Monday, April 1, 2013

01-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

01-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௧௯(19)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 28

குழந்தையை ஏதாவது சில எக்ஸ்ட்ரா பழக்கங்களில் ஈடுபடுத்துங்கள்... நடனம், இசை, நீச்சல் என குழந்தையின் விருப்பத்துக்குத் தக்கபடி. கூடவே, நீங்களும் அந்த வகுப்புகளுக்குச் சென்று மற்ற குழந்தைகளின் அன்னையருடன் உரையாடுங்கள். நீங்கள் நம்பவே முடியாத அளவுக்கு அனுபவங்கள் இதில் கிடைக்கும்... இருவருக்கும்.

நாளொரு நாலடி 103

அறத்துப்பால் துறவற இயல்பழவினை (OLD DEEDS)

வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;

அளந்தன போகம் அவரவ ராற்றான் ;

விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்

காரெனச் செய்தாரும் இல். 

 

வேண்டியவாறே போகங்கள் அநுபவிக்கவாரா.

பொருள்:    

வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழக்கத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க.

Explanation (G. U. POPE):

Wishes are inoperative.

Who would not see Prosperity ? All seek her gifts ; but as men's ways are, so each man's enjoyments are meted out. Who made the Vilam's apple round ? Or who gave its dusky hue to the Kalani fruit?

உங்களுக்குத் தெரியுமா?

மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் பகுதியில் நடைமுறையில் உள்ள ஒரு ஓவியப் பாணி ஆகும்.

·         மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது.

·         ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன.

·         மதுபானி ஓவியங்கள், மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது.

·         மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன. தற்காலத்தில், துணி, [கடதாசி], கன்வாஸ் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன.

·         இந்த ஓவியப்பாணி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் அடங்கி இருப்பதனாலும், இதன் நுணுக்கங்கள், தலைமுறைகள் ஊடாகக் குடும்பங்களுக்கு உள்ளேயே இருந்து வருவதனாலும், இப்பாணி அதிகம் மாற்றம் அடையாமலேயே உள்ளது.

·         மதுபானி ஓவியங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

·         மதுபானி ஓவியங்கள் இயற்கை மற்றும் தொன்மங்கள் சார்ந்த நிகழ்வுகளை அடைப்படையாகக் கொண்டு வரையப் படுகின்றன.

·         ஓவியங்களுக்குரிய கருப்பொருள்கள் பெரும்பாலும், இந்துக் கடவுளரான, கண்ணன், இராமன், சிவன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி போன்றவர்களைக் குறிப்பதாகவே பெரிதும் காணப்படுகின்றன. இயற்கைப் பொருட்களான ஞாயிறு, மதி போன்றவையும், துளசிச் செடி போன்ற மதத் தொடர்பு கொண்ட செடிகளும் இவ்வகை ஓவியங்களில் கருப்பொருளாக அமைந்திருப்பதைக் காண முடியும்.

·         இவற்றைவிட அரசவைக் காட்சிகள், திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் என்பனவும் மதுபானி ஓவியங்களில் இடம்பெறுகின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மனு- யாஹூ!

பாஜக ஆட்சி மன்றக் குழுவில் மோடி.- தினமணி

ராமேஸ்வரம் அருகே பயங்கர மோதல்.. துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் ...- Oneindia Tamil

சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கோரும் கடிதம்: மகாராஷ்டிர அரசுக்கு ...- தினமணி

எச் -1 -பி விசா விண்ணப்பம் வழங்குகிறது அமெரிக்கா- தினமலர்

அதிபர் ராஜபக்சே பேச்சு இன, மத தீவிரவாதங்களுக்கு இலங்கையில் ...-தினகரன்

"2ஜி: சொலிசிட்டர் ஜெனரலிடம் நேரடியாக ஆலோசனை பெற்றது சரியே'- தினமணி

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்- யாஹூ!   

"விஜேந்தர் சிங் 12 தடவை ஹெராயின் உட்கொண்டார்'தினமணி

ஐபிஎல் முதல் ஆட்டம்: டிவில்லியர்ஸ் விலகல்- தினமணி

கொமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: சுவிஸ் ...- நியூஇந்தியாநியூஸ்          

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

06/04/2013 & 07/04/2013

6.00 AM

onwards

Maa Aadhya Sakthi Dham Mandir, Rohini

Radha Kalyana Mahotsava

12th Anniversary Celebrations

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9891064432,

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment