Tuesday, March 26, 2013

26-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

26-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௧௩(13)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 22

குழந்தைகளைச் சரியான நேரத்தில் தூங்கப் பழக்குங்கள். குழந்தைக்கு எப்போது தூக்கம் வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். கண்ணைக் கசக்கும், கொட்டாவி விடும், தோளில் தொங்கும், சோர்வாய் இருக்கும். உடனே குழந்தையைப் படுக்க வையுங்கள். இப்படி கொஞ்ச நாள் பழக்கினாலே, தூக்கம் வரும்போது தானாகப் போய் படுத்துக்கொள்ளும்! படுக்கையறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கட்டும். அது குழந்தையை நீங்கள் கவனிப்பதற்காக! குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு வெளிச்சம் வைக்காதீர்கள்.

நாளொரு நாலடி 98

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா

தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்

மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்

பொலிகடன் என்னும் பெயர்த்து.  

 

இரப்போர்க்கீதலே ஈகை; மாறிவார்கீதல் கடன்கொடுத்தலோ டொக்கும்.

பொருள்:                                                                                      

மலி கடல் தண் சேர்ப்ப - வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை யுடையவனே, ஆற்றின் - ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது - இரந்த கையை மாறாமல் இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் - கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண் மகனின் கடமையாகும். மாறு ஈவார்க்கு ஈதல் பொலி கடன் என்னும் பெயர்த்து - எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் விளக்கமான கடன் என்னும் பெயருடையது.

 

Explanation (G. U. POPE):

Give to him who cannot recompense thee.

Denying to no out-stretched hand, to give to needy men as he hath power, is duty of a man.—Lord of the swelling sea's cool shore!—A gift to those that can return the gift is usury!

உங்களுக்குத் தெரியுமா?

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.

·         தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்.

·         ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. குமரிக்கண்டத்தின் தலைநகரான தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும்.

·         மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன.

·         கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் எதுவும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை.

·         இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

திமுக செயற்குழுக் கூட்டத்தை அழகிரி புறக்கணிப்பு-தினமணி

கொழும்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டாம்: பிரதமர் மன்மோகன் ...-தினமணி

6 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டு சஸ்பெண்ட் - தினமணி 

ஊழல்வாதிகள் சொத்து: பீகார் அரசு பறிமுதல்- தினமலர்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தில் ...-மாலை மலர்

கிழக்கில் முஸ்லிம் பகுதிகளில் பூரண ஹர்த்தால்; கொழும்பில் ...- தினக்குரல்          

காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர..- தினமணி

மாநிலங்களின் நெருக்கடியால் வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பு: ஹமீது அன்சாரி தகவல்- தினமணி

ஹெலிகாப்டர் பேர ஊழல்: கூடுதல் ஆவணங்களை கோருகிறது சிபிஐ.- தினமணி

இலங்கை, வங்கதேச கிரிக்கெட்: மழையால் பாதிப்பு- தினமணி

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi)

Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave

Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil.  The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex.

Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26/03/2013

2.30 PM 

onwards

Sri Ram Mandir, Dwarka

Panguni Uthiram Celebrations And Bhajan By Balagokulam Group

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

Delhi Tamil Sangam

 

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

(30/3/2013):  4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர்

6.30 PM

டிரம்ஸ் சிவமணி  குழுவினர்

Delhi Tamil Sangam

 

30/03/2013

7.00 PM

onwards

India Habitat Centre - Basement theater

Flute Concert by Sri G. Raghuraman

carnatic flute and new age music Sudha Raghuraman Vocals,VSK Chakrapani Violin,M.V.Chandershekar Mridhangam,Murali Ghatam from Chennai,Gyan Tabla,Anil Keyboard and Ankur Drums

 

dwarkalaya.regd

@gmail.com

31/03/2013

9.00 AM 

onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7, Dwarka

VISHNU SAHASRANAMA NAKSHATRA MALA Vishnu Sahasranama Parayanam will be held for all the 27 Stars

 

99680 93927,

9312247576

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment