Monday, July 29, 2013

29-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி- ௧௩(13)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோடை விழா – 2013  (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா)

Kodai Vizhaa 2013Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards

இடம் / Venue:  Kribhco Auditorium, Sector -1 Noida.

Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred)

ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ...

உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு

 

"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.

 

"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்..

ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி.

அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com  எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred).

நாளொரு நாலடி – 205

பொருட்பால்துறவற இயல்  சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED)

'இன்னர்; இனையர்; எமர்; பிறர்' என்னும் சொல்

என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி,

தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே,-யார்மாட்டும்

தலைமக்கள் ஆகற்பாலார்.

 

யாவரையும் உறவினராக கருதிக்காப்பவரே மேன்மக்கள் ஆவர். 

பொருள்:    

இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும்இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும்இலராகிய தன்மையினால், துன்னித் தொலைமக்கள்துன்பம் தீர்ப்பாரே - நிலையிழந்த மக்களின்இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே,யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் -அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும்இயல்புடையவராவர்.

Explanation (G. U. POPE):

Universal benevolence.

'Such are they and so many;' 'these are ours; those strange:' those worthy to be classed as chief of men say nothing like this ; so to speak is not their nature ; for they relieve the distress of all that troubled come to them.

உங்களுக்குத் தெரியுமா?

கனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும்.

சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.

உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது.

உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை உடலிலிருந்து வெளியேற்றும்.

குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும்.

உடற்சமநிலையைப் பேணவல்லது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு -  தினமலர்

தெலங்கானா: 31-ல் முக்கிய முடிவு- தினமணி

"பைக் ரேஸ்' இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு:குண்டு பாய்ந்து ... -  தினமலர்

ஈரான் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - தினமணி

ஐபிஎல் ஊழல்: விசாரணை அறிக்கை பிசிசிஐயிடம் கையளிப்பு - பிபிசி        

2014 தேர்தலில் பா.ஜ.க. வரலாறு படைக்கும்: அத்வானி - தின பூமி   

அசாம்: கையெறி குண்டு வீச்சில் 15 பேர் காயம் -  தினமணி

ஃபரீத்கோட் மன்னரின் மகள்களுக்கே ரூ.20,000 கோடி சொத்து: நீதிமன்றம் தீர்ப்பு

முர்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு எகிப்தில் 200 பேர் பலி; 5000 ...- தினமலர்

இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக இந்திய ... - லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

02.08.13

Friday

Sri Ram Mandir, Dwarka

 

9.00AM onwards

Sivanandhalahari,

Deeparadhanai, Prasada Viniyogam

6.00PM:  Saraswati Alankaram

Sri Ram Mandir, Dwarka

 

09.08.13

Friday

Adi Puram, Lalitha Sahasranama & Vishnu

Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam.

6.00PM:  Valai (Bangle) Alankaram

16.8.13

Friday

Varalakshmi Viratham

6.00PM:  Mahalakshmi Alankaram

03.08.13

6.00 PM Onwards

தில்லி தமிழ் சங்கம்

லண்டன் மெய்கண்டார் ஆதீனத்துடன் இணைந்து 

தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழா  சிறப்புரை  யோகானந்தா அடிகள் பாரிஸ் தலைமை புலவர் விஸ்வநாதன் உரை  முனைவர் சந்திரசேகரன், ஜான் சுந்தர் , எச் பாலசுப்பிரமணியம்

 

 

04.08.13

9.00 AM Onwards

Sree Ayyappa Temple, Rohini

Vilakku pooja

Rohini Sree Vishnu Sahasranama Satsangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment