02-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 182 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெருமை (GREATNESS) இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப் பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர்.
அறிவிலார் இல்வாழ்க்கைநிலை எனக்கருதி வீணாள் கழிப்பர்; அறிவுடையார் அதன் நிலையாமையை உணர்ந்து அதைவிரும்பார். பொருள்: இல் வாழ்க்கையை மேற்கொண்டதனால் இன்புற்றோம்; இந்த இல்வாழ்க்கையில் ஒரு குறையுமின்றி இருக்கின்றோம்' என்று எண்ணிப் பின்னர் வரப்போகும் துன்பத்தை மறந்து நடப்பர் அறிவிலாதார். இல்வாழ்க்கை இன்பங்கள் நிலைபெற்றன போல் காணப்பட்டு நிலையில்லாது அழிபவை என்ற உண்மையை அறிந்தவர்கள் ஒரு போதும் வருந்தார், இல்வாழ்க்கையில் வருவன துன்பமே என்ற உணர்வுடையர் எதிலும் பற்றற்று இருப்பர் என்பது பெருமையாகும்).. Explanation (G. U. POPE): Fools make their home in a changing world. Fools thinking ' we have found joy in the refuge of home,' and ' we are here in perfect repose,' forgetful (of the instability of all things), go on their way. Those who have felt that that ' refuge ' is unstable, while it seems to stand fast, never fix their fond desire (on it). | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர்.
புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.
சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செப்புக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர்.
இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது இச் செபுக்கு செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே.
சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் - தினமணி இடிந்தகரைக்கு செய்தி சேகரிக்க வந்த ஜெர்மன் பெண் நிருபருக்கு போலீஸார் அனுமதி மறுப்பு - தினமணி இயற்கை எரிவாயு விலை: மத்திய அரசுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை - யாஹூ! சூரஜூக்கு நிபந்தனை ஜாமீன் - தினகரன் ஆசிய தடகள சங்கத் தலைவர் தேர்தலில் கல்மாடி தோல்வி - தினமணி பெடரல் முன்னணிக்கு வாய்ப்பு : சமாஜ்வாடி கருத்து - தினகரன் புதுச்சேரி, தில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநர்கள் - தினமணி தாய்மொழி மட்டுமே ஒருவரின் அடையாளமாக இருக்க முடியும்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் - தினமணி டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு -தினமணி 38 நாடுகளின் தூதரகத்தை உளவு பார்த்தது அமெரிக்கா தினகரன் கான்ஃபெடரேஷன் கோப்பை: பிரேசில் "ஹாட்ரிக்' சாம்பியன் - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
04/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, Rohini | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, July 2, 2013
02-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment