22-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௦௮ (08) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 42 | |||||
சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை அப்போது முத்தம்மா:- ''அழுகையெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். புன்னகை, சந்தோஷம், சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னைத் தள்ளிவிட்டு வேறு ஸ்திரீயை பகிரங்கமாக விவாகம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.
இன்னொரு புதுப்பெண்-சிறு பெண்ணை மணம் புரிந்துகொண்டு அவளுடன் இன்புற்று வாழத் தொடங்குவீர்களாயின் உங்களுக்குள்ள மனக்கவலையெல்லாம் நீங்கிப் போய்விடும். பிறகு புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில் சாமர்த்தியமாகப் பேசும் திறமை மிகுதிப்பட்டு, உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம் வரத் தொடங்கும். உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கிப் போய்விடும். நீங்கள் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள். எங்கள் அத்தங்கார் விசாலாட்சி அப்படிச் சொல்லமாட்டாள். அவளும் உங்கள் போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக்கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந்தான் வியாதிகள் தோன்றுகின்றன என்பது விசாலாட்சியின் கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ மூன்றுப் பிள்ளைகளைப் பெற்றுக் கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக்குறைவுகளெல்லாம் நீங்கிப் போய்விடும். அப்பால் யாதொரு வியாதியும் வராது'' என்றாள்.
இது கேட்டு சோமநாதய்யர்:- ''உன்னையும் உன் குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்றுவதிலேயே எனக்குச் சுமை தலை வெடித்துப் போகும் போலிருக்கிறது. இன்னும் ஒருத்தியைப் புதிதாக மணஞ் செய்து கொண்டு அவளையும் அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளையும் இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்ர‡ணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக வெடித்தே போய்விடும். உன்னைத் தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய். உன்மீது என்ன குற்றஞ் சுமத்தித் தள்ளி வைப்பேன்? பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி நீக்குவேனா? பொய்யாகவும், எனக்கு மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது விபசார தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா? அப்படியே ஏதேனுமொரு முகாந்தரம் சொல்லி விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை என்னை விட்டு நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அவளைப் போலீஸ் பண்ணிக் காவல் காக்குந் தொழில் எனக்குப் பெருங் கஷ்டமாகிவிடும். ஆதலால் உன்னைத் தள்ளிவைத்துவிட்டு வேறு விவகாம் செய்து கொள்ளும்படி நீ தயவுடன் சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்ளும்படி, அதாவது, என் காது நரம்புகளையும் இருதய நரம்புகளையும் அறுப்பதற்கு நீ நிஷ்கிருபையாகவும் இடையின்றியும் மறவாமலும் மீட்டும் மீட்டும் உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த ஒற்றை அஸ்திரத்தின் பிரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி, நான் உன்னை மிகவும் தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார். ''சரி, எனக்குத் தலைநோகிறது. நான் கீழே போய்க் காபி போட்டு சாப்பிடப் போகிறேன்'' என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள்.
''காப்பி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா?'' என்று சோமநாதய்யர் கேட்டார்.
''எதற்கு? இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும் மிச்சமிருக்கின்றனவோ? நான் குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே? நீங்கள் என்னைப் பற்றி என்னிடம் சொல்லும் வார்த்தைகளெல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்று தான் நினைத்திருக்கிறீர்களோ? சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடி வாழ்வதில் நீங்கள் அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே? அச்சொற்கள் என் செவிக்கு தேவாமிர்தமாகத்தான் இருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. சரி. அது வீண் பேச்சு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சிப் பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ, அது வரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும். அவற்றை நான் சகித்துத்தான் தீரவேண்டும். எனக்கு நிவர்த்தியேது? நீங்களாவது என்னை விலக்கி வைத்து விட்டு மற்றொருத்தியை விவாகம் செய்து கொண்டு சௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படிச் செய்ய முடியுமா? எனக்கு வேறு புகலேது?'' என்று முத்தம்மா சொன்னாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ராஷ்டிரபதி பவன் (குடியரசுத் தலைவர் வாழிடம்) · புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம். ராஷ்டிரபதி பவன் என்பது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவுப் பகுதியையும் குறிக்கும். · அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் உள்ளன. · 1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. · இதனால் ராஷ்டிரபதி பவன் உருவாக்கப்பட்டது. · செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது. | |||||
குஜராத் புதிய முதல்வர் ஆனந்தி பென் படேல் இன்று பதவியேற்பு- தினமணி குஜராத் முன்மாதிரியால் வெற்றி சாத்தியமானது: பேரவையில் விடைபெற்ற மோடி நெகிழ்ச்சி– தி இந்து வாடிக்கையாளர் சேவையில் சிறந்த வங்கி எது? புள்ளி விவரத்தை … - தினமலர் 145 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு - தினமணி ஐ.நா. கூட்டத்தில் மோடி பங்கேற்பார்: பான் கீ மூன் நம்பிக்கை - தினமணி வேலைவாய்ப்பை பெருக்குவதில் தமிழக அரசு தீவிரம் - தினமலர் 'கொக்கி கை' தீவிரவாதிக்கு 100 ஆண்டு சிறை – தி இந்து சச்சின் கொடுத்த உத்வேகத்துடன் உலகக் கோப்பை போட்டிகளுக்கு புறப்படும் இந்திய ஹாக்கி அணி– தி இந்து | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217. Name: Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing), Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age: 28 years( 3rd Nov 1985), Height: 5' 9" Parents : Mrs Meera Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram: Athreya, Contact No: Mrs Meera 99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi. They stay in, Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business. The company he works for belongs to the family. The company is a very old logistic service provider here in Delhi. | |||||
வீடு வாடைகைக்கு | |||||
1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196. HOUSE FOR RENT – Available at Sector III Vaishali, Ghaziabad near Pushpanjali Hospital/Mahagun Mall, from June 1, 2014 - Two bedroom flat, with a huge drawing/dining and big modular kitchen, bathroom with bathtub, second floor, very close to vaishali metro station and close to Delhi border/Ghazipur. Tamilians preferred – Rent Rs.15,000. Contact 8826655855 for details. Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida. Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy. Other furnishings like cot + bed can be provided on request. Taxi & door delivery of South Indian food available on call. Please contact manikandan2311@yahoo.co.in / sujatha2311@hotmail.com OR Call : +91 9899165543 / 50. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.05.2014 06.00 AM Onwards
| South Delhi Apartment, Plot# 8, Sector-4, Dwarka, New Delhi | 4th Akhand Sai Gayathri Jaap 06.00 AM Ganapati Pooja 06.15AM Ekadasa Rudra Jaap and Abhishekam to Sai Baba 08.30AM Aatri " Shirdi Majhe Pandharpur" 08.45AM Start of Akhand Shirdi Sai Gayathri Jaap and it will continue till next morning 0900hrs. (Jaap will continue for whole day and night ) |
| 9811500224 9873690224 | |
25.05.2014 09.30 AM Onwards | 09.00AM Vishnu Sahasranama Parayanam / Yagna with 1008 times 09.30AM Vishnu Sahasranama Homam 11.30AM Puranahathi 11.45AM Shirdi Sai Baba Palki procession 12.00PM Maha aarti and followed by Mahaprasadam distribution | ||||
24.05.2014 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன் குழுவினர் |
|
| |
25.05.2014
| 11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம் | ||||
31.05.2014 06.30 PM Onwards | கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, May 22, 2014
22-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment