12-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 90 | |||||
ஒரு வயது வரை நன்றாகத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்புகளும் குறையும். | |||||
நாளொரு நாலடி – 165 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெரியாரைப் பிழையாமை பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT) எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள்.
பெரியோரால் மதிக்கப் படும் மதிப்பே ஒருவர்க்கு மதிப்பாவதன்றித் தம்மைத்தாமே மதிப்பது மதிப்பன்று. பொருள்: எம்மை அறிந்திலிர்எம்போல்வார் இல் என்று தம்மைத்தாம் கொள்வதுகோள் அன்று - 'எமது தகுதியை நீவிர்அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார்பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமேபெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது;தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர்பெரியராக் கொள்வது கோள்-தம்மைஅருமையுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர்பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலேபெருமையாகும். Explanation (G. U. POPE): Self-praise is no commendation. " You know not all our worth, for equals have we none:" when self thus estimates itself, this is not 'Esteem!' When perfect men, proficients in virtue, regard any as dear, and esteem them as great, this is 'esteem!'. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தட்ரார்த் அகாக்கஸ் (Tadrart Acacus) மேற்கு லிபியாவில் உள்ள பாலைவனப் பகுதியாகும். இது சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லையும் அண்மையிலேயே இருக்கின்றது. தட்ரார்த் என்பது உள்ளூர் மொழியில் மலை என்னும் பொருளுடையது. இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டைச்சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற விலங்குகளுடன் மனிதர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இசை, நடனம் முதலிய அன்றாட நிகழ்வுகள் தொடர்பில் மனிதர்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளனர். . | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அத்வானி ராஜிநாமா வாபஸ்: மோடி நியமனத்தில் மாற்றமில்லை - தினமணி சுரங்கப் பாதையில் திடீரென நின்ற தில்லி மெட்ரோ ரயில் - தினமணி சுக்லா மரணம்: ஜனாதிபதி இரங்கல் - தினமலர் 127 வயது மூதாட்டி மரணம் - புதைக்க நல்ல நாள் பார்க்கும் குடும்பம் - வெப்துனியா ஊழலில் காங்., - எம்.பி., "மாஜி' மந்திரி கைகோர்ப்பு: நிலக்கரி சுரங்க ... - யாஹூ! இலங்கை இராணுவத்திற்கு சீனாவில் பயிற்சி; பீஜின் போஸ்ட் ... – யாழ் போலி உரம் தயாரித்து விற்ற 5 பேர் கைது கர்நாடகாவில் 456 டன் ...- தினமலர் ரூபாயின் மதிப்பில் தொடரும் சரிவு: உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை- தினமணி முதல் சிஆர்பிஎஃப் பெண் கமாண்டோ படை தொடக்கம் - தினமணி 5-வது முறையாக சீன வீரர்கள் விண்வெளிப் பயணம் - தினமணி பி.இ., எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு - தினமணி தரவரிசையில் நடால் பின்னடைவு - தினகரன் ஜடேஜா அபாரப் பந்து வீச்சு! மே.இ.தீவுகள் 233/9 (50)வெப்துனியா | |||||
வீடு வாடகைக்கு | |||||
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55. | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact 9899379243. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
14/06/13 | Sri Ram Mandir | Shukla Shashti 9.00 a.m. Ekavara Rudra Japam Abhishekam Alankaram Archanai | Sri Ram Mandir |
| |
15/06/13 | Delhi Tamil Sangam | 2.00 PM & 6.00 PM தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam | 9811937936 9810271676 | |
16/06/13 | |||||
23/06/13 10.00 AM | தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம் | ||||
29/06/13 6.30 PM | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | ||||
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, June 12, 2013
12-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment