19-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 அவ்வைத் தமிழ்சங்கம், கோடை நாடக விழா, 10-11, ஆகஸ்ட், 2013 மாலை 5 மணி முதல், இடம்: Kribhco Auditorium, Sector -1 Noida. ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர் : எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் [with full correspondence address, contact mobile number (two numbers preferred)]. | |||||
நாளொரு நாலடி – 197 | |||||
பொருட்பால்– துறவற இயல்– தாளாண்மை (PERSEVERING ENERGY) சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்.
சிதலாலே தின்னப்பட்ட ஆலமரத்தைத் தன்விழுது பற்றாகத் தாங்கினாற் போலத் தந்தையிடத்தில் தளர்ச்சி தோன்றில் அவன்பெற்ற புதல்வன் பாதுகாக்கக் கெடும். பொருள்: சிதலை தினப்பட்டஆலமரத்தை - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - அதன் விழுதுஅதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றிநின்றாற்போல, குதலைமை தந்தை கண் தோன்றில் -தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால்,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன்பெற்றெடுத்த புதல்வன் பாதுகாக்க அது நீங்கும். Explanation (G. U. POPE): The worthy son conceals his sire's defects, and sustains his weakness. If the banyan's trunk be eaten by the gnawing ant, its 'branch-root' bears it up, like a buttress; even so, when decay appears in the sire, the son he has begotten shall hide it, and weakness is no more. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நாய்ச்சண்டை (Dogfight) என்பது வான்போரில் ஈடுபடும் சண்டை விமானங்கள் பங்கேற்கும் ஒரு சண்டை வகை. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்கள் இச்சண்டையில் பங்கேற்கின்றன. பங்கேற்கும் விமானங்கள் அருகில் எதிரி விமானங்கள் உள்ளன என்பதை உணர்ந்தே சண்டையில் ஈடுபடுகினறன. குறுகிய எல்லைக்குள் அதிவேகத்தில் நடக்கும் இச்சண்டையின் இலக்கு எதிரி விமானத்தை வீழ்த்துவதே. இதற்காக துப்பாக்கிகள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை விமானங்கள் பயன்படுத்துகின்றன.
விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் பெரிய போர் முதலாம் உலகப் போர். இப்போரில் தான் முதன் முதலில் விமானங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் எதிரிகளின் தரைப்படைகள் மீது குண்டு வீசவும், உளவு பார்க்கவும் மட்டுமே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இரு தரப்பு விமானங்களும் நடு வான்வெளியில் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. "நாய்ச்சண்டை" என்ற பெயர் இவ்வாறு தான் ஏற்பட்டது. நாய்க்கூட்டங்கள் மூர்க்கத்துடன் சாகும்வரை ஒன்றையொன்று தாக்கிச் சண்டையிடுவது போல இந்த சண்டை முறை அமைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. 1919ம் ஆண்டே "நாய்ச்சண்டை" என்ற தொடர் அச்சில் வந்து விட்டாலும், இரண்டாம் உலகப் போரில் தான் பிரபலமானது. தற்கால வான்படை விமானிகளுக்கு நாய்ச்சண்டை உத்திகளில் பயிற்சி அளிப்பது இன்றியமையாததாகி விட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார் ... - nakkheeran publications மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - தினமலர் செபிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அவசர சட்டம் - தினமணி 2008ல் பதில் மனு தாக்கல் செய்திருந்தால் கச்சத்தீவு கைவிட்டு ... - தினகரன் மருத்துவப் படிப்பு: பொது நுழைவுத் தேர்வு ரத்து - தினமணி 55 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு - தினமலர் காஷ்மீரில் வன்முறை ராணுவம் சுட்டு 6 பேர் பலி - தினகரன் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சதாசிவம் இன்று பதவி ஏற்பு ... - மாலை மலர் மண்டேலாவின் 95-வது பிறந்த நாள் - தினமணி அமெரிக்க பங்கு சந்தை மோசடி:ரஜத் குப்தாவுக்கு ரூ.83 கோடி ... - யாஹூ! ஐபிஎல்லில் அடுத்த சர்ச்சை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் ... – தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, CSC-9, Sector -7, Rohini, Delhi. | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
19.7.13 Friday
| Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Manjal Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
26.7.13 Friday | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | ||||
02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||
09.08.13 Friday | ADI PURAM, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
16.8.13 Friday | VARALAKSHMI VIRATHAM 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
20/07/13 2.00PM & 6.00PM | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam |
| |
21/07/13 10. 00 AM onwards | "அறிவியல் ஆராய்ச்சி மையம்" தொடக்க விழா மற்றும் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்" மாநாடு. | ||||
27/07/13 & 28/07/13 06.30 PM onwards | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | ||||
21/07/2013 6.30 PM onwards | Kamani Auditorium | A Dance Drama on Empowerment of Women - Yashodhara - An Episode from the Story of Gautama Buddha | Ganesh Natyalaya | 011 – 26862995 26567397 | |
21/07/2013 | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini | Thiruvilakku Pooja | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9999423944 9891064432 9953682070 9871154466 | |
26/07/2013 6.00 PM to 8.30 PM. | Shri Siddhi Ganesha Mandir , Gurgaon | Bhagawathi Seva - worship of Devi Durga | Shri Siddhi Ganesha Cultural Society |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, July 19, 2013
19-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment