22-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய இரு நாள் கோடை விழாவின் புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.... To view the photos of Kodai Vizha 2013 Click Here | |||||
நாளொரு நாலடி – 226 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நட்பிற் பிழைபொறுத்தல்(BEARING AND FORBEARING IN FRIENDSHIP) இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை.
நண்பரைப் பிழையின் பொருட்டுப் பிரியல் ஆகாது. பொருள்: துன் அரு சீர் விண் குத்துநீள் வரை வெற்ப - அணுகுதற்கரிய சிறப்பினையுடைய,வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடையமலைநாடனே!, கண் குத்திற்றென்று தம் கை களைபவோ -தவறுதலால் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையைமக்கள் தறித்து நீக்கி விடுவார்களோ?, இன்னாசெயினும் விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல்தகுவதோ - ஆதலால், அறியாமையால் தீமைகள்செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நட்பினரைநெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமோ!ஆகாதென்க.
Explanation (G. U. POPE): Friends are not to he forsaken on account of their faults. When those from whom it is hard to part do evil things should men at once renounce them?—Lord of the lengthening hills that pierce the sky, whence rarest gifts descend! Do men cut off their hand because it pricked their eye? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சார் மணி (tsar-kolokol, சார் கொலோகோல்) உலகின் மிகப் பெரிய மணி.இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. சார் மணி ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபரின் உத்தியோகபூர்வ இடமான கிரெம்லினில் அமைந்துள்ளது. இம்மணி 1733-35 ஆம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டது. இந்த மணியானது மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டன. இதன் நிறை 445,170 பவுண்ட் (201,924 கி.கி) ஆகும். இதன் உயரம் 6.14 மீட்டர் (20.1 அடி). அத்துடன் அதன் விட்டம் 6.6 மீட்டர்கள் ஆகும். இந்த மணியினை 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததனர்.
1737 ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாகவே இம்மணியில் ஒரு துண்டு உடைந்தது. இந்த உடைந்த துண்டின் எடை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் இம்மணியானது ஒலிப்பதில்லை. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பாராளுமன்றம் முடங்குவதால் உணவு பாதுகாப்பு மசோதா ... - தினமணி கிராம பஞ்சாயத்துகள் தொலை தொடர்பு மூலம் இணைப்பு :ரூ.50 ... - தினமலர் முல்லைப் பெரியாறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு - தினமணி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.63.22ஆக ... - தினகரன் அருணாசலத்தில் சீனா ஊடுருவல் - தினமணி சென்னைக்கு இன்று வயது 375- தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name : V.Manikandan, DOB : 23rd December 1984, Father 's Name : P.K.Varadarajan Retired from, BHEL, Delhi, Time Of Birth : 6.30 PM, Place Of Birth: Bangalore, Star: Pooradam, Education: BA, GNIIT, Software testing, MBA., Profession: Executive (Operation), HP, Delhi. For further details contact: varadarajanpk@yahoo.co.in | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.08.13 6.00 AM Onwards | Arulmigu Varasiddhi Vinagar Koil, "G" Block, Sector 22, NOIDA | Sankatahara Chathurthi Ganapathy Homam, Abhishekam, Ashtothra Archanai | Vedic Prachar Sansthan (Regd) |
| |
24.08.13 6.30 PM Onwards | Chinmaya Auditorium, 89 Lodi Estate, New Delhi-110003 | Arangetram performance of Arundhati Prasad. Disciple of Dancer Geeta Chandran | Natya Vriksha Dance Company |
| |
25.08.13 7.00 PM Onwards | YUVATI, A Creative Bharatanatyam Group Performance by Padmashri Geeta Chandran and her Natya Vriksha Dance Company | ||||
25.08.13 10.00 AM Onwards | Lane along Katyayini Apartments(plot 8) & U.F.Aparments (plot 9)Sector 6 Dwarka | 10th Blood Donation Camp | Dwarakalaya in association with Rotary Club of Delhi Mayur Vihar | 9312247576, 9810116465 | |
24.08.13 to 09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening |
| 99680 93927, 9312247576 | |
28.08.13 06.30 PM Onwards | GOKULASHTAMI – Bhajan Sandhya by Sri. O.V.Ramani & Sh. J. Ramakrishnan and Party. | ||||
30.08.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | KRISHNA GANGA- A Unique Dance Production – A Bharatanatyam performance on the devotional musical compositions of Guru Bade Ramdas of Benaras Gharana | Sunaina – Society for the Upliftment of National Arts of India | 8588802608 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Thursday, August 22, 2013
22-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment