Wednesday, June 5, 2013

03-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

03-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௦(20)திங்கள் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 82

பெரியவர்களுக்குரிய மருந்துகளுக்கும், குழந்தைகளுக்கான மருந்துகளுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத விகிதாச்சார வித்தியாசம் உண்டு. பெரியவர்களுக்கான மருந்தைக் 'கொஞ்சமாக' கொடுத்தால் குழந்தைகளின் நோய் குணமாகும் என சிலர் நம்புவார்கள். அது மிகத் தவறு. குழந்தையின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்.

நாளொரு நாலடி 157

பொருட்பால்துறவற இயல்மேன்மக்கள்

மேலோரது தன்மை (GREAT MEN)

கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்

வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்

சாயிற் பரிவ திலர்.

மேலோர் மறந்துந் தீங்குசெய்யார்.

பொருள்:    

வடு அறு காட்சியார் -மாசு நீங்கிய தெளிவினையுடையார், கள்ளார் -பிறர் பொருளைக்கவரார்; கள் உண்ணார் - கள்அருந்தார்; கடிவ கடிந்து ஒரீஇ- விலக்கத் தகுந்ததீயவற்றை விலக்கி அவற்றின் நீங்கித் தூயராகி,எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் - பிறரைஅவமதித்து இகழ்ந்து உரையாடாமல் விளங்குவர்;தள்ளியும் வாயின் பொய் கூறார் - சோர்ந்தும்தம் வாயினாற் பொய் சொல்லார், சாயின் பரிவதுஇலர் - வினைவயத்தால் தம் செல்வாக்குக்குறையின், அதற்காக வருந்துவதும் இலராவர்.

Explanation (G. U. POPE):

The wise free from gross evils.

They defraud not, drink not palm-wine, shun what is forbidden, never despise and speak contemptuously of their neighbours, nor even forgetfully do they utter anything untrue with their mouth: these men of faultless vision grieve not though they fall into distress.

உங்களுக்குத் தெரியுமா?

சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.

 

1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.

இங்கிலாந்து மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த "டோர்மன் லோங் அன் கோ" என்ற நிறுவனத்திடம் இதன் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

 

தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்தூ தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தலைநகர்வாசிகளின் "அகமணி' ஆக தினமணி திகழும்: ஆசிரியர் கே. வைத்தியநாதன்  -  தினமணி    பி.சி.சி.ஐ. இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா  - தினமணி

தலைநகர்வாசிகளின் "அகமணி' ஆக தினமணி திகழும்: ஆசிரியர் கே. வைத்தியநாதன்   - தினமணி

ஷீலாவை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி- தினமலர்

அமெரிக்க சிறையில் உள்ள ஹெட்லியை ஒப்படைக்க இந்தியா ... -  தினமலர்

ஹெலிகாப்டர் விபத்து: அதிபர் அகமதிநெஜத் உயிர்தப்பினார்   தின பூமி

குஜராத் இடைத்தேர்தல்: பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி- தினமணி

கருணாநிதி 90வது பிறந்தநாள் முத்தமிழ் கருத்தரங்கம் -  தினகரன்

லெபனானுக்குள் நுழையும் சிரியாவின் உள்நாட்டுப் போர் -   பிபிசி

பிசிசிஐ செயற்குழு கூட்டம் வெறும் கண்துடைப்பே - தினமணி

பிரெஞ்சு ஓபன்: அல்மாக்ரோவை வெளியேற்றினார் ராப்ரிடோ  - தினமணி

பேயர்ன் முனிக் சாம்பியன்  - யாஹூ!

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

03/06/13

 &

04/06/13

6.30 PM onwards

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

03/06/13

Bhajan Sandhya by The Delhi Bhajana Samaj

04/06/13

Chatur Veda Parayanam by Shri Saravana Sastrigal.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

08/06/13

6.00 PM

 

Delhi Tamil Sangam

திருப்பதி திருச்சானூர்  பஞ்சஜன்யா குழுவினர் வழங்கும் வாத்திய சம்மேளனம்

Delhi Tamil Sangam

9811937936

9810271676

09/06/13

 

5.00 PM

செல்வி சுஷ்மா சோமசேகரன் வழங்கும் தமிழிசை

6.30 PM

இளைய பாரதம்

செல்வி சுகன்யா  வழங்கும் பரதநாட்டியம்.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment