Tuesday, May 6, 2014

06-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

06-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௨௩ (23) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 28

விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள்

அதற்குப் பந்துலு:- ''அப்படியில்லையம்மா. இங்கிருந்தாலும் ராஜமஹேந்திரபுரத்திலிருந்தாலும் ஒன்று போலேதான். இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்கக்கூடிய நண்பர்கள் எனக்குப் பல ஊர்களிலே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடிதமெழுதுவேன். அவர்கள் அவ்வவ்விடங்களில் விசாரித்து விடையெழுதுவார்கள். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வேன்'' என்றார்.

 

''பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கும்போது என் பெயர் போடக்கூடாது'' என்றாள் விசாலாட்சி.

 

''சரி. பெயர் போடாமல் பொதுப்படையாக எழுதுகிறேன். இந்த கோபாலய்யங்காரின் விவாகம் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிந்து போய் விடும். பிறகு, உன் காரியத்தை முடிக்கு முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன் நோக்கத்தை நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பயப்படாதே'' என்று பந்துலு சொன்னார்.

 

''அப்படியானால், என்னை ஜனவரி பதினெட்டாந் தேதியா இங்கு வரச் சொல்லுகிறீர்கள்?'' என்று விசாலாட்சி கேட்டாள்.

 

''இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி பத்தாந் தேதி இங்கு வந்துவிடு'' என்றார் பந்துலு.

அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு விசாலாட்சி, சந்திரிகை சகிதமாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

 

வக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்குப் பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியை கண்டவுடன் இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள்.

 

முத்தம்மா திருநெல்வேலியில் தெப்பக் குளத்தெருவில் பிறந்து வளர்ந்து வந்தவள். திருநெல்வேலியிலிருந்து வேளாண்குடி மிகவும் சமீபமாதலால் இவ்விருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சுற்றுப் பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்த போதிலும், அங்கு விசாலாட்சியும் வருவாள்; முத்தம்மாளும் வந்துவிடுவாள். வந்தால், இவ்விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது. சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால், இருவருமே கூடவே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும் கைகோத்த வண்ணமாகவே சுற்றித் திரிவார்கள். இராத்திரி, இருவரும் ஒரே பாயில் கட்டிக் கொண்டு படுத்திருப்பார்கள். மேலும், ஒரு சமயத்தில் முத்தம்மாளை அவளுடைய தந்தை வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே, அதாவது, விசாலாட்சியின் தாய் வீட்டிலேயே, ஆறேழு மாதம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால், பத்தாம் வயதில் விசாலாட்சி தாலியறுத்த சமயத்தில், அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில மாதங்களிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படுமென்று கருதி விசாலாட்சியின் தாய் தன் தம்பிக்கு அவசரமாகச் சொல்லியனுப்பினான்.

 

தமக்கையின் வார்த்தையைத் தட்ட மனமில்லாமல், அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடியில் கொண்டு விட்டிருந்தார். ஒரே வீட்டில் ஒன்றாகக் குடியிருந்தபோது அவ்விருவரின் உளங்களும் ஒட்டியே போய்விட்டன. வேளாண்குடியிலிருந்து திரும்பித் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகுங்கூட நெடுங்காலம் வரை இரா வேளைகளில் கனவிலெல்லாம் முத்தம்மா விசாலாட்சியுடன் சம்பாஷணை நடத்துவது போலவே பேசிக் கொண்டிருப்பாள்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

தபால் தலை

·         1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

·         தபால் தலையில் தன் நாட்டின் பெயரை வெளியிடாத நாடு இங்கிலாந்து.

·         தபால் தலையை வட்டவடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

·         வாசனைத் தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.

·         நம் நாட்டின் தீபாவளிப் பண்டிகையை தபால் தலையில் வெளியிட்ட நாடு சிங்கப்பூர்.

·         விற்பனையில் அதிகமான வசூலைத் தந்த தபால் தலை மனிதன் சந்திரனில் இறங்கியதற்கு அமெரிக்கா வெளியிட்ட தபால் தலைதான்.

·         1913-இல் சீனா வெளியிட்ட ஒரு தபால் தலையின் நீளம் ஒன்பதே முக்கால் அங்குலம். அகலம் இரண்டே முக்கால் அங்குலம். இதுதான் உலகின் மிகப்பெரிய தபால் தலை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ராமரை குறிப்பிட்டுப் பேசியதால் சர்ச்சை: நரேந்திர மோடி பிரசாரம் -  தினமணி

தீவிரவாதி ஜாகீர் உசேனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு -  தி இந்து

சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் மீதான வழக்கு: இன்று தீர்ப்பு -  தினமணி

இலங்கை கோரிக்கையை ஏற்ற இந்தியாவுக்கு கருணாநிதி கண்டனம் -  தி இந்து

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -  தி இந்து

2ஜி: பிரதமர் அனுமதி பெற்றே அலைக்கற்றை ஒதுக்கீடு: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசா வாக்குமூலம் பதிவு-  தினமணி

ஐதராபாத்தை வீழ்த்தி 3–வது வெற்றி: உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ... தினத் தந்தி

கவிழ்ந்தது கொல்கத்தா: பதுங்கிப் பாய்ந்த ராஜஸ்தான் -  தி இந்து

வீடு வாடகைக்கு   

A penthouse apartment on 10th floor consisting of 3 bedrooms, hall, kitchen with 3 bathrooms and a modular kitchen 2 bedrooms have 2 attached balconies and the third bedroom has a huge open terrace of 1200 sq ft area. Drawing room also has an attached balcony. The apartment is park facing and is located only 1 km from sector 13 metro station. Extra amenities:

1. Covered car parking;

2. Security;

3. Power backup;

4. RO (Aquaguard for water purification);

5. Geyser in 2 bathrooms & kitchen;

6. Complete wooden cupboards in all 3 bedrooms;

7. Separate area for washing machine;

Size of the apartment: 1675 sq. feet; Size of terrace : 1200 sq.feet; Preference is for company lease. For details, please contact Ms. Veena Grover at 9910046191. (Principal of DTEA, Janakpuri.)

Required  3  Bed  Room  House  For  Husband And Wife In  Gurgaon  Rent  Should  Be  All  Inclusive  Rs 22000/-.  Interested Party  Can  Contact  Shankarraman  Mobile  No 9650590381   Email  Id  Shankarraman123@Hotmail.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

05/05/2014

to

07/05/2014

10.30 A.M. to 7.00 P.M

Twin Art Gallery-II,C.V. Mess, Janpath

Exhibition

of some rare photographs of Dr. Rashid Jahan. 

Indira Gandhi National Centre for the Arts

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment