08-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) கலைமாமணி, நாடக கலாசாரதி காத்தாடி ராமமூர்த்தி மற்றும் குழுவினர் நடிக்கும் நீங்க யார் பக்கம்? பிள்ளையார் பிடிக்க ... இரு நகைச்சுவை நாடகங்கள் மற்றும் சாதனையாளர் விருதுகள் நேரம்: August 10 & 11, 2013 (Sat / Sun) 5 PM இடம்: Kribhco Auditorium, Sector -1, Noida NEAR SECTOR-15 METRO STATION ( BLUE LINE)
Kodai Vizhaa 2013 –Drama festival & Achiver awards on 10th & 11th August 2013, 5 PM onwards Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Time: 5.00 PM Onwards
For invitation click here... http://data.axmag.com/data/201308/20130806/U51138_F232348/index.html
நிகழ்ச்சி நிரல் 10-8-2013 மாலை 5.00 மணி § அவ்வை அதியமான் நட்பு விருது: தில்லிகை இலக்கிய வட்டம் § விழா தலைமை: திரு. M. ராமச்சந்திரன் அவர்கள்(EVP & Regional Head (North), HDFC Bank Ltd., § வானம்பாடி நாடக குழு, மயூர்விஹார் – 3 வழங்கும் "நவீன திருவிளையாடல்" – குறு நாடகம் கதை வசனம் இயக்கம்: திருமதி ருக்மணி மகாலிங்கம் § Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும் " நீங்க யார் பக்கம்?" தற்போதைய நடுத்தர குடும்பப் பெற்றோர் அமெரிக்காவில் வேலை செய்யும் அவர்களின் இளவல்ககளாடு ஆசையாக இருக்க அங்கே போய் அனுபவிக்கும் உண்மை நிலையை சொல்ல முடியாமல் பொய் பெருமை கூறுவதின் யதார்த்தத்தை அழகாகச் சொல்கிறது இந்த நாடகம். கதை, வசனம், இயக்கம் S. L. நாணு 11-8-2013 ஞாயிறு மாலை 5 மணி § வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது: Col.M S கிருஷ்ணமூர்த்தி அவர்கள், Freedom Fighter, Second World War Veteran Army Officer, Writer Chairman, Sri Ram Mandir trust, N.Delhi. § விழா தலைமை: நீதியரசர் மாண்புமிகு கற்பக விநாயகம் அவர்கள், Chair Person – Appellate Tribunal for Electricity § Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும் "பிள்ளையார் பிடிக்க..." இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது நாடகத்தின் கரு. முன்பு பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டத்தை, இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் செய்தால்? சிாிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நாடகம். அவ்வை தமிழ்ச்சங்க உறுப்பினராக விருப்பமா? விவரங்களுக்கு 9818092191 | |||||
நாளொரு நாலடி – 214 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.) பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும் நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத் தியாத்தாரோ டியாத்த தொடர்பு.
மனம் கலந்து நட்புச்செய்தவர் நான் பிரிந்திருப்பினும் அவர் நட்பை அறிவுடையார் விடார். பொருள்: பலநாளும்பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும்ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்துபழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும்நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர்சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல்உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப்பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர்பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்றுகைவிடப் படுதலுண்டோ? Explanation (G. U. POPE): Friends are not to be forsaken because long severed. Though men dwell side by side for many days, when their souls cleave not (are not congenial), for even a few days they retain not their friendship. But is it possible to let go attachment's well-knit ties, though those to whom one's soul is knit dwell many days a far? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் கிலாண்டு பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் முதன்மையான பணி தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் சிக்கல்களுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ள உதவுவதும் அதனால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கான சவால்களை உலகம் எதிர்கொள்ள உதவுவதும் ஆகும்.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அந்தோனி கருத்தால் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - தினமணி உயிரிழந்த 4 வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: நிதீஷ் அறிவிப்பு – தினமணி நெல்லை அணைகள் நிரம்புகின்றன - தினமலர் அதிரடி ரெய்டில் கண்டுபிடிப்பு 2 லட்சம் டன் தாது மணல் திருட்டு- தினகரன் டெசோ: கருணாநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் – தினமணி கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.5821 கோடி நிலுவை - யாஹூ! உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விவசாயிகள் நலனில் கவனம் தேவை - தினமணி நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ.க்கு ஒத்துழைப்பு தர உத்தரவு - தின பூமி சோனியா தொகுதியில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
10.08.13 5.00 PM Onwards | Kribhco Auditorium, Sector -1 Noida. | காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரு நாடகங்கள். நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு நீங்க யார் பக்கம்: அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம். | Avvai Tamil Sangam |
| |
11.08.13 5.00 PM Onwards | பிள்ளையார் பிடிக்க: இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம். | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Thursday, August 8, 2013
08-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment