24-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 100 | |||||
பென்சில், கிரையான்ஸ் போன்றவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். விலையைப் பார்க்காமல் நச்சுத் தன்மையற்ற பொருட்களாக பார்த்து வாங்குங்கள். ஆபத்தான பொருட்களை வாங்கிக் கொடுப்பதைவிட வாங்காமல் இருப்பது மிகவும் நல்லது.
இன்றுடன் "குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளர விடுங்கள்" பகுதி நிறைவு பெறுகிறது. இப்பகுதியில் வெளியிட்ட 100 ஆலோசனைகளையும் தொகுத்து ஒரே கட்டுரையாக பெற விரும்புவோர் avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும். இப்பகுதியை நமக்கு தொகுத்து அளித்து உதவிய திரு P. கன்னியப்பன் (முன்னாள் பொருளாளர் தில்லித் தமிழ்ச் சங்கம்) மற்றும் திரு. மார்கண்டு தேவராஜ்-ச்விச்ஸ் அவர்களுக்கும் நன்றி. ஈன்ற பொழுதினும் நீங்கள் பலமுறை பெரிதுவக்க வாழ்த்துக்கள்! | |||||
நாளொரு நாலடி – 175 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நல்லினம் சேர்தல் உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD) ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங் குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
சலதாரை நீரும் மிக்க நீரைச்சேர்ந்து தீர்த்தமாகும்; நல்லவர்கூட்டத்திற் சேரின் கீழோரும் மேலோர் ஆவார்கள். பொருள்: ஊர் அங்கண் நீர்உரவுநீர் சேர்ந்தக்கால் - ஊரின் சாக்கடை நீர்கடலைச் சேர்ந்தால், பேரும் பிறிதாகித்தீர்த்தம் ஆம் - பேரும் கடல் நீர் என்று வேறாகிஅருள் நீராகும், ஒரும் குலமாட்சி இல்லாரும் -மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாதகீழோரும், குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து -குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர்நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்துவிளங்குவர். Explanation (G. U. POPE): The water from the sewer becomes a sacred stream. When water from the town-sewers has joined the great river its very name is changed, and it becomes a 'sacred stream.' Ponder well! Even those who have no greatness of clan, if they ally themselves with good men of goodly fame, shall stand firm as a hill. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மாதுளை வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு செடி வகைசார்ந்த பழ வகையாகும். இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. 100 கிராம் மாதுளையில் 346 கிலோ யூல் ஆற்றல் கிடைக்கப்பெறும். இதன் தாயகம் பாரசீகம் மற்றும் இமயமலை சார்ந்த பகுதிகளாகும். இது இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுகிறது. ஆஃப்கானிஸ்தானிலுள்ள கந்தகார் நகரம் அதன் சுவைமிகு மாதுளைகளுக்காகப் பெயர்பெற்றது. படத்தில் பிளந்து வைக்கப்பட்டுள்ள அடர் செந்நிறம் கொண்ட மாதுளை காட்டப்பட்டுள்ளது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
உத்தரகண்ட்: 5,000 பேர் சாவு? - தினமணி என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல் -தினமணி காஷ்மீர் இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் ... - தினமலர் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும்: அத்வானி- தினமலர் இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு அதிக விசா கட்டணம் - தினமணி தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா கவலைக்கிடம் - தினகரன் உத்தரகண்ட் வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ. 5 கோடி உதவி- தினமணி அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் ...- தினமலர் இந்தியாவில் பயிற்சி பெறும் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப ... - தினமணி கோப்பையை வென்றது இந்தியா - தினமணி விம்பிள்டன் துவக்கம்: பெடரர் மீண்டும் பட்டம் வெல்வாரா? - தின பூமி 12-வது முறையாக டிஎன்சிஏ தலைவரானார் சீனிவாசன் - தினமணி ஆனந்த் மீண்டும் டிரா - தினமலர் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Required groom for Delhi Iyer girl – M.Sc - age 22 ½ years. Preference Delhi & NCR. For details and horoscope contact : akbamesr@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
Two bedroom flat with two attached bathrooms and one store room available for rent in Allahabad Apartments (Near New Ashok Nagar Metro station). Please contact 9810989541. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.07.2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Viboothi Alankaram
| Vedic Prachar Sansthan |
| |
26.07.2013 | Sahambari Alankaram | ||||
29/06/13 6.30 PM | Delhi Tamil Sangam | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, June 24, 2013
24-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment