10-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௨௭ (27) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 32 | |||||
விடுதலை ''ஒருகால் விடுதலை யுற்றான் எப்போதும் விடுதலை யுற்றான்'' மறுநாட் பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம், அவடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்துஸ¥ப்பா தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துஸ¥ப்பா தீட்சிதரே புரோகிதர். இவ்விருவரும் காலையில் பத்து மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை சோமநாதய்யர் மெத்தையைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. அவருக்குப் பலமான தலை நோவு.
இதனிடையே தீட்சிதரிருவரும் சும்மா பதுமைகள் போல் உட்காரந்திருக்க மனமில்லாமல் வேதாந்த விசாரணையில் புகுந்தனர்.
முத்துஸ¤ப்பா தீட்சிதர் சொன்னார்:- ஜீவன் முக்தி இகலோகத்தில், அதாவது இந்த சரீரத்தில் சாத்தியம்'' என்றார்.
''ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது நிச்சயமில்லை'' என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.
உமக்கு விடுதலை என்றால் இன்னதென்று விஷயமே புலப்படவில்லையென்று தெளிவுபட விளங்குகிறது. விடுதலையென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே கிடையாது. முக்திக்குப் பிறகு பந்தமில்லை. ஸர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த ஸர்வபந்த நிவாரணமாவது ஸர்வ துக்க நிவாரணம், ஸர்வ துக்கங்களையும் ஒரேயடியாகத் தொலைத்து விடுதலை. அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்குக் கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது'' என்று முத்து ஸ¤ப்பா தீட்சிதர் சொன்னார்.
''சுவர்க்க லோகத்திற்குப் போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சியேற்படுவதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே, அதன் தாத்பர்யமென்ன?'' என்று குப்புசாமி தீட்சிதர் கேட்டார்.
''அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஜீவன்முக்திக்கு நான் சொன்னதுதான் சரியான அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்துக் கொள்ளலாம்'' என்று முத்துஸ¤ப்பா தீட்சிதர் சொன்னார்.
இவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து நெடுநேரம் வார்த்தைபாடிக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக சோமநாதய்யர் மாடியை விட்டுக் கீழேயிறங்கி வந்தார். அவர், ''இந்த தர்க்கத்தின் விஷயமென்ன?'' என்று கேட்டார்.
''ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா? மீட்டும் பந்தப் ப்ராப்தி ஏற்படுமா' என்ற விஷயத்தைக் குறித்து விசாரணை செய்கிறோம்'' என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார். ''இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராயமெப்படி?'' என்று சோமநாதய்யரை நோக்கி முத்துஸ¤ப்பா தீட்சிதர் கேட்டார்.
''எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது'' என்று சோமநாதய்யர் சொன்னார். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார். · தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். · மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். · இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது. · உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. · 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பிளஸ் 2 : சிறப்பிடம் பெற்ற 18 மாணவர்கள்- தினமணி பாஜக அரசு அமைய ஒருபோதும் ஆதரவு இல்லை: மாயாவதி திட்டவட்டம்- தி இந்து பிளஸ் 2 தேர்வில் 90.6% சாதனை தேர்ச்சி: ஊத்தங்கரை மாணவி எஸ்.சுஷாந்தி முதலிடம்- தினமணி கடற்படை கப்பலில் தீ : சோகம் தொடருகிறது– தினமலர் ரிசர்வ் வங்கி கவர்னர் கொள்கை தோல்வி: சுப்பிரமணியன் சுவா … - தினமலர் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா' கலவர சம்பவம்: இந்தியருக்கு 30 மாதம் சிறை, 3 பிரம்படி - தி இந்து சச்சின், சேவாக்குடன் மேக்ஸ்வெல்லை ஒப்பிட்ட தோனி- தி இந்து தொடர்கிறது பஞ்சாபின் வெற்றி நடை- தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
A penthouse apartment on 10th floor consisting of 3 bedrooms, hall, kitchen with 3 bathrooms and a modular kitchen 2 bedrooms have 2 attached balconies and the third bedroom has a huge open terrace of 1200 sq ft area. Drawing room also has an attached balcony. The apartment is park facing and is located only 1 km from sector 13 metro station. Extra amenities: 1. Covered car parking; 2. Security; 3. Power backup; 4. RO (Aquaguard for water purification); 5. Geyser in 2 bathrooms & kitchen; 6. Complete wooden cupboards in all 3 bedrooms; 7. Separate area for washing machine; Size of the apartment: 1675 sq. feet; Size of terrace : 1200 sq.feet; Preference is for company lease. For details, please contact Ms. Veena Grover at 9910046191. (Principal of DTEA, Janakpuri.) Required 3 Bed Room House For Husband And Wife In Gurgaon Rent Should Be All Inclusive Rs 22000/-. Interested Party Can Contact Shankarraman Mobile No 9650590381 Email Id Shankarraman123@Hotmail.Com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Arun Narayanan, Age: 30.9.87 Height: 6'2" Qualification: BSc( Hotel & Hospitality) working Manager ( Banquets), JW Marriot, Juhu, Mumbai Star: Moolam Parents: Mr. R. Narayanan & Mrs. Mala Narayanan. Mr. R. Narayanan working for Arvind Lalbhai Group in Mumbai. Both parents have been bankers, Mr. R. Narayanan was in Bank of Baroda, left the bank and had joined Arvind group. Mrs. Mala was working for State Bank of Hyderabad. Resigned and is a housewife now. Parents are all from New Delhi having studied in DTEA School Laxmi Bai Nagar & Pusa road respectively. Person's interested could contact Mr. R. Narayanan or Mrs. Mala Narayanan at 980889160 or 9820889641 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
10/05/2014 06.00 P.M. Onwards | Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Sector-5, RK Puram, New Delhi 110022 | 6 PM Carnatic Vocal/Tamil Isai by Kumari R.Sowmya(Disciple of Dr.P.B. Kannakumar) will be accompanied on Violin by Sh.V.S.K. Annadurai, Mridangam by Delhi R.Vignesh, Kanjira by Sh. K. Ramamurthy & on the Ghatam by Sh.J. Haree Prasad. 7.30 P.M Bharathnatyam by Kumari Priya Rajamani(Disciple of Smt. Rajeshwari Natrajan) |
| K.Ramamurthy (9818765754) | |
11/05/2014 06.30 P.M. Onwards | சிறப்பு பட்டிமன்றம் தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக அதிகம் விட்டுக்கொடுத்துப் போவது மருமகளே! மாமியாரே! நடுவர்: திருமதி ரமாமணி சுந்தர் |
|
| ||
11/05/2014 10.00 A.M. Onwards | Lok Kala Manch, Lodhi Road (Behind Sai Baba Temple). nch, New Delhi | Mridangam Arangetram of Master B.Sai Karthik Disciple of Kumbakonam Shri N.Padmanaban Guruvayoor DR. T.V. Manikandan - Vocal and kalaimamani Shri. V.S.K. Chakrapani - Violin and Elaththur shri. N. Harinarayanan - Ghatam | Bus Arrangement Will Be Available From Mother Diary, Sector-2, Rohini, Delhi-85 At 8 Am Sharply.
| J. Vishwanathan –9911494023 S. Natarajan- 9871166718 Krishnamoorthy- 9971362988 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, May 10, 2014
10-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment