Wednesday, July 24, 2013

24-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

24-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௮(8)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred)

ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ...

உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

 

"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

 

"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்..

ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி.

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com  எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred).

நாளொரு நாலடி – 201

பொருட்பால்துறவற இயல்  சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED)

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்

கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு

அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்

கேளிரைக் காணக் கெடும்.

 

வறுமைமுதலியவற்றான் எய்திய இடுக்கண் அன்புள்ள சுற்றத்தாரைக் காணிற்கெடும். 

பொருள்:    

வயாவும் வருத்தமும்ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய்மறந்தாங்கு - கருவுற்றபோது தோன்றிய வேட்கைத்துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும்,கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும்தாய் தன் தொடையில் மகனைக் கண்டுமறந்துவிட்டாற்போல, அசா தான் உற்ற வருத்தம் -முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்ததுன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் -ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக்கண்டவளவில் நீங்கும்.

Explanation (G. U. POPE):

Comfort from sympathy of kinsmen.

As a mother when she sees her son upon her lap forgets the languors, the pains, and the throes of birth;  so trouble arising from weakness will die when a man sees his sympathizing kinsmen around him.

உங்களுக்குத் தெரியுமா?

அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது.

 

ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.

 

அல்கம்பிரா அமைந்துள்ள சமவெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் (674 அடி) அகலமும் கொண்டது. இது மேல்வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 சதுர மீட்டர்கள் பரப்பளவையும் கொண்டுள்ளது. இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட அல்கசாபா (உள்நகரம்) அமைந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. இப்பகுதியைச் சூழ 13 கோபுரங்களைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக் கோபுரங்களுட் சில பாதுகாப்புக் காரணங்களுக்கானவை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை  - தினமணி

பா.ஜ., பிரமுகர் கொலையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல் : -   தினமலர்

அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா .... -  தினமணி

மத்திய அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்: அதிகாரத்தை இழக்கும் … -  தினமலர்

அமெரிக்க அரசு மோடிக்கு விசா கொடுக்க 65 எம்.பி.க்கள் எதிர்ப்பு -  தினகரன்

முல்லைப் பெரியாறு அணை வழக்கு: தமிழகத்தின் உரிமையை தெளிவுபடுத்த வேண்டும் -  தினமணி

பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ஹிஸ்புல் ராணுவ பிரிவு - தின பூமி

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் ... -  தினகரன்

லாலுவுக்கு எதிரான கால்நடை தீவன ஊழல் வழக்கில் நீதிபதியை ...- தினமணி

பா.ஜ., - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டு சதி : புலம்புகிறார் பீகார் ... -  தினமலர்

20% இருப்பு வைக்க வேண்டும் தங்கம் இறக்குமதிக்கு புதிய ... - தினகரன்  

ஜுவாலா, அஷ்வினி போர்க்கொடி: பாட்மின்டன் லீக் ஏலத்தில் சர்ச்சை -  யாஹூ!

இந்தியா-ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: இன்று தொடக்கம் -  தினமணி

வீடு வாடைக்கு

2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 +  negotiatble. For details contacts -9818954298/2462109

Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking  Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc.  Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com 

Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.)   Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/07/2013

6.30 P.M. Onwards   

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

Sri Devi Kamakshi Mandir, "Kamakoti", New Delhi

79th Jayanthi (Vardhanthi) of Sri Periaval  Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Veda Upanishad Parayanam

Kamakoti Peetam Jagadguru Sri Sankaracharya Swamigal

011—26867240 / 26520202

26/07/2013

6.00 PM to 8.30 PM.

Shri Siddhi Ganesha Mandir , Gurgaon

Bhagawathi Seva -  worship of Devi Durga

Shri Siddhi Ganesha Cultural Society

 

26/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Sahambari Alankaram

Vedic Prachar Sansthan

 

26.7.13

Friday

Sri Ram Mandir, Dwarka

9.00AM onwards

Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Chandana Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

02.08.13

Friday

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

09.08.13

Friday

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

27/07/13

&

28/07/13

06.30 PM onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi.

கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள்

27th - மீசை ஆனாலும் மனைவி ,

28th - சாக்லேட் கிருஷ்ணா

Delhi Tamil Sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment