Tuesday, July 23, 2013

23-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

23-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௭(7)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred)

ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ...

உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

 

"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

 

"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்..

ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி.

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com  எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred).

நாளொரு நாலடி – 200

பொருட்பால்துறவற இயல்  தாளாண்மை (PERSEVERING ENERGY)

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்

கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்

பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை

நீரும் அமிழ்தாய் விடும்.

 

முயற்சியில்லாத கீழோர் மானமின்றி இரந்துண்பர்; முயற்சியுடையார் அதனாற்கிடைத்த நீரை ஆயினும் உண்டு மானங் கெடாது வாழ்வர். 

பொருள்:    

பெருமுத்தரையர் பெரிதுஉவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் -முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர்என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடியஉணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும்அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற,தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் -அவர்க்கத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல்உறுதி.

Explanation (G. U. POPE):

The scant fare of the laborious is the diet of the gods.

The base feed full of rice and savoury food, that men, great lords of the triple lands, with generous gladness give; but water won with willing strenuous toil by those who know not savoury food by name even, will turn to nectar.

உங்களுக்குத் தெரியுமா?

புத்தகப்புழு (The Bookworm) என்பது 1850 ஆம் ஆண்டில் செருமன் ஓவியரும் கவிஞருமான கார்ல் இசுப்பிட்சுவெக் (Carl Spitzweg) என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இவ்வோவியம் நெப்போலியப் போர்களுக்கும், 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பாவின் உள்நோக்கிய, பழமைவாத மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதே நேரம், பரந்த உலகில் சுற்றிலும் நடப்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் கல்விமான் ஒருவரினூடாக அவ்வாறான மனப்போக்கைக் கேலியும் செய்கிறது.

 

ஓவியத்தில், ஒழுங்கற்ற முறையில் உடையணிந்த ஒர் வயதான புத்தக விரும்பி, நூலக ஏணி மேல் ஏறி நிற்கிறார். அவர் தமது கைகளுக்கு அடியிலும் கால்களுக்கு இடையிலும் பல புத்தகங்களைச் செருகி வைத்தபடி, இன்னொரு புத்தகத்தை விரித்து வாசித்துக் கொண்டு நிற்கிறார். தனது சூழலையே மறந்தவராக அவர் தனது ஆராய்ச்சியில் மூழ்கிப்போயிருக்கிறார். சரியாக வைக்கப்படாத கைக்குட்டை ஒன்று சட்டைப் பையிலிருந்து அலங்கோலமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. உள்நோக்கிய மனப்போக்கைக் காட்டும் ஓவியங்களோடு கூடிய உட்கூரையும் பிற அழகூட்டல் கூறுகளும் ஒருகாலத்தில் அந்த நூலகம் இருந்த உயர்வான நிலையைக் காட்டினாலும், படத்தில் தூசி படிந்து காணப்படுகிறது.

 

ஓவியத்தின் வலது கீழ் மூலையில் நிறம் மங்கிப்போன ஒரு புவிக் கோளம் காணப்படுகிறது. கல்விமான் கையில் வைத்திருக்கும் நூல் மேலேயிருந்து வரும் மென்மையான பொன்னிற ஒளிக் கற்றைகளால் ஒளியூட்டப்படுகிறது. இவ்வாறான ஒளி இசுப்பிட்சிவெக்கின் ஓவியங்களில் காணப்படும் அவரது முத்திரை எனலாம்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கட்சியினருக்கு ராகுல் எச்சரிக்கை  - தினமணி

பா.ஜ., பிரமுகர் கொலை: மும்பையில் பதற்றம் -  தினமலர்

லோக்சபா தேர்தலுக்கு மதச்சாயம் பூச காங்கிரஸ் முயற்சி: அருண் ஜேட்லி  -யாஹூ! 

நீரில் கச்சா எண்ணெய் கசிவு: எண்ணெய் நிறுவனங்கள் மீது ... -  தினமணி

பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு ஆண் வாரிசு!-  தினமணி

இந்தியன் பேட்மின்டன் லீக் ஏலம் சாய்னாவுக்கு ரூ.72 லட்சம் -  தினகரன்

ஆஷஸ் தொடரை வெல்வோம்: மைக்கேல் கிளார்க் நம்பிக்கை -  தினமணி

மக்களவைத் தேர்தலுக்கு மதச்சாயம் பூச காங்கிரஸ் முயற்சி: அருண் ஜேட்லி -  தினமணி

அஞ்சல் வழி எம்.பில்., பிஎச்.டி. பட்டம் வேலைவாய்ப்புக்கு .... - தினமணி

20000 வீடுகள் தரைமட்டம் சீனாவில் பயங்கர நிலநடுக்கம் - தினகரன்  

தெற்கு ஆசிய டேபிள் டென்னிஸ்: சுதான்ஷு, சுதிர்தா சாம்பியன் -  தினமணி

வீடு வாடைக்கு

2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 +  negotiatble. For details contacts -9818954298/2462109

Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking  Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc.  Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com 

Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.)   Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26/07/2013

6.00 PM to 8.30 PM.

Shri Siddhi Ganesha Mandir , Gurgaon

Bhagawathi Seva -  worship of Devi Durga

Shri Siddhi Ganesha Cultural Society

 

26/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Sahambari Alankaram

Vedic Prachar Sansthan

 

26.7.13

Friday

Sri Ram Mandir, Dwarka

9.00AM onwards

Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Chandana Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

02.08.13

Friday

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

09.08.13

Friday

ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

16.8.13

Friday

VARALAKSHMI VIRATHAM

6.00PM:  Mahalakshmi Alankaram

27/07/13

&

28/07/13

06.30 PM onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi.

கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள்

27th - மீசை ஆனாலும் மனைவி ,

28th - சாக்லேட் கிருஷ்ணா

Delhi Tamil Sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment