26-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 177 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நல்லினம் சேர்தல் உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD) பாலோ டளாயநீர் பாலாகு மல்லது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; -தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து.
பெரியோரைச் சேர்ந்த சிறியோர் இழிவு தோன்றாது. பொருள்: பாலோடு, அளாய நீர்பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்துதோன்றாது-பாலோடு கலந்த நீர் பாலாகித்தோன்றுமல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித்தோன்றாது; தேரின்-ஆராய்ந்தால், சிறியார்சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச்சார்ந்து - உயர்ந்த பெரியாருடையபெருந்தன்மையைச் சார்தலால் சிறியார்குறைபாடுந் தோன்றாமற் பெருமையேயாகும். Explanation (G. U. POPE): Water with milk seems milk. Commingled with milk water becomes milk; at least, it shows no more as water by its hue. Look close, the mean men's meanness shows not if they join themselves to greatness of the good and great. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square, மொழிபெயர்ப்பு: சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கம் ஆகும். சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடம் ஆகும். சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த போராட்டங்கள் மிக புகழ்பெற்றது ஆகும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு -தினமணி என்.எல்.சி. பங்குகளை வாங்க தமிழகம் தயார் - தினமணி தபால் நிலையங்களில் தந்திக்கு மாற்றாக இ-போஸ்ட் சேவை - தினமணி பிளாஸ்டிக் பையில் இனி திருப்பதி லட்டு : திருட்டை தடுக்க ...- தினமலர் உத்தரகண்ட்: மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் சாவு?- தினமணி பயங்கரவாதத்தை ஒன்றுபட்டு எதிர்ப்போம் : ஸ்ரீநகரிலிருந்து பிரதமர் ... – தினமலர் கூடங்குளத்தில் இருந்து 16 கி.மீ. சுற்றளவில் எந்தக் கிராமமும் இல்லை - தினமணி அமெரிக்க அமைப்புக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது ... - தினமலர் ஆப்கன் அதிபர் மாளிகை மீது தலிபான் தாக்குதல்- தினமணி விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ஸ்டோசர்-தினகரன் 2-வது சுற்றில் செரீனா, ஜோகோவிச் - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
29/06/13 6.30 PM | Delhi Tamil Sangam | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
04/07/2013 To 19/07/20136.00 AM onwards | Sri Ayyappa Temple, Rohini | Ayyappa Temple: Flagstaff Installation (Dwajasthambham) & Annual Festival | Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam |
| |
19/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26/07/2013 | Sahambari Alankaram | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, June 26, 2013
26-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment