05-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 185 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெருமை (GREATNESS) உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச் 1செய்வர் செயற்பா லவை.
செல்வம் அழிந்தாலும் பெரியோர் செய்யுந் தர்மங்களைச் செய்வார். பொருள்: உறுபுனல் தந்து உலகுஊட்டி-நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்துஉலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல் ஊற்றுழிஊறும் ஆறேபோல் - நீர் வறளுங் காலத்தும்தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும்ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி-உள்ளகாலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவிசெய்து,கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கும் ஆற்றிச்செய்வர் செயற்பாலவை - அப் பொருள் கெட்டுநிலையழிந்த காலத்தும் மேன்மக்கள்,சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம்செய்தற்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பர்.
Explanation (G. U. POPE): Great men do not neglect duties because of poverty. The river pours forth a mighty stream and feeds the world; and when it is dried up, if men dig in its bed, streams gush out! So good men, when rich, give to many; and, when ruined, give still at least to some, and do what should be done. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கிரிஸ் (Kris) என்பது மலாய் தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களின் பாரம்பரியக் கத்தியாகும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை ஆகிய நாடுகளிற் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் முன்னர் இது பயன்படுத்தப்பட்ட போதிலும் தற்போது இது தடைசெய்யப்பட்டுள்ளது.
கிரிஸ் கத்தி முதலில் ஜாவா தீவில் தோன்றியது என்றும் பின்னர் அது மெல்ல மெல்ல மலாய் தீவு கூட்டம் எனப்படும் தற்போதய தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பரவியது என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறனர் . இது 600 ஆண்டுகள் பழமை மிக்கது. கிரிஸ் கத்தியை மற்ற கத்திகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அது வடிவத்தில் அதிகளவில் வேறுப்பட்டிருக்கும்; நெளிவு நெளிவாக முறுக்கியபடியான அமைப்பைக் கொண்டிருக்கும். இது இரும்பினால் செய்யப்படுகிறது.
கிரிஸ் கத்தியை மலாய் மக்கள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தினாலும் பின்னாளில் சிலாட் எனும் தற்காப்புக் கலைக்குரிய கருவியாக அது மருவப்பட்டது. அத்துடன் நிற்காமல் கிரிஸ் கத்தி ஆண்களின் அலங்காரப் பொருளாகவுமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மலாய் மன்னர்கள் கூட கிரிஸ் கத்தியை செங்கோலுக்கு பதிலாகவும் தங்களின் ஆட்சியின் அடையாளமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
கிரிஸ் கத்தியை மூன்று பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். நுனிப் பகுதி, நடுப் பகுதி மற்றும் பிடிப் பகுதி. இது அளவில் சிறியதாக இருப்பினும் எடை சற்று அதிகமாகவே இருக்கும். மலாய் மக்களிடையே தமேங் சாரி எனப்படும் கிரிஸ் கத்தியை பற்றிய புனைவு கதை என்பது மிக பிரபலம். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
3 மாதத்தில் 3 தாம்கள் செயல்படும்: உத்தரகண்ட் முதல்வர் சிறப்புப் பேட்டி - தினமணி வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல் -தினமணி உணவுப் பாதுகாப்பு மசோதா ஒரு அரசியல் சித்து விளையாட்டு - தினமணி சீனாவில் ஏ.கே.அந்தோனி - தினமணி என்.எல்.சி. பங்கு விற்பனை: சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் - தினமணி எகிப்தில் மீண்டும் ராணுவ புரட்சி - தினகரன் அமெரிக்காவில் மூளை சேதம் அடைந்தவருக்கு ரூ.350 கோடி ... – தினமலர் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது : சீன தளபதி ... - தினமலர் கணினி மவுஸை கண்டுபிடித்த டக்ளஸ் எங்கெல்பார்ட் மரணம் - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
5/07/13 to 9/07/13 6.30AM to 12.00 PM | Sri Ram Mandir | Bhagawatha Saptaham by Brahmasri Ravi Rama Das | Sri Ram Mandir |
| |
5/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
06/07/13 6.30PM onwards | Delhi Tamil Sangam | குரு சுப்புலட்சுமி கணேஷ் அவர்களின் மாணவி சுருதி ரங்கராஜன் வழங்கும் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
06/07/13
| 6.00PM குரு கனகா சுதாகர் அவர்களின் மாணவி அனுஷா ராமசந்திரன் வழங்கும் பரதநாட்டியம் 7.30PM தமிழிசை வித்யா சுப்ரமணியன் – பாட்டு நாராயணன் – வயலின் பி. வெற்றிபூபதி – மிருதங்கம் ராமமூர்த்தி – கடம் | ||||
14/07/2013 | Aiswarya Maha Ganapathy Temple, Lawrence Road, Delhi | Sai Bajan by Madhur & Party |
|
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, July 5, 2013
05-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment