10-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) கலைமாமணி, நாடக கலாசாரதி காத்தாடி ராமமூர்த்தி மற்றும் குழுவினர் நடிக்கும் நீங்க யார் பக்கம்? பிள்ளையார் பிடிக்க ... இரு நகைச்சுவை நாடகங்கள் மற்றும் சாதனையாளர் விருதுகள் நேரம்: August 10 & 11, 2013 (Sat / Sun) 5 PM இடம்: Kribhco Auditorium, Sector -1, Noida NEAR SECTOR-15 METRO STATION ( BLUE LINE)
Kodai Vizhaa 2013 –Drama festival & Achiever awards on 10th & 11th August 2013, 5 PM onwards Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Time: 5.00 PM Onwards
For invitation click here... http://data.axmag.com/data/201308/20130806/U51138_F232348/index.html
நிகழ்ச்சி நிரல் 10-8-2013 மாலை 5.00 மணி (இன்று) § அவ்வை அதியமான் நட்பு விருது: தில்லிகை இலக்கிய வட்டம் § விழா தலைமை: திரு. M. ராமச்சந்திரன் அவர்கள்(EVP & Regional Head (North), HDFC Bank Ltd., § வானம்பாடி நாடக குழு, மயூர்விஹார் – 3 வழங்கும் "நவீன திருவிளையாடல்" – குறு நாடகம் கதை வசனம் இயக்கம்: திருமதி ருக்மணி மகாலிங்கம் § Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும் " நீங்க யார் பக்கம்?" தற்போதைய நடுத்தர குடும்பப் பெற்றோர் அமெரிக்காவில் வேலை செய்யும் அவர்களின் இளவல்ககளாடு ஆசையாக இருக்க அங்கே போய் அனுபவிக்கும் உண்மை நிலையை சொல்ல முடியாமல் பொய் பெருமை கூறுவதின் யதார்த்தத்தை அழகாகச் சொல்கிறது இந்த நாடகம். கதை, வசனம், இயக்கம் S. L. நாணு 11-8-2013 ஞாயிறு மாலை 5 மணி § வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது: Col.M S கிருஷ்ணமூர்த்தி அவர்கள், Freedom Fighter, Second World War Veteran Army Officer, Writer Chairman, Sri Ram Mandir trust, N.Delhi. § விழா தலைமை: நீதியரசர் மாண்புமிகு கற்பக விநாயகம் அவர்கள், Chair Person – Appellate Tribunal for Electricity § Stage creations காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் வழங்கும் "பிள்ளையார் பிடிக்க..." இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது நாடகத்தின் கரு. முன்பு பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டத்தை, இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் செய்தால்? சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நாடகம். அவ்வை தமிழ்ச்சங்க உறுப்பினராக விருப்பமா? விவரங்களுக்கு 9818092191 | |||||
நாளொரு நாலடி – 216 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பாராய்தல்(SCRUTINY IN FORMING FRIENDSHIPS.) கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு.
கடை , இடை, தலையானவர் நட்பு இன்னது. பொருள்: நட்பில் - நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் -கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர்தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனைத்தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - ஏனைஉயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, எண்அரு பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே - மதிப்புமிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம்ஊன்றிய போது ஊன்றியதேயாம்.
Explanation (G. U. POPE): Three grades of friends. The lowest sort of men in friendship are like the Arecanut tree. The middle sort are like the Cocoa-nut tree. Attachments to the chief of men—who are old friends is like the Palmyra tree of rare worth: what was given that first day was given once for all. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆளி உலகம் முழுதும் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் வாழும் மெல்லுடலி மீன் வகையைச் சார்ந்த ஓடுடைய உயிரினமாகும். இதன் உடலின் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் உட்பகுதிகள் புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகின்றன.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தூத்துக்குடியில், "கார்னெட்' மணல் அள்ள தடை - தினமலர் லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி – தினமணி மக்களவை தேர்தல் பிரசாரம் மோடி நாளை துவக்குகிறார் – தினகரன் கூடங்குளத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100 மெகா வாட்- யாஹூ! தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டும் – தினமணி குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷன் ரூ.1,000 கிடைக்குமா? - தினமலர் டெல்லி, முக்கிய நகரங்களை தகர்க்க லஷ்கர் சதி நாடு முழுவதும் ... - தினகரன் தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருந்தான் : பாக்., அதிகாரி ... - யாஹூ! மர்மமான முறையில் உடலில் தீப்பிடிக்கும் குழந்தை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி - தினமணி ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் பயஸ் ஸ்டெபனெக் ஜோடி தோல்வி - தினகரன் மான்ட்ரீல் மாஸ்டர்ஸ்: ஆன்டி முர்ரே "அவுட்'- தினமணி ஆஷஸ்: இங்கிலாந்து தடுமாற்றம். - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
10.08.13 5.00 PM Onwards | Kribhco Auditorium, Sector -1 Noida. | காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரு நாடகங்கள். நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு நீங்க யார் பக்கம்: அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம். | Avvai Tamil Sangam |
| |
11.08.13 5.00 PM Onwards | பிள்ளையார் பிடிக்க: இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம். | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, August 10, 2013
Kodai Vizhaa 2013 –Drama festival & Achiever Awards 5 PM onwards @ Kribhco Auditorium, Sector -1 Noida
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment