07-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௨௪(24) புதன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 29 | |||||
விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள் விசாலாட்சியோவெனில், அப்பிரிவு நிகழ்ந்து நெடுங்காலம் வரை பகலிலேயே தன்னுடைய மற்றத் தோழிப் பெண்களைக் கூப்பிடும்போது 'முத்தம்மா, முத்தம்மா' என்று கூப்பிடுவாள். இப்படி அளவு கடந்த பால்ய சிநேகமுடைய இவ்விருவரும், முத்தம்மா புக்கத்துக்கு வந்த பிறகு ஒருவரையருவர் சந்திக்கவேயில்லை. சோமநாதய்யர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து கும்பகோணம் காலேஜிலேயே பீ.ஏ. பரீட்சை தேறினார். முத்தம்மாளுடைய தந்தை அவளுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மதுரை, திருச்சினாப்பள்ளி, காலேஜ்களைப் பரிசோதனை செய்து முடித்துக் கடைசியாகக் கும்பகோணம் காலேஜுக்கு வந்து சோமநாதய்யரைக் கண்டு தக்க மாப்பிள்ளையென்று நிச்சயித்தார். அந்தக் காலத்தில் வரசுல்கம்-அதாவது மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் பணங் கொடுத்துக் கிரயத்துக்கு வாங்குதல்-என்ற வழக்கம் கிடையாது. கன்யா சுல்கம்-அதாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கிரயங் கொடுத்து வாங்குதல்-என்ற வழக்கமே நடைபெற்று வந்தது. எனவே, சோமநாதய்யர் ஏழைகளுடைய பிள்ளையாதலால், கன்யாசுல்கம் கொடுத்து விவாகம் செய்து கொள்ள வழி தெரியாமல் ''என்னடா, செய்வோம்!'' என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவருடைய உருவ லட்சணங்களையும் படிப்புத் திறமையையும் உத்தேசித்து அவருக்கே தமது மகளைக் கன்யா சுல்கம் வாங்காமல், அதாவது இனாமாக, மணம்புரிந்து கொடுத்து விடலாமென்று முத்தம்மாளின் தந்தை தீர்மானித்தார்.
சோமநாதய்யர் திருநெல்வேலிக்கு வந்து பெண்ணுடைய அழகையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்து அவளை மணம்புரிந்து கொள்ள உடம்பட்டார். தனக்கு விவாகம் முடிந்த பின்னர் முத்தம்மா விசாலாட்சியை ஓரிரண்டு முறைதான் சந்திக்க நேர்ந்தது. முத்தம்மா ருதுவாய், அவளுக்கு ருது சாந்தியாய் அவள் புக்ககத்துக்குச் சென்ற பின்னர் அவளும் விசாலாட்சியும் ஒருமுறைகூட சந்திக்க நேரமில்லை. அவள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டாள். பி.ஏ., பி.எல். பரீட்சை தேறி, சோமநாதய்யர், ஹைகோர்ட் வக்கீலாய் கும்பகோணத்தில் சில வருஷங்கள் உத்தியோகம் பண்ணிவிட்டு, அப்பால் பணம் ஏறிப்போய் அதினின்றும் அதிகப் பணத்தாசை கொண்டு மயிலாப்பூரில் வந்து ஒரு பெரிய பங்களா வாடகைக்கு வாங்கி அதில் குடியிருந்து சென்னை ஹைகோர்ட்டிலேயே வக்கீல் உத்தியோகம் பண்ணிக்கொண்டு வருகிறார்.
ஆதலால், இப்போது, பல வருஷங்களுக்குப் பின் புதிதாக சந்தித்ததில், முத்தம்மாளும் விசாலாட்சியும் சிநேக பரவசமாய் ஆனந்த சாகரத்தில் அழுந்திப் போயினர். முத்தம்மாளுக்கு இருபத்தைந்து வயது தானிருக்கும். அவளுக்கு மூன்று ஆண் குழந்தைகளிருந்தன. மூத்தவனுக்கு ஒன்பது வயதிருக்கும். அவன் பெயர் ராமநாதன். அடுத்த பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும். அவன் பெயர் ராமகிருஷ்ணன். அடுத்த குழந்தைக்கு மூன்று வயது. அதன் பெயர் அனந்தகிருஷ்ணன்.
முத்தம்மாளுடைய மாமியார் ஒருத்தி அந்த வீட்டிலேயே இருந்தாள். அவளுக்கு அறுபது வயதிருக்கும். அவள் விதவை. அவள் பெயர் ராமுப்பாட்டி. அவளுக்கு ‡யரோகம், அன்று, காசரோகம், அதாவது, சீக்கிரத்தில் கொல்லுகிற கொடூரமான ‡யமில்லை. நோயாளியை நெடுங்காலம் உயிருடன் வதைத்து வதைத்துக் கடைசியில் கொல்லும் மாதிரி. இராத்திரி ஏழு மணியாய் விட்டால் அவள் இருமத் தொடங்கிவிடுவாள். பாதி ராத்திரி. ஒரு மணி, காலை இரண்டு மணி வரை மகா பயங்கரமாக இருமிக் கொண்டேயிருப்பாள். அந்த இருமலைக் கேட்டால், கேட்பவருடைய பிராணன் இரண்டு நிமிஷத்துக்குள்ளே போய்விடும் போலிருக்கும். ஆனால், ராமுப்பாட்டி சென்ற முப்பது வருஷங்களாக அப்படித்தான் இருமிக்கொண்டு வருகிறாள். அவளுடைய பிராணன் அணுவளவுகூட அசையவில்லை. இப்படியிருக்கையில், விசாலாட்சி சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்து சில தினங்கள் கழிந்தவுடனே, ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுவதும் போஜனம் கிடையாது. ஆதலால், அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து தூங்கிப் போய்விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோரத் தலையில் ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு 'புயற்காற்று' விளக்கும் ஒரு தீச்சட்டியும் கட்டிலுக்கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக்கொன்றாக, இரண்டு நாற்காலிகளின்மீது, அதாவது சாய்விடமில்'த நாற்காற் பலகைகளின்மீது, வைக்கப்ப்டடிருந்தன.
அதற்கு மேற்கே மூன்றரை கழித்து நான்காமறையில் விசாலாட்சி ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலைக் காட்டிலும் சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின்மீது ஒரு புயற்காற்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவள் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல் தானே நழுவி வெள்ளை வெளேரென்ற உரையின் மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அத்தகைய வெள்ளைத் தலையணையின்மீது கன்னங்கரேலென்று விழுந்து கிடந்ததை நோக்குககையில், பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாட்சி விதவையாயினும் அவள் தலையை மொட்டையடிக்கவில்லை. சாகும்பொழுது தம் தமையன் மனைவி ''அடீ, விசாலாட்சி! நீ எப்படியேனும் மறு விவாகம் செய்துகொள்'' என்று சொல்லிவிட்டுப் போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும், திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும் விளைவித்த, எதிர்பார்க்கப்படாத, கோர மரணப் பெருங்கோலத்தைக் கண்டும் பின் ஆவி பிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலை மயிர் வளர்க்கத் தொடங்கிவிட்டாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
இரவீந்தரநாத் தாகூர்(மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். · கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். · இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். · இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. · மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். · இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
8 ஆவது கட்டத் தேர்தல்: அமேதி உள்பட 64 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - தினமணி சுப்ரதா ராயின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது - தி இந்து பிற்படுத்தப்பட்டவன் என்பதால் என் மீது பழி சுமத்துகிறார்கள் ... - தினமணி இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 தமிழ் அகதிகள்! - தினமணி இந்தியா- இலங்கை அணுசக்தி ஒப்பந்தம்? - தினமலர் தொடக்கப்பள்ளிகளில் மொழி சிறுபான்மையினருக்கு பிராந்திய .... – தினத் தந்தி | |||||
வீடு வாடகைக்கு | |||||
A penthouse apartment on 10th floor consisting of 3 bedrooms, hall, kitchen with 3 bathrooms and a modular kitchen 2 bedrooms have 2 attached balconies and the third bedroom has a huge open terrace of 1200 sq ft area. Drawing room also has an attached balcony. The apartment is park facing and is located only 1 km from sector 13 metro station. Extra amenities: 1. Covered car parking; 2. Security; 3. Power backup; 4. RO (Aquaguard for water purification); 5. Geyser in 2 bathrooms & kitchen; 6. Complete wooden cupboards in all 3 bedrooms; 7. Separate area for washing machine; Size of the apartment: 1675 sq. feet; Size of terrace : 1200 sq.feet; Preference is for company lease. For details, please contact Ms. Veena Grover at 9910046191. (Principal of DTEA, Janakpuri.) Required 3 Bed Room House For Husband And Wife In Gurgaon Rent Should Be All Inclusive Rs 22000/-. Interested Party Can Contact Shankarraman Mobile No 9650590381 Email Id Shankarraman123@Hotmail.Com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
07/05/2014 10.30 A.M. to 7.00 P.M | Twin Art Gallery-II,C.V. Mess, Janpath | Exhibition of some rare photographs of Dr. Rashid Jahan. | Indira Gandhi National Centre for the Arts |
| |
10/05/2014 06.00 P.M. Onwards | Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Sector-5, RK Puram, New Delhi 110022 | 6 PM Carnatic Vocal/Tamil Isai by Kumar R.Sowmya(Disciple of Dr.P.B. Kannakumar) will be accompanied on Violin by Sh.V.S.K. Annadurai, Mridangam by Delhi R.Vignesh, Kanjira by Sh. K. Ramamurthy & on the Ghatam by Sh.J. Haree Prasad. 7.30 P.M Bharathnatyam by Kumari Priya Rajamani(Disciple of Smt. Rajeshwari Natrajan) |
| K.Ramamurthy (9818765754) | |
11/05/2014 10.00 A.M. Onwards | Lok Kala Manch, Lodhi Road (Behind Sai Baba Temple). nch, New Delhi | Mridangam Arangetram of Master B.Sai Karthik Disciple of Kumbakonam Shri N.Padmanaban Guruvayoor DR. T.V. Manikandan - Vocal and kalaimamani Shri. V.S.K. Chakrapani - Violin and Elaththur shri. N. Harinarayanan - Ghatam |
|
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, May 7, 2014
07-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment