Thursday, June 6, 2013

06-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

06-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௩(23)வியாழன் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 85

குழந்தையின் தோல் மிகவும் மிருதுவானது. அதை சரிவரக் கவனிக்க வேண்டும். உங்களுக்குரிய கிரீம்களை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். குழந்தை ஆயில், கிரீம் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

நாளொரு நாலடி 160

பொருட்பால்துறவற இயல்மேன்மக்கள்

மேலோரது தன்மை (GREAT MEN)

உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக்

கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய

பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல

குலந்தலைப் பட்ட விடத்து.

 

நற்குடியில் பிறந்தாரைச் சேர்ந்தொழுகுவோர் எல்லாநலமும் பெறுவர்.

பொருள்:    

உடையார் இவர் என்று ஒருதலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்றுவாழ்வர் - பொருளுடையார் இவர் என்று உறுதியாகப்பற்றி மக்களிற் பெரும்பாலார் கீழ்மக்கள்பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம்தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்டவிடத்து-சிறந்த மேன்மக்களினத்தைச்சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய ஒருபொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ?

Explanation (G. U. POPE):

The treasure cave.

The lowest sort of men say, 'these are men of property,' - cling to them steadily, follow them, and so flourish. Is it not as when a mine of treasure has been found, when men of good lineage have become our friends?

உங்களுக்குத் தெரியுமா?

பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு(Phoenicopterus roseus, P. minor) என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.

பூநாரைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது.பூநாரை ஈரமான களிமண்னால் கூடு கட்டும். ஈரமான களிமண்ணைக் உயரமாகக் கூப்பி வைக்கப்பட்ட கிண்ணம்போல் இதன் கூடு இருக்கும். சூரிய வெப்பத்தால் உலந்து கெட்டியாக இதன் கூடு அடுப்பில் வைத்து சுட்டது போலவே நேர்த்தியாக இருக்கும்

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜனநாயகத்தில் நக்சல் வன்முறைக்கு இடமில்லை: மன்மோகன் சிங்  -தினமணி

பயங்கரவாதத்தை ஒடுக்க மாநிலப் படை, நிதி!- தினமணி

2015-ல் இந்தியா ஆஸி., ராணுவ கூட்டுப்பயிற்சி-   தினமலர்

அரசு அச்சகத்தில் தீ விபத்து: கட்டடம் இடிந்தது- தினமணி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி ...-  தினமலர்

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி -தினமணி

ராகுலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு: அசாம் கண பரிஷத் - தினமணி

எம்.பி.பி.எஸ்., "ரேண்டம்' எண் நாளை வெளியீடு- தினமலர்

என்.சி.டி.சி நடைமுறைக்கு வராவிட்டால் நாடு அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்: ப.சிதம்பரம்  -  தினமணி

பழநி மலைக்கோயிலுக்கு சென்ற ரோப்கார் பழுதாகி நின்றது ...  -  தினகரன்  

ஸ்பாட் பிக்சிங்: ஷில்பா ஷெட்டி கணவரிடம் விசாரணை -  தின பூமி

பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஷரபோவா, அசரென்கா -   தினமணி

தேசிய சீனியர் தடகளம்: காயத்ரி, டின்டு தங்கம்- யாஹூ! 

சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்-  தினமணி

தடகளம்:தமிழக வீரர் பிரேம் குமார் சாதனை -  தினமணி

வீடு வாடகைக்கு

3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi.   Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space.  Parking available in the ground floor.  All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

08/06/13

6.00 PM

Delhi Tamil Sangam

திருப்பதி திருச்சானூர்  பஞ்சஜன்யா குழுவினர் வழங்கும் வாத்திய சம்மேளனம்

Delhi Tamil Sangam

9811937936

9810271676

09/06/13

 

5.00 PM

செல்வி சுஷ்மா சோமசேகரன் வழங்கும் தமிழிசை

6.30 PM

இளைய பாரதம்

செல்வி சுகன்யா  வழங்கும் பரதநாட்டியம்.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment