19-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௦௫(05) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 39 | |||||
விடுதலை அதற்கு வாந்திபேதிப் பேய் சொல்லுகிறது:- ''சுவாமியாரே, என்னையும் அல்லா தான் படைத்து மனித உயிர்களை வாரிக்கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார். உலகத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அல்லாவின் செயல்களேயன்றி மற்றில்லை. அவனின்றியோர் அணுவுமசையாது. ஆதலால் எனது போக்கைத் தடுக்க உம்மால் முடியாது. முடியுமெனிலும் நீர் அதனைச் செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர் அத்தனை பேருமே புண்யாத்மாக்களென்றும் தர்மிஷ்டர்களென்றும் உண்மையான பக்தர்களென்றும் நினைத்து விடக்கூடாது. எத்தனையோ பாவிகளும், அதர்மிஷ்டரும், கொரான் விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத்மாக்களுக்கு இவ்வுலகில் சாவு கிடையாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமேயன்றி புண்யவான்களும் சாகத்தான் செய்கிறார்கள். வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி வருந்தித் துடித்துத் துடித்துச் சாவதைக் காட்டிலும் என்னால் துரிதமான மரணமெய்துதல் மனிதருக்கு நன்றேயன்றித் தீங்காகாது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும், நான் சொல்வதை நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனிலும், மகானாகிய உம்முடைய மனதுக்குச் சற்றே திருப்தி விளைவிக்கத் தக்கதாகிய வார்த்தையன்று சொல்லுகிறேன். அதாவது, நீர் அங்கு இத்தனை பேரைத்தான் கொல்லலாமென்று தொகை குறிப்பிட்டுக் கட்டளையிடும். அந்தத் தொகைக்கு மேலே நான் ஒற்றை உயிரைக்கூடக் கொல்வதில்லையென்று பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன்'' என்றது. இங்ஙனம் வாந்தி பேதிப் பேய் சொல்லியதைக் கேட்ட முனிவர்-''சரி; போ. அங்கு அநேக லட்சகணக்கான ஜனங்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஓராயிரம் பேரைத் தான் கொல்லலாம். அதற்கு மேல் ஓருயிரைக்கூடத் தீண்டலாகாது. ஜாக்கிரதை! போய் வா'' என்றார்.
நல்லதென்று சொல்லிப் பேய் பக்கிரியிடம் விடைபெற்றுக் கொண்டு மக்கத்துக்குப் போயிற்று. அப்பால் சில தினங்கள் கழிந்தபின், அந்தத் திருவிழாவுக்கு வந்தவர்களில் லட்சம் பேர் வாந்தி பேதியால் இறந்து போயினரென்ற செய்தி பக்கரியின் செவிக்கெட்டிற்று. அவர் தம்மை வாந்திப் பேதிப் பேய் வஞ்சித்து விட்டதாகக் கருதி மிகவும் கோபத்துடனும் மனவருத்தத்துடனுமிருந்தார். மறுநாள் வாந்தி பேதிப் பேய் அந்த வழியாகவே மக்கத்தினின்றும் இந்தியாவுக்கு மீள யாத்திரை செய்து கொண்டிருக்கையில் அந்தப் பக்கிரியைக் கண்டு வணங்கிற்று. பக்கிரி பெருஞ் சினத்துடன் அப்பேயை நோக்கி:- ''துஷ்டப் பேயே, பொய் சொல்லிய நாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வதில்லையென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு, மக்கத்திலே போய் லட்சம் ஜனங்களை அழித்து விட்டனையாமே! உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?'' என்றார். இதைக் கேட்டு வாந்தி பேதிப் பேய் கலகலவென்று சிரித்தது. அது சொல்லுகிறது:- ''கேளீர், முனிசிரேஷ்டரே, நான் உமக்குக் கொடுத்த வாக்குறுதி தவறாதபடியே ஆயிரம் பேருக்குமேல் ஓருயிரைகூடத் தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டவர். மற்றவர்கள் தமக்குத் தாமே பயத்தால் வாந்தியும் கழிச்சலும் வருவித்துக் கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என்ன செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் தகுமோ?'' என்றது. அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு- 'ஆகா! ஏழை மனித ஜாதியே, பயத்தாலும், சம்சயத்தாலும் உன்னை நீயே ஓயாமல் கொலை செய்துகொண்டிருக்கிறாயே! உன்னுடைய இந்த மகா மூடத்தன்மை கொண்ட மதியையும், இம் மதியை உன்னிடத்தே தூண்டிவிடும் மகா பயங்கரமான விதியையும் நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறதே! நான் என் செய்வேன். நான் என் செய்வேன்! நான் என் செய்வேன்!சுப்! நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லா ஹோ அக்பர். அல்லா மஹான். அவருடைய திருவுளப்படி எல்லாம் நடைபெறுகிறது. அவர் திருவடிகள் வெல்லுக'' என்று சொல்லி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவைக் கருதித் தியானம் செய்யத் தொடங்கினார். பேயும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டது. நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 13, 1839 - மே 19, 1904 · இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். · இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். · இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். · இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். · எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தேர்தலில் படுதோல்வி; டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ... – தினத்தந்தி பாஜக மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை - தினமணி மே 20-ல் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு – தி இந்து ஆப்கனுக்கு 1000 செயற்கை கால்கள்:இந்தியா - தினமலர் காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: மக்களவை தேர்தல் ...- தினமணி ரூ.1000 பென்ஷன் விரைவில் கிடைக்கும் - தினமலர் ரோம் மாஸ்டர்ஸ்: செரீனா சாம்பியன்- தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217. | |||||
வீடு வாடைகைக்கு | |||||
1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.05.2014 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன் குழுவினர் |
|
| |
25.05.2014
| 11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம் | ||||
31.05.2014 06.30 PM Onwards | கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி | ||||
20.05.2014 06.30 PM Onwards | FICCI Auditorium, Tansen Marg, Mandi House, New Delhi. | Classical Music Concerts by Vidwan O.S.Thiagarajan – Karnatic Vocal and Pandit Vishwa Mohan Bhatt - Mohan Veena | All India Radio Delhi | 23710106 23355892 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment