 07200867921

2 BHK Individual House at Chromepet , Chennai - 600 044, Semi Furnished, with covered car . 3 Phase power connection with backup provision. Very near to Railway station and bus stand. On Main Road. Air Port  just - 5 Km. parking. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai, Mobile - 07200867921.

1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical  College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

17.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

ஓம் நமசிவாய நாட்டிய நாடகம் -

திரைப்பட நடிகை, கலைமாமணி வெண்ணிற ஆடை நிர்மலா குழுவினர்

 

 

18.05.2014

06.30 PM Onwards

தமிழிசையில் பக்தி பாடல்கள்    -   சென்னை வி.ஆனந்தராஜ்  குழுவினர்

24.05.2014

06.30 PM Onwards

தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன்  குழுவினர்

25.05.2014

 

11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம்

31.05.2014

06.30 PM Onwards

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

18.05.2014

06.30 PM Onwards

Sri Ram Mandir

HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 75

Annamachar​ya Jayanthi Celebratio​n-2014

Nagara Sankeerthanam &

Group singing of Sapthagiri Sankeertanam by Delhi sisters and group.

Sri Ram Mandir, Dwarka

 9868185239

8447285536

20.05.2014

06.30 PM Onwards

FICCI Auditorium, Tansen Marg, Mandi House, New Delhi.

Classical Music Concerts

by Vidwan O.S.Thiagarajan – Karnatic Vocal and Pandit Vishwa Mohan  Bhatt - Mohan Veena

All India  Radio Delhi

23710106

23355892

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment